PT6019 இயங்கலைக்குழல் மிகைப்பி (Travelling Wave Tube amplifier)

அம்சங்கள்
*D-பட்டை இயங்கலைக்குழல் மிகைப்பி
*வலைவாய் துடிப்பூட்டல் (grid pulsing)
*நீர்மக்குளிர்விப்பு
*ஒருங்கிணைந்த வரிச்சுருள் குவிப்பு (integral solenoid focussing) மூலமாக குறைந்த நிறையை அடையலாம்
*குழலுடன் பொறுத்தப்பட்ட மின்னணுகள் இறைப்பி (ionic pump) வெற்றிடத்தை கண்காணித்து இயங்கலைக்குழலின் நீண்ட ஆயுள் மற்றும் நம்பகத்தை உறுதிசெய்யும்
*உச்ச மின்திறன் (peak power)வழக்கமாக 150W (200Wஉம் அடையலாம்), பணிசுழற்சி (duty cycle) 3.6% மற்றும் குறைந்த மிகைப்பு 46dB
*1200MHz - 1415MHz அலைவெண் பட்டையில் இயங்கும்
*வானலை உள்ளீடு N-வகை ஓரச்சுவடம் மூலமாக
*வானலை வெளியீடு WR-650 ரக அலையடை வழியாக

பொறிமுறை திட்டவரை

மின்னியல் விவரக்கூற்று (இயல்பு)
*எதிர்மின்வாய் மின்னழுத்தம் (உடல் சார்ந்த): 40KV
*ஏற்புவாய் தாழ்வு (உடல் சார்ந்த): 8KV
*எதிர்மின்வாய் மின்னோட்டம்: 14.0A
*இடைமறிப்பு மின்னோட்டம்: 0.3A (பெருமம்)
*பணிசுழற்சி: 5.0% (பெருமம்)
*வெந்தி மின்னழுத்தம்: 28.0V ஒருதிசை
*வெந்தி மின்னோட்டம்: 9.3A
*எதிர்மின்வாய் வெம்மை நேரம்: 15 நிமிடம்
*வலைவாய் சாருகை: -750V (எதிர்மின்வாய் சார்ந்த)
*வலைவாய் முன்னியக்கம்: 1250V
*வலைவாய் மின்னோட்டம்: 16mA
*வலைவாய் மின்தேக்கம்: 60pF
*அலைவெண் பட்டை: 1200MHz - 1415MHz (ஒரு சமனியின் (equalizer) உதவியுடன் மாறா வானலை இயக்கமாக அமையலாம் அக்கது ஒவ்வொரு அலைவெண்ணிற்காக ஆளியக்கமாக உகப்புப்படுத்தப்பட்ட (manually optimized) வானலை இயக்கமாக அமையலாம்)
*வானலை இயக்க மின்திறன்: 36.0dBm (பெருமம்)
*வரிச்சுருள் மின்னோட்டம்: 14.0A
*வரிச்சுருள் மின்னழுத்தம்: 100.0V (பெருமம்)
*உச்ச வெளியீடு மின்திறன்: 140KW (சிறுமம்) (சில இயக்கச்சூழல்களில் 200KW எட்டலாம்)
*மின்னணுக்கள் இறப்பி மின்னழுத்தம்: 3.5KV
*குளிர்வி: தாதகற்றப்பட்ட நீர் (அல்லது 50-50 இருக்கொள்ளிய இருச்சாராயம்/ethylene glycol, நீர்)
*தாதக்கற்றப்பட்ட நீர் குளிர்வி பாய்வீதம்: 11 லிட்டர்/நிமிடம்
*குளிர்வி அழுத்த வீழ்ச்சி 11லிட்டர்/நிமிடம் சூழலில்: 345 KPa
*குளிர்வி உள்வழி வெப்பம்: 2 - 60C (தாதகற்றப்பட்ட நீர்); -25 - 60C (இருச்சாரய நீர் கலவை)
*பீச்சி குளிர்வு: காற்று 2800 லிட்டர்/நிமிடம் பாய்வீதத்தில்
*அலையடை அழுத்தமாக்கம்: 103.5KPa
*நிறை: 109 கிலோ
*குளிர்வி இணைப்புகள்: Wiggins EC 255 D8 (தன்னடைப்பு)
*மின்னியல் இணைப்பு: மாட்டி (socket) அல்லது பறக்கும் இழுதுகள் (flying leads)
*வானலை அலையடை வெளியீடு: WR-650
*வானலை உள்ளீடு இணைப்பி: N-வகை ஓரச்சு (மாற்றியமைக்கலாம்)
*மேற்பொருத்தல்: எந்த அமைநிலையிலும்
*வெற்றிட மின்னணுகள் இறைப்பி (vac-ion pump) இணைப்பு: UG931/U(MHV)உடன் இனச்சேரும்
*ஆயுள்: 2000 மணிநேரம் குறைந்தபடி; ஆயுள் முடிவு வரையறை: உச்ச மின்திறன் 40KWக்குள் சரிவு