டெக்ஸஸ் கருவிகளின் (Texas Instruments) - www.ti.com

OPA694 அகலப்பட்டை தாழ்த் திறன் மின்னோட்டப் பின்னூட்டு செயல்படு மிகைப்பி (Wideband, Low-Power, Current Feedback Operational Amplifier)

அம்சங்கள்
*ஒரும மிகைப்பு நிலைப்பு பட்டையகலம் (Unity Gain Stable Bandwidth - 1.5GHz.
*2V/V உயர் மிகைப்பு பட்டையகலம் (High Gain Bandwidth) : 690MHz
*தாழ்ந்த வழங்கல் மின்னோட்டம்: 5.8mA
*உயர்ந்தத் திருப்பு வீதம் (slew rate) : 1700V/μsec
*உயர்ந்த முழுத்திறன் பட்டையகலம் : 675MHz
*தாழ்ந்த வேறுப்பாடு மிகைப்பு/கட்டம் : 0.03%/0.015°
*ஈயமற்ற மற்றும் பசுமையான SOT23-5 பொதியம்
பயனகங்கள்
*அகலப்பட்டை காணொளி தடவோட்டி (Wideband Video Line Driver)
*அணி நிலைமாற்றி இடையகம் (Matrix Switch Driver)
*வேறுப்பாடு பெறுவி (Differential Receiver)
*எண்மைப்பி ஓட்டி (ADC Driver)
*மின்கல இயக்கக் கருவிகள்
*OPA558இன் மேம்பட்ட மாற்றம்.

விவரம்
OPA694 என்பது உயர் திருப்புவீதம் மற்றும் தாழ்ந்த வேறுப்பாடு மிகைப்பு/கட்டப் பிழைகள் ஆகியவற்றை அம்சம் கொண்டுள்ள ஒரு மிகுவகலப்பட்டை, தாழ்த் திறன் மின்னோட்டப் பின்னூட்டு செயல்பாடு மிகைப்பு. ஒரு மேம்பட்ட வெளியீடு கூறு (output stage) < 1.5V வெளியீடு மின்னழுத்த இடைவெளியுடன் (output voltage headroom) ±80mA வெளியீடு ஓட்டத்தை அளிக்கிறது. > 500MHz பட்டையகலத்துடன் தாழ்ந்த வழங்கல் மின்னோட்டம் உயரடர் திசைவிகளின் (high-density routers) வேட்புகளைப் பூர்த்தி செய்கிறது. மின்னோட்டப் பின்னூட்டு மிகைப்பியாக உள்ளதால், OPA694 மிக அதிக மிகைப்புகள் வரை தன் பட்டையகலத்தைப் பராமரிக்கிறது - 10 மிகைப்பிலும், OPA694 200MHz பட்டையகலத்தை அளிக்கிறது.

வானலைப் பயனகங்கள் ஐ ஒரு தாழ்த்த் திறன் பரப்பொலியலை முன்மிகைப்பியாக (SAW Pre-amplifier) பயன்படுத்தலாம். இதர வழ்க்கமான வானலை மிகைப்பிகளை விட மிகவும் குறைந்த அமைதிய மின்திறன்களில் 70MHz வரையிலான மிகவும் உயர்ந்த மூன்றாம் வரிசை வெட்டு (third order intercept) அளிக்கப்படுகிறது.
OPA694 தொழில் செந்தரமான SO-8 மற்றும் SOT23-5 பொதியங்களில் கிடைக்கிறது.

அறுதிப் பெரும செயல்வரம்புகள் (குறிப்பு 1)
மின்வழங்கல்......±6.5VDC
துவக்க மின் திறன் விரயம்......வெம்மைச் சிறப்பியல்புகளைக் காண்க
வேறுப்பாடு உள்ளீடு மின்னழுத்தம்......±1.2V
உள்ளீடு மின்னழுத்த நெடுக்கம்......±VS
வைப்பு வெப்ப நெடுக்கம்: D, DBV......−65°Cஇலிருந்து +125°C
இழுது வெப்பம் (சூட்டினைப்பு, 10 நொடி)......+300°C
சந்தி வெப்பம் (TJ)......+150°C
நிலைமின்னிறக்கச் செயல்வரம்பு:
  மனித உடல் மாதிரி (Human Body Model - HBM) ......1500V
  மின்னூட்டுச் சாதன மாதிரி (Charge Device Model - CDM) ......1000V
  இயந்திர மாதிரி (Machine Model - MM) ......100V

(1)அறுதிப் பெரும செயல்வரம்புகளுக்குப் புறமான வளைப்புகள் சாதனத்தில் நிரந்திர சேதத்தை ஏற்படுத்தும்.இவை வலைப்புச் செயல்வரம்புகள் மட்டும் தான். இவை அல்லது பரிந்துரை இயக்கச் சூழல்களுக்குப் புறமாக செயற்கூறு இயக்கம் உட்கிடையவில்லை. நீண்ட நேரங்களில் அறுதிப் பெரும செயல்வரம்புச் சூழல்களுக்கு உட்படுத்துதல் சாதனத்தின் நம்பகத்தைப் பாதிக்கும். மாறாகக் குறிப்பிடவில்லையெனில், அனைத்து மின்னழுத்தங்கள் நில முனையத்தைச் சார்ந்துள்ளது.
இந்த ஒருங்கிணைச்சுற்று நிலைமின்னிறக்கத்தால் (ESD) சேதமடையலாம். டெக்ஸஸ் கருவிகள் அனைத்து ஒருங்கினைச்சுற்றுக்களும் முன்னெச்சரிக்கைகளுடன் கையாளப்படுமாறு பரிந்துரைக்கிறது. தகுந்த கையாளல் மற்றும் நிறுவல் செய்முறைகளைக் கைப்பிடிக்கத் தவறுதல் சேதத்தில் நேரிடலாம்.

நிலைமின்னிறக்கப் பாதிப்பு என்பது இலேசான செயல்வலிமை சீர்க்குலைவிலிருந்து ஒட்டுமொத்த சாதனத் தோல்வி வரை தோன்றலாம். துல்லிய ஒருங்கிணைச் சுற்றுக்களில் சிறு பண்பளவு மாற்றங்கள் சாதனத்தை வெளியிடப்பட்ட விவரக்கூற்றுகளைப் பூர்த்தி செய்யாதவாறு ஆக்கக்கூடுவதால் இவை இச்செதங்களுக்கு மேலும் பாதிக்கப்ப்படும்படி அமையலாம்.

பொதியம்/உத்தரவிடல் தகவல் (1)
தயாரிப்பு பொதியம்-முள்கள் பொதிய அடையாளக்குறி குறிப்பிடப்பட்ட வெப்ப நெடுக்கம் பொதியக் குறியிடல் உத்தரவிடல் எண் ஊர்தி, ஊடகம், எண்ணிக்கை
OPA694 SO-8 D −40°C to +85°C OPA694 OPA694ID கிராதிகள், 100
OPA694IDR நாடாச்சுருள், 2500
OPA694 SOT23-5 DBV −40°C to +85°C BIA OPA694IDBVT நாடாச்சுருள், 250
OPA694IDR நாடாச்சுருள், 3000
(1)தற்போதயப் பொதிய மற்றும் உத்தரவிடல் தகவலுக்கு இவ்வானத்திற்கு இறுதியில் உள்ள பொதிய விழைவு பிற்சேர்க்கையைக் காண்க அல்லது டெக்ஸஸ் கருவிகள் இணையதளம் www.ti.com என்பதைக் காண்க.


மின்னியல் சிறப்பியல்புகள் : VS = +1.8Vஇலிருந்து +5.5V
பட்டையெழுத்து வரம்புகள் TA = –40°C to +125°C சுற்றுப்புற வெப்ப நெடுக்கத்தில் விவரக்கூற்றிப்பட்டுள்ளன.
மாறாகக் குறிப்பிடப்படவில்லைஎனில், RF = 402Ω, RL = 100Ω, மற்றும் G = +2V/V ஆகியவை பொறுந்தும்.
பண்பளவு சோதனைச் சூழல்கள் OPA694ID, IDBV அலகு சிறுமம்/பெருமம் சோதனை மட்டம் (3)
வழக்கம் வெப்பம் சார்ந்த சிறுமம்/பெருமம்
+25°C +25°C(1) 0°C இலிருந்து 70°C(2) -40°C இலிருந்து +85°C(2)
மாறுதிசை செயல்வலிமை
குறுங்குறிகை பட்டையகலம் G = +1, VO = 0.5VPP, RF = 430Ω 1500       MHz வழக்கம் C
G = +2, VO = 0.5VPP, RF = 402Ω 690 350 340 330 MHz சிறுமம் B
G = +5, VO = 0.5VPP, RF = 318Ω 250 200 180 160 MHz சிறுமம் B
G = +10, VO = 0.5VPP, RF = 178Ω 200 150 130 120 MHz சிறுமம் B
0.1dB மிகைப்பு தட்டைமைக்கான (Gain Flatness) பட்டையகலம் G = +1, VO = 0.5VPP, RF = 430Ω 90       MHz வழக்கம் C
+1 மிகைப்பில் உச்சப்படுதல் (Peaking) VO ≤ 0.2VPP, RF = 430Ω 2       dB வழக்கம் C
பெருங்குறிகை பட்டையகலம் G = +2, VO = 2VPP 675       MHz வழக்கம் C
திருப்பு வீதம் (slew rate) G = +2, 2V படி 1700 1300 1275 1250 V/μs சிறுமம் B
எழு மற்றும் விழு நேரம் (slew rate) G = +2, VO = 0.2V படி 0.8       ns வழக்கம் C
0.01%க்கு நிலையாகு நேரம் (settling time) G = +2, VO = 2V படி 20       ns வழக்கம் C
0.1%க்கு நிலையாகு நேரம் (settling time) G = +2, VO = 2V படி 13       ns வழக்கம் C
இசைய உருக்குலைவு (harmonic distorsion) G = +2, f = 5MHz, VO = 2VPP              
இரண்டாம் இசையம் (second harmonic) RL = 100Ω −68 −63 −62 −61 dBc பெருமம் B
RL ≥ 500Ω −92 −87 −85 −83 dBc பெருமம் B
மூன்றாம் இசையம் (third harmonic) RL = 100Ω −72 −69 −67 −66 dBc பெருமம் B
RL ≥ 500Ω −93 −88 −86 −84 dBc பெருமம் B
உள்ளீடு மின்னழுத்த இரைச்சல் அடர்வு (Input Voltage Noise Density) f > 1MHz 2.1 2.4 2.8 3.0 nV/√Hz பெருமம் B
புரட்டும் உள்ளீடு மின்னோட்ட இரைச்சல் அடர்வு (Inverting Input Current Noise Density) f > 1MHz 22 24 26 28 pA/√Hz பெருமம் B
புரட்டா உள்ளீடு மின்னோட்ட இரைச்சல் அடர்வு (Non-Inverting Input Current Noise Density) f > 1MHz 24 26 28 30 pA/√Hz பெருமம் B
NTSC வேறுப்பாடு மிகைப்பு VO = 1.4VPP, RL = 150Ω 0.03       % வழக்கம் C
VO = 1.4VPP, RL = 37.5Ω 0.05       % வழக்கம் C
NTSC வேறுப்பாடு கட்டம் G = +2, VO = 1.4VPP, RL = 150Ω 0.015       ° வழக்கம் C
VO = 1.4VPP, RL = 37.5Ω 0.16       ° வழக்கம் C
ஒருதிசை செயல்வலிமை
திறந்த வளைய குறுக்குமின்மறுப்பு (Open-loop Transimpedance) VO = 0V, RL = 100Ω 145 90 65 60 சிறுமம் A
உள்ளீடு பெயர்ச்சி மின்னழுத்தம் (Input Offset Voltage) VCM = 0V ±0.5 ±3.0 ±3.7 ±4.1 mV பெருமம் A
சராசரி உள்ளீடு பெயர்ச்சி மின்னழுத்த நகர்வு (Average Input Offset Voltage Drift) VCM = 0V     12 15 μV/°C பெருமம் B
புரட்டா உள்ளீடு சாருகை மின்னோட்டம் (Non-Inverting Input Bias Current) VCM = 0V ±5 ±20 ±26 ±31 μA பெருமம் A
சராசரி உள்ளீடு சாருகை மின்னோட்ட நகர்வு (Average Input Bias Current Drift) VCM = 0V     ±100 ±150 nA/°C பெருமம் B
புரட்டும் உள்ளீடு சாருகை மின்னோட்டம் (Inverting Input Bias Current) VCM = 0V ±2 ±18 ±26 ±38 μA பெருமம் A
சராசரி உள்ளீடு பெயர்ச்சி மின்னோட்ட நகர்வு (Average Input Offset Current Drift) VCM = 0V     ±150 ±200 nA/°C பெருமம் B
உள்ளீடு
பொதுப்பாங்கு உள்ளீடு மின்னழுத்தம் (5) (CMIR) (Common Mode Input Voltage)   ±2.5 ±2.3 ±2.2 ±2.1 V சிறுமம் A
பொதுப்பாங்கு மறுத்தொழிப்பு விகிதம் (CMRR) VCM = 0V 60 55 53 51 dB சிறுமம் A
புரட்டா உள்ளீடு மின்மறுப்பு (CMRR)   280 || 1.2       kΩ || pF வழக்கம் C
புரட்டும் உள்ளீடு மின்மறுப்பு (CMRR) திறந்த வளையம் 30       Ω || pF வழக்கம் C
வெளியீடு
மின்னழுத்த வெளியீடு மின்னழுத்தம் சுமையில்நிலை ±4 ±3.8 ±3.7 ±3.6 V சிறுமம் A
RL = 100Ω ±3.4 ±3.1 ±3.1 ±3.0 V சிறுமம் A
வெளியீடு மின்னோட்டம் VO = 0V ±80 ±60 ±58 ±50 mA சிறுமம் A
குறுக்குச்சுற்று வெளியீடு மின்னோட்டம் VO = 0V ±200       mA வழக்கம் C
மூடு வளைய வெளியீடு மின்மறுப்பு G = +2, f =100kHz 0.02       Ω வழக்கம் C
மின்வழங்கல்
குறிப்பிடப்பட்ட இயக்க மின்னழுத்தம்   ±5       V வழக்கம் C
பெரும இயக்க மின்னழுத்த நெடுக்கம்     6.3 6.3 6.3 V பெருமம் A
சிறும இயக்க மின்னழுத்த நெடுக்கம்     ±3.5 ±3.5 ±3.5 V பெருமம் B
பெரும அமைதிய மின்னோட்டம் VS = ±5V 5.8 6.0 6.2 6.3 mA பெருமம் A
சிறும அமைதிய மின்னோட்டம் VS = ±5V 5.8 5.6 5.3 5.0 mA சிறுமம் A
மின்வழங்கல் மறுத்தொழிப்பு விகிதம் (PSRR) உள்ளீடு மேற்கோளிட்ட 58 54 52 50 dB வழக்கம் A
வெம்மைச் சிறப்பியல்புகள்
ID, IDBV விவரக்கூற்றுகள்   −40 இலிருந்து +85       °C சிறுமம் C
வெம்மைத் தடுப்பு θJA சந்தியிலிருந்து சுற்றுப்புறம்              
    D SO-8   125       °C/W வழக்கம் C
    DBV SOT-23   150       °C/W வழக்கம் C
(1)+25°C விவரக்கூற்றுகளுக்கு சந்தி வெப்பம் = சுற்றுப்புற வெப்பம்.
(2)குறை வெப்ப வரம்புகளில், சந்தி வெப்பம் = சுற்றுப்புற வெப்பம்; மிகு வெப்ப விவரக்கூற்றுகளுக்கு உயர் வெப்ப வரம்பில் சந்தி வெப்பம் = சுற்றுப்புற வெப்பம் + 9°C.
(3)(A)சோதனை மட்டங்கள் : +25°Cஇல் முழுமையாக சோதனையிடப்பட்டது. சிறப்பியல்புவர்ணனை மற்றும் பாவனை மூலம் மிகு வெப்ப வரம்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன; (B)சிறப்பியல்புவர்ணனை மற்றும் பாவனை மூலம் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன; (C)வழக்கமான மதிப்பு தகவலுக்கு மட்டும்.
(4)கணுவிற்கு வெளியே பாயும் மின்னோட்டம் நேர்மமாகக் கருதப்படுகிறது. VCM என்பது பொதுப்பாங்கு மின்னழுத்தம்.
(5)குறிப்பிடப்பட்ட CMRRக்குக் கீழ் < 3dB, CMIR வரம்புகளில் சோதனையிடப்பட்டது.
VS = ±5Vஇல் வழக்கமான சிறப்பியல்புகள்
மாறாகக் குறிப்பிடப்படவில்லைஎனில், RF = 402Ω, RL = 100Ω, மற்றும் G = +2V/V ஆகியவை பொறுந்தும்.










பயனகத் தகவல்
ஒரு அகலப்பட்டை, தாழ்த் திறன் மின்னோட்டப் பின்னூட்டுச் செயல்பாடு மிகைப்பிக்கு, OPA694 சிறப்பான மாறுதிசை செயல்வலிமையை அளிக்கிறது. 5.8mA அமைதிய மின்னோட்டம் மட்டும் தேவைப்பட்டு, OPA694 690MHz பட்டையகலம், +2 மிகைப்பு மற்றும் 1700V/μs திருப்பு வீதத்தை அளிக்கிறது. ஒரு மேம்படுத்தப்பட்ட வெளியீடு கூறு < 1.5V வெளியீடு மின்னழுத்த இடைவெளியுடன் ±80mA வெளியீடு ஓட்டத்தை அளிக்கிறது. இந்த தாழ்த் திறன் அகலப் பட்டையகள சேர்மானம் உயர்ப் பிரிதிறன் காணொளிப் பயனகங்களுக்கு சாதகமாகச் அமைகின்றன.

படம் மின்னியல் சிறப்பியல்புகள் அட்டவனைக மற்றும் வழக்கமான சிறப்பியல்புகள் வரைவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒருதிசை-பிணைந்த +2 மிகைப்புள்ள இரட்டை மின் வழங்கல் மின்சுற்று உள்ளமைவைக் காண்பிக்கிறது. சோதனை நோக்கங்களுக்காக, உள்ளீடு மின்மறுப்பு 50Ω ஆக ஒரு நிலத்துடன் இணையும் மின்தடையம் மூலம் நிறுவமைக்கப்படுகிறது மற்றும் வெளியீடு மின்மறுப்பு 50Ω ஆக ஒரு தொடர் மின் தடையம் மூலம் நிறுவமைக்கப்படுகிறது. மின்னியல் சிறப்பியல்புகளில் தெரிவிக்கப்பட்ட மின்னழுத்த வீச்சுகள் நேரடியாக உள்ளீடு மற்றும் வெளியீடு முல்களில் எடுக்கப்பட்டவை, மேலும் சுமை மின்திறன்கள் ஒரு பொறுத்தமிடப்பட்ட 50Ω சுமையில் வரையறுக்கப்பட்டுள்ளன. படம் 1 மின்சுற்றில் மொத்த செல்லத்தக்கதான சுமை 100Ω || 804Ω = 89Ω ஆகும். ஒரு விருப்பத்தக்க உறுப்பு படம் இல் சேர்க்கப்பட்டுள்ளது. நிலத்துடன் இணையும் வழக்கமான மின்வழங்கல் பிணைநீக்கு மின்தேக்கிகளுடன் (power supply decoupling capacitors) இரண்டு மின்வழங்கல் முள்களுக்கு இடையே ஒரு 0.1μF மின்தேக்கி சேர்க்கப்பட்டுள்ளது. செய்முறை சுற்றுப்பலகை மனையமைவுகளில் இந்த விருப்பத்தக்க மின்தேக்கி இரண்டாம் இசைய உருக்குலைவை (2nd harmonic distorsion) வழக்கமாக 3dBஇலிருந்து 6dB மேம்படுத்தும்.



படம் 2 புரட்டும் வழக்கமான சிறப்பியல்புகள் வரைவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒருதிசை பிணைந்த -2V/V மிகைப்புள்ள இரட்டை மின்வழங்கல் மின்சுற்றைக் காண்பிக்கிறது. புரட்டும் செயற்பாடு பல செயல்வலிமை நன்மைகளை அளிக்கிறது. உள்ளீடு கூற்றில் போதுப்பாங்குக் குறிகை இல்லாததால் திருப்பு வீதம் இன்னும் அதிகமாகும் மற்றும் உருக்குலைவு செயல்வலிமை சற்று மேம்படும். ஒரு கூடுதலான மின்தடையம், RT உள்ளீடு மின்மறுப்பை 50Ω ஆக நிறுவமைக்க சேர்க்கப்பட்டுள்ளது. RT மற்றும் RG ஆகியவற்றின் இணைநிலை சேர்ப்பு (parallel combination) உள்ளீடு மின்மறுப்பை நிறுவமைக்கிறது. படம் 1 மற்றும் படம் 2 ஆகியவற்றில் காண்பிக்கப்பட்ட புரட்டும் மற்றும் புரட்டா பயனகங்கள் இரண்டும் RF பின்னூட்டு மின்தடையத்தை உகப்புப்படுத்துவதில் பலன் பெறுகின்றன. பட்டையகலத்தை உகப்புப்படுத்துவதற்கு மின்தடைய மதிப்புகளை தேர்ந்தெடுத்தல் விளக்கத்தைக் காண்க. வழக்கமான வடிவமைப்பு வரிசைமுறை முதலில் சிறந்தப் பட்டையகலத்திற்கு RFஐ தேர்ந்தெடுத்தல், பிறகு மிகைப்பிற்கு RGஐ நிறுவமைத்தல் ஆகும். மிகைப்பு அதிகரிக்க, ஐ அடையும், இங்கு RT நீக்கப்பட்டு, மிகைப்பு RGஆல் மட்டும் நிறுவமைக்கப்படும் ஒரு புள்ளி எட்டும். RF உள்ளீடு போறுத்தத்தை நிறுவமைத்ததும், மிகைப்பை அதிகரிக்க, RT வெறுமென உயர்த்தப்படலாம். எனினும், –10 புரட்டும் மிகைப்பு அலைவெண் மறுமொழி புரட்டும் வழக்கமான சிறப்பியல்புகள் வரைவுகளில் கான்பிக்கப்பட்டுது போல், இது சாதிக்கத்தக்கப் பட்டையகலத்தை விரைவாக குறைத்துவிடும். > 10V/V மிகைப்புகளுக்கு, புரட்டா செயற்பாடு இன்னும் அகலப் பட்டையகலத்தைப் பராமரிப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.



எண்மைப்பி ஓட்டி (ADC Driver)
பெரும்பாலும் நவீன உயர் செயல்வலிமை எண்மைப்பிகள் டெக்ஸஸ் கருவிகள் ADS522x போன்ற ஒரு தாழ்த்திறன் குறைந்த உருக்குலைவு ஓட்டியைதத் தேவைப்படுகின்றன. OPA694 குறைந்த மின்னழுத்த இரைச்சல் (2.1nV/√Hz) குறைந்த இசைய உருக்குலைவுடன் (harmonic distorsion) சேர்க்கிறது. படம் 3 ஒரு அகலப்பட்டை மாறுதிசைப் பிணைந்த 12-துணுக்கு என்மைப்பியின் உதாரணத்தைக் காண்பிக்கிறது.

படம் 3இல் இரண்டு OPA694கள் ADS5220க்கு ஒரு வேறுபாடு ஓட்டியாக செயல்படுகின்றன. இரண்டு OPA694களும் > 250MHz பட்டையகலமும் வெளியீடு 2VPP உச்ச-உச்ச வீச்சுடன் 5V/V வேறுபாட்டு மிகைப்பும் அளிக்கின்றன. ஒரு இரண்டாம் வரிசை மின்தடைய-மின்தூண்டி-மின்தேக்கி வடிப்பி (RLC filter) மிகைப்பியிலிருந்து இரைச்சலைக் கட்டுப்படுத்தவும் உயர் அலைவெண் இசைய உருக்குளைவிற்கு கொஞ்சம் மேளிப்பையும் ஏற்படுத்தவும் பயன்படுகிறது



அகலப் பட்டை கூட்டல் மிகைப்பி (Wideband Summing Amplifier)
ஒரு மின்னோட்டப் பின்னூட்டு மிகைப்பியின் குறிகைப் பட்டையகலம் இரைச்சல் மிகைப்பிற்கு (இரைச்சல் மிகைப்பு வழக்கமாக புரட்டா மிகைப்பிற்கு நிகரான மதிப்புக்கொண்டுள்ளது) தன்னிச்சையாக கட்டுப்படுத்த இயல்வதால் அகலப்பட்டை கூட்டல் மிகைப்பிகள் OPA694உடன் செயல்முறைப்படுத்தப் படலாம். படம் 4இல் காண்பிக்கப்பட்ட மின்சுற்று ஒரு புரட்டும் கூட்டல் மிகைப்பியின் உதாரணம் ஆகும். இங்கு மின் தடைய மதிப்புகள் பருமமானப் பட்டையகலம் மற்றும் உள்ளீடு மின் மறுப்பு பொருத்தம் இரண்டையும் பரமாரிக்கும் பொருட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொர்ரு வானலைக் குறிகை ஒரு மூலத்திலிருந்து ஓட்டப்பவதாக எடுகோள் கொள்ளப்பட்டால், இம்மின்சுற்றின் இரைச்சல் மூலம் NG = (1 + 100Ω/(100Ω/5)) = 6 ஆகும். மொத்தப் பின்னூட்டு மின் மறுப்பு (VOஇலிருந்து புரட்டும் பிழை மின்னோட்டம்) RF + (RI • NG) என்கிற கூட்டல் ஆகும். இங்கு, RI என்பது கூட்டல் சந்திப்பிலிருந்து புரட்டும் உள்ளீட்டிற்குள் நோக்கும் மின்மறுப்பு ஆகும். செயல்வலிமையை உகப்புப்படுத்துவதற்கு மின்தடைய மதிப்புகளைத் தேர்வு செய்தல் பகுதியைக் காண்க. தலா உள்ளீட்டிலிருந்து வெளியீட்டிற்கு மிகைப்பைப் பெற, 100Ω பின்னூட்டைப் பயன்படுத்துதல், பின்னூட்டு மின்மறுப்பை அதிகரிக்க, புரட்டும் உள்ளீட்டுடன் தொடரிணைந்த ஒரு கூடுதலான 30Ω மின்தடையத்தைத் தேவைப்படுகிறது. இம்மின்தடையம் வழ்க்கமான உள்ளக RI = 30Ωஉடன் சேர்க்கப்பட்டதும் மொத்தப் பின்னூட்டு மின்மறுப்பு 100Ω + (60Ω • 6) = 460Ω ஆகிறது. இது பெருமமானப் பட்டையகலத்திற்கு தேவையான NG = 6 என்பவற்றைப் பெறுவதற்கு தேவையான மின்தடைய மதிப்பாகும்.



பரப்பொலியலை வடிப்பி இடையகம் (SAW Filter Buffer)
ஒரு வானலைக் கீற்றின் (IF Strip) பொதுவான வேட்பு ஒரு கலப்பியின் (Mixer) வெளியீட்டை பரப்பொலியலை வடிப்பியின் உட்செருகல் இழப்பை (SAW Filter Insertion Loss) ஈடுக்கட்டும் வகையில் போதுமான மிகைப்புடன் இடையகப்படுத்துவது (buffering). படம் 5 பரப்பொலியலை வடிப்பியை ஓட்துவதற்கு இயலக்கூடிய ஒரு முறையைக் காண்பிக்கிறது. இரு தொனி மூன்றாம் வரிசை வெட்டு வரைவுவளைவு (2-Tone, 3rd-Order Intermodulation Intercept) வழக்கமான சிறப்பியல்புகள் வரைவுகளில் காண்பிக்கப்பட்டுள்ளது. –8V/V மின்னழுத்த மிகைப்பு கொண்ட புரட்டும் பாங்கில் இயங்கும் போது இம்மின்சுற்று மிகைப்பு நிறுவமைப்பு மின்தடையத்துடன் 50Ω உள்ளீடு பொறுத்தத்தை (input match) அளிக்கிறது, பெருமமானப் பட்டையகலத்திற்கு (இச்சூழ்நிலையில் 250MHz) பின்னூட்டு உகப்புப்படுத்தப்பட்டுள்ளது (optimized) மற்றும் ஒரு 50Ω வெளியீடு மின்தடையம் வழியாக பரப்பொலியலை வடிப்பியின் உள்ளீட்டில் ஒரு பொறுத்தல் பிணையத்திற்குள் (matching network) ஓட்டுகிறது. பரப்பொலியலை வடிப்பி 12dB உட்செருகல் இழைப்பைத் தந்தால் பரப்பொலியலை வடிப்பியின் விடுபட்டையில் (பரப்பொலியலை வடிப்பியின் வெளியீடு அடுத்த இடையலை மிகைப்பி அல்லது கலப்பியின் உள்ளீடு மின்மறுப்பு ஆகும்) 0dB நிகர மிகைப்பு வழங்கப்படும். இப்பயனகத்தில் OPA694ஐ பயன்படுத்துதல் முதல் கலப்பியை பரப்பொலியலை வடிப்பியின் உள்ளீடு மின்மறுப்பிலிருந்து தனிமைப்படுத்தும் மற்றும் பரப்பொலியலை வடிப்பியின் விடுபட்டையில் மிகவும் குறைந்த இருதொனி மூன்றாம் வரிசை பொய்கை மட்டங்களை (2-Tone, 3rd-Order spurious levels) அளிக்கும்



அகலப்பட்டை ஒரும மிகைப்பு இடையகம் மேம்பட்டத் தட்டைமையுடன் (Wideband Unity Gain Buffer with Improved Flatness)
படம் 1இல் காண்பிக்கப்பட்ட ஒரும மிகைப்பு இடையகம் (unity gain buffer) அலைவெண் மறுமொழியில் 2dBக்கு மேலான உச்சப்படுதலை (peaking) பிரதிபலிக்கிறது. இதனால் +1V/V துடிப்பு மறுமொழி வளைவுகளில் (pulse response curves) மேர்பாய்வு (overshoot) மற்றும் வளையலைவு (ringing) ஏற்படுகிறது. இன்னும் தட்டையான மறுமொழி (flatter response), எனவே மேம்பட்ட நேர்மையை (fidelity) அளிக்கும் நிகரான மின்சுற்று படம் 6இல் தரப்பட்டுள்ளது. இம்மின்சுற்று RGஇலுள்ள போலிய விளைவுகளை (parasitic effects) விலக்கொழித்து உச்சப்படுதலை அகற்றுகிறது. RGஉள் நோக்கும் தோற்ற மின்மறுப்பு (apparent impedance) மிகவும் உயர்வாக உள்ளதால், உள்ளீடு மின்மறுப்பு இன்னமும் RMஆல் நிறுவமைக்கப்படுகிறது. இன்னும் உயர்ந்த மின்மருப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உயர்த்தப்படலாம், ஆனால் உயர்ந்த மதிப்புகள் ஒருதிசை வெளியீடு பெயர்ச்சி மின்னழுத்தத்தை (DC output offset voltage) பாதிக்கலாம். இம்மின்சுற்று இரண்டு சாருகை மின்னோட்டங்களின் வேறுபாடு தர VIஇல் நிலத்திற்கான மின்மறுப்பு (difference in the two input bias currents times the impedance to ground at VI) என்கிற மதிப்பில் கூடுதலான உள்ளீடு பெயர்ச்சி மின்னழுத்தத்தை ஏற்படுத்துகிறது. படம் 7 படம் 1 மற்றும் மேம்பட்ட அணுகுமுறையான படம் 6 ஆகியவற்றில் காண்பிக்கப்பட்ட ஒரும மிகைப்பு இடையகங்களின் அலைவெண் மறுமொழிகளின் ஒப்பிடுதலைக் காண்பிக்கிறது. ஏதேனும் அணுகுமுறை தாழ்த் திறன் > 1.56GHz பட்டையகலத்தை அளிக்கிறது.





வடிவமைப்புப்பாடு கருவிகள் (Design-in Tools)


செய்விளக்க நிலையுறுதிகள் (Demonstration Fixtures)
OPA694 அதன் இரண்டு பொதிய விழைவுகளில் துவக்க மதிப்பீடு (initial evaluation) செய்ய உதவ இரண்டு சுற்றுப்பலகைகள் கிடைக்கின்றன. இவை இரண்டும் உறுப்பற்ற சுற்றுப்பலகைகளாக (unpopulated PCBs) இலவசமாக கிடக்கின்றன மற்றும் ஒரு பயனர் கையேட்டுடன் (user guide) வழங்கப்படுகின்றன. இந்நிலையுறுதிகளின் தகவல் சுருக்கம் கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

தயாரிப்பு பொதியம் உத்தரவிடல் எண் இலக்கியம் எண்
OPA694ID SO-8 DEM-OPA-SO-1B SBOU026
OPA694IDBV SOT23-5 DEM-OPA-SOT-1B SBOU027

செய்விளக்க நிலையுறுதிகள் டெக்ஸாஸ் கருவிகள் இணையதளத்திலிருந்து (www.ti.com) OPA694 தயாரிப்பு கோப்பகத்திலிருந்து வேண்டுகோளிடப்படலாம்.

குறுங்கூறு போல்மங்கள் மற்றும் பயனாக ஆதரவு (Macromodels and Application Support)
ஒப்புமை மின்சுற்றுகள் மற்றும் முறைமைகளை SPICEஉடன் பகுப்பாய்வு செய்யும் போது மின்சுற்று செயல்வலிமையை கணினி பாவனை மிகவும் பயனுள்ளதாகும். இது குறிப்பாக போலிய மின்தேக்கம் மற்றும் மின்தூண்டல் (parasitic capacitance and inductance) ஆகியவற்றால் செயல்வலிமை கடுமையாகப் பாதிக்கப்படும் காணொளி மற்றும் வானலை மின்சுற்றுகளுக்குப் பொறுந்தும். OPA694இன் SPICE போல்மம் www.ti.com இணையதளத்தில் கிடைக்கிறது. இப்போல்மங்கள் பல்வேறு இயக்கச் சூழ்நிலைகளில் குறுங்குறிகை மாறுதிசை மற்றும் திரிநிலை செயல்வலிமையை முன்னறிவிப்பதில் நன்கு பணிபுரிகின்றன. இவை இசைய உருக்குலைவு மற்றும் dG/dφ (மிகைப்பு-கட்டச்) சிறப்பியல்புகளை முன்னறிவிப்பதில் அவ்வளவு நன்கு பணிபுரிவதில்லை. இப்போல்மங்கள் தம் குறுங்குறிகை மாறுதிசை செயல்வலிமையில் (small-signal AC performance) பொதிய வகைகளை வேறுபடுத்த முயல்வதில்லை.

இயக்க ஆலோசனைகள் (Operating Suggestions)


பட்டையகலத்தை உகப்புப்படுத்துவதற்கு மின்தடைய மதிப்புகளை நிறுவமைத்தல் (Setting Resistor Values to Optimize Bandwidth)
ஒரு மின்னோட்டப் பின்னூட்டு செய்மிகைப்பி சரியான வெளியாக மின் தடைய மதிப்புகளுடன் குறிகை மிகைப்பு நிறுவமைப்புகளுக்கு மாறாத பட்டையகலத்தைப் பராமரிக்கும். இது வழக்கமான சிறப்பியல்புகள் வரைவுகளில் காண்பிக்கப்பட்டுள்ளது. குறுங்குறிகை பட்டையகலம் அதிகரிக்கும் மிகைப்பிர்க்கு சற்று தான் குறைக்கிறது. இவ்வளைவுகள் ஒவ்வொரு மிகைப்பு நிறுவமைப்பிற்கும் மின் தடையம் மாறுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. புரட்டும் பக்கத்தில் உள்ள மின்தடைய மதிப்புகள் அலைவெண் மறுமொழி இழப்பீடு உறுப்புகளாக (frequency response compensation elements) கருதப்படலாம். இவைகளின் விகிதங்கள் குறிகை மிகைப்பை நிறுவமைக்கின்றன. படம் 8 குறுங்குறிகை அலைவெண் மறுமொழி பகுப்பாய்வு மின்சுற்றைக் காண்பிக்கிறது.



இம்மின்னோட்டப் பின்னூட்டு செய்மிகைப்பி போல்மத்தின் முக்கிய உறுப்புகள் :

α → புரட்டா உள்ளீட்டிலிருந்து புரட்டும் உள்ளீடு வரையிலான இடையக மிகைப்பு (buffer gain)

RI → இடையக வெளியீடு மின்மறுப்பு (buffer output impedance)

iERR → பின்னூட்டு பிழை மின்னோட்டக் குறிகை (Feedback error current signal)

Z(s) → அலைவெண் சார்ந்த iERRஇலிருந்து VOதிறந்த வளைய குறுக்கு மின்மறுப்பு மிகைப்பு (Feedback error current signal). இடையாக மிகைப்பு வழக்கமாக க்கு அருகாமையில் உள்ளது மற்றும் இயல்பாக குறிகை மிகைப்பு பரிசீலனைகளில் புறக்கணிக்கப்படுகிறது. எனினும், அது ஒரு ஒற்றை செய்மிகைப்பி வேருப்பாட்டு மிகைப்பி உள்ளமைவில் பொதுப்பாங்கு மறுத்தொழிப்பு (CMRR) விகிதத்தை நிறுவமைக்கிறது. α < 1.0 இடையக மிகைப்பு என்பதற்கு, CMRR = –20 × log (1– α) dB ஆகும்.

இடையக வெளியீடு மின்மறுப்பு பட்டையகலக் கட்டுப்பாடு சமன்பாட்டில் ஒரு இக்கட்டான பங்காகும். OPA694இல் RI வழக்கமாக 30Ω ஆகும்.

மின்னழுத்தப் பின்னூட்டு செய்மிகைப்பியில் உள்ள வேறுப்பாடு உள்ளீடு பிழை மின்னழுத்தத்திற்கு மாறாக ஒரு மின்னோட்டப் பின்னூட்டு செய்மிகைப்பி பிழை மின்னோட்டத்தை புரட்டும் கணுவில் உணர்ந்து இதனை வெளியீட்டிற்கு ஒரு உள்ளக அலைவெண் சார்ந்த குறுக்கு மின்மறுப்பு மிகைப்பு வழியாக செலுத்திவிடுகிறது. வழக்கமான சிறப்பியல்புகள் திறந்த வளைய மறுமொழியைக் காண்பிக்கின்றன. இது மின்னழுத்தப் பின்னூட்டு செய்மிகைப்பியில் திறந்த வளைய மின்னழுத்த மிகைப்பு (open loop voltage gain) வளைவிற்கு நிகரானது.

படம் 8க்கான மாற்றுச் சார்பை உருவாக்கினால் :

VO/VI = α(1 + RF/RG)/{1 + [RF + RI(1 + RF/RI)]/Z(S)}

      = αNG/{1 + [RF + RING]/Z(S)}

இங்கு NG = [1 + RF/RG]

இது வளைய மிகைப்பு பகுப்பாய்வு வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் முடிவிலியற்ற திறந்த வளைய மிகைப்பால் ஏற்படும் பிழைகள் பின்ன வகுதியில் காண்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து அலைவெண்களிலும் Z(S) முடிவிலியாக இருந்தால், மேலுள்ள சமன்பாட்டின் வகுதி ஆக எளிமைப்பட்டு கருதியலான விருப்பமான குறிகை மிகைப்பு பெறப்படுகிறது. மேலுள்ள சமன்பாட்டின் வகுதியில் உள்ள பின்னம் அலைவெண் மறுமொழியை நிர்ணயிக்கிறது. கீழுள்ள சமன்பாடு இதனை ஒரு வளைய மிகைப்பு சமன்பாடாக காண்பிக்கிறது.

Z(S)/(RF + RING) = வளைய மிகைப்பு

20 × log(RF + NG × RI) திறந்த வளைய குறுக்கு மின்மறுப்பு வளைவுவரைவின் (Open Loop Transimpedance Plot) மேல் பகுதியில் வரையப்பட்டால் இரண்டிற்கும் உள்ள வேறுப்பாடு ஒரு கொடுத்த அலைவெண்ணில் உள்ள வளைய மிகைப்பு ஆகும். இறுதி விளைவாக, Z(S) மேலுள்ள வளைய மிகைப்பு சமன்பாட்டின் வகுதிக்கு சமமாக சரிவுப்படும் (roll-off towards loop gain equation denominator). இந்தக் கட்டத்தில் வளைய மிகைப்பு 1 ஆக குறைந்து இரண்டு வளைவுகளும் ஒன்றோடுன்று வெட்டும். இந்த சமத்துவப் புள்ளியில் (point of equality) தான் முதலில் தரப்பட்ட சமன்பாடு சரிவுப்பட தொடங்கி மின்னழுத்தப் பின்னூட்டு செய்மிகைப்பியில் இரைச்சல் மிகைப்பு (noise gain) திறந்த வளைய மின்னழுத்த மிகைப்பிற்கு (open-loop voltage gain) சமமான அலைவெண்ணிற்கு நிகரானது. இங்கு வேறுப்பாடு என்னவென்றால் வளைய மிகைப்பு சமன்பாட்டில் உள்ள வகுதியில் உள்ள மொத்த மின்மறுப்பு விருப்பப்பட்டக் குறிகை மிகைப்பு அல்லது இரைச்சல் மிகைப்பிற்கு ஒதுங்கி கட்டுப்படுத்தப்படுகிறது.

OPA694 பெருமமாக தட்டையான மறுமொழியை (maximally flat response) அளிப்பதற்கு ±5V மின்வழங்கல்களில் RF = 402Ω, NG = 2 என்பவற்றிற்கு உள்ளகமாக இழப்பீடு செய்யப்பட்டுள்ளது. வளைய மிகைப்பு சமன்பாட்டின் வகுதியை மதிப்பீடு செய்தால் 462Ω என்கிற உகப்பான இலக்கு பெறப்படுகிறது. குறிகை மிகைப்பு மாறும் போது பின்னூட்டு மின்மறுப்பிற்கு NG × RI உறுப்பின் பங்களிப்பும் மாறும், ஆனால் மொத்தத்தை மாறிலியாக RFஐ சரிக்கட்டல் செய்து வைக்கலாம். கீழுள்ள சமன்பாடு குறிகை மிகைப்பிற்கான உகப்பான RFஐ தருகிறது.

RF = 462Ω - NG.RI

விருப்பப்பட்டக் குறிகை மிகைப்பு அதிகரிக்கும் போது இச்சமன்பாடு ஒரு எதிர்ம RFஐ முன்னறிவிக்கும். இச்சரிக்கட்டலின் ஓரளவு உணர்ச்சிசார்ந்த வரம்பு RGஐ சிறும மதிப்பான 20Ωஇல் வைத்து நிறுவமைக்கலாம். இன்னும் குறைந்த மதிப்புகள் இடியாகக் கூற்றை உள்ளீடு மற்றும் வெளியீடு கூற்றிகளில் சுமையேற்றி, RF மிகவும் குறைந்தால் பட்டையகலத்தை உண்மையில் குறைத்து விடும். படம் 9 ±5V இயக்கத்திற்கான பரிந்துரையான RF எதிர் இரைச்சல் மிகைப்பு NGஐக் காண்பிக்கிறது. காண்பிக்கப்பட்டுள்ள RF எதிர் மிகைப்பு மதிப்புகள் தோராயமாக வழக்கமான சிறப்பியல்புகளை உற்பத்திப்படுத்தப்பட்ட மதிப்புகளுக்குச் சமமானவை. வேறுப்பாடு என்னவென்றால் வழக்கமான சிறப்பியல்புகளில் பயன்படுத்தப்பட்ட உகப்புப்படுத்தப்பட்ட மதிப்புகள் பலகைப் போலியங்களையும் (board parasitics) திருத்துகின்றன மற்றும் எளிமைப் பகுப்பாய்வான வளைய மிகைப்பு சமன்பாட்டில் பரிசீலிக்கப்படவில்லை. படம் 9 மதிப்புகள் பட்டையகலத்தை உகப்புப்படுத்துவதில் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைகின்றன.



புரட்டும் முள்ளிற்கு செல்லும் மொத்த மின்மறுப்பு மூடு வளைய குறிகைப் பட்டையகலத்தை சரிக்கட்டல் செய்ய பயன்படலாம். புரட்டும் உள்ளீடிற்கும் கூட்டல் சந்திக்கும் இடையிலே ஒரு தொடர் மின்தடையத்தை நுழைத்தல் பின்னூட்டு மின்மறுப்பை அதிகரிக்கச் செய்யும் (முதலில் தரப்பட்ட மின்சுற்றின் மாற்றுச் சார்பு அல்லது மிகைப்பு சமன்பாடு/circuit transfer function or gain equation), எனவே பட்டையகலத்தைக் குறைக்கிறது. இந்த பட்டையகலக் கட்டுப்பாடு அணுகுமுறை விவரப் பகுதியில் முதல் தரப்பட்ட புரட்டும் கூட்டல் மின்சுற்றில் பயன்படுகிறது. உள்ளக இடையக வெளியீடு மின்மறுப்பு புரட்டா முனையத்திலிருந்து வெளியே நோக்கும் மூல மின்மறுப்பால் சற்று தாக்கமாகிறது. உயர்ந்த மூல மின்தடையங்கள் RIஐ அதிகரித்து எனவே பட்டையகலத்தை குறைக்க விளைவிக்கின்றன.

வெளியீடு மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் (Output Current and Voltage)
OPA694 வழக்கமாக அகலப்பட்டை மிகைப்பிகளில் காண முடியாத வெளியீடு மின்னழுத்த மற்றும் மின்னோட்டத் திறமைகளை அளிக்கிறது. 25°Cஇல் சுமையில் சூழ்நிலைகளில் (no-load conditions) வெளியீடு மின்னழுத்தமானது ஏதேனும் மின்வழங்கள் கிராதிக்கு (supply rail) 1.2Vக்கு அருகாமையில் வீசுகிறது. +25°C வீச்சு வரம்பு ஏதேனும் கிராதிக்கு 1.2Vஆகும். ஒரு 15Ω சுமைக்குள், ±60mA மின்னோட்டத்திற்கு மேல் வழங்கக்கூடியதாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

மேல்தரப்பட்டுள்ள விவரக்கூற்றுகள் தொழிற்துறையில் அறிந்ததாக இருந்தாலும் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வரம்புகளை தனித்தனியாக எண்ணிக்கொள்க. அநேகப் பயனகங்களில் மின்னோட்டம் தர மின்னழுத்தம் என்கிற பேருக்கு தான் மின்சுற்று இயக்கத்திற்கு பொருத்தமானது. வழக்கமான சிறப்பியல்புகளில் வெளியீடு மின்னழுத்தம் எதிர் மின்னோட்ட வரம்பு வளைவுவரைவை (Output Voltage and Current Limitations plot) மேற்கொளிடவும். X மற்றும் Y அச்சுகள் முறையே சுழிய மின்னழுத்த வெளியீடு மின்னோட்ட வரம்பு (the zero-voltage output current limit) மற்றும் சுழிய மின்னோட்ட வெளியீடு மின்னழுத்த வரம்பு (the zero-current output voltage limit) ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. நான்கு காற்பகுதிகளும் OPA694இன் வெளியீடு ஓட்டல் திறமைகளின் (output drive capabilities) விவரமானப் பார்வையை அளிக்கின்றன. இவ்வளைவு உள்ளக 1W மின்திறன் விரயத்தின் பாதுகாப்பு இயக்கப் பகுதியால் (1W Safe Operating Area) அடக்கப்படுகிறது. மின்தடைய சுமைக்கோடுகளை இவ்வரைவுவளைவு மீது மேலிடப்பட்டால் OPA694 ±2.5Vஐ 25Ωக்குளும் ±3.5Vஐ 50Ωக்குளும் ஓட்ட இயல்வதை அறியவரும். ஒரு 100Ω சுமைக்கோடு மின்னியல் சிறப்பியல்புகளில் காண்பித்தது போல் முழு ±3.4V வெளியீடு வீச்சுத் திறமையை (output swing capability) பிரதிபலிக்கிறது.

வெப்பம் சார்பாக குறைந்தபடியாக விவரக்கூற்றிடப்பட்ட வெளியீடு மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் உச்சக் குளிர் வெப்ப பாதக நிலை பாவனைகளால்நிர்ணயிக்கப்படுகின்றன. குளிர் துவக்கத்தில் (cold startup) மட்டும் தான் வெளியீடு மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் மின்னியல் சிறப்பியல்புகளில் காண்பிக்கப்பட்ட எண்களுக்கு வரைகுறைகின்றன. வெளியீடு திரிதடையங்கள் வெளியீடு மின்திறனை வழங்கும் போது, அவைகளின் சந்தி வெப்பங்கள் அதிகரித்து அவைகளின் குறையும் (வெளியீடு மின்னழுத்த வீச்சு அதிகரிக்கும்) மற்றும் அவைகளின் மின்னோட்ட மிகைப்பு அதிகரிக்கும் (கிடைக்கப்பெறும் வெளியீடு மின்னோட்டம் அதிகரிக்கும்). வெளியீடு கூற்று சந்தி வெப்பங்கள் விவரக்கூற்றிடப்பட்ட சிறும இயக்கச் சூழலை (minimum specified operating ambient) விட அதிகமாக இருப்பதால், நிலை நிலை இயக்கத்தின் போது கிடைக்கப்பெறும் வெளியீடு மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் எப்பொழுதும் மிகுவேப்ப விவரக்கூற்றுகளை (over-temperature specifications) விட அதிகமாக இருக்கும்.

மின்தேக்கச் சுமைகளை ஓட்டுதல் (Driving Capacitive Loads)
செய்மிகைப்பிகளுக்கு மிகவும் கடினமானது எனினும் மிகவும் வழக்கமாக ஏற்படும் சூழ்நிலைகளில் மின்தேக்கச் சுமைகள் ஒன்று. பெரும்பாளுமாக இந்த மின்தேகச் சுமைகள் ஒரு எண்மைப்பிக்கு உள்ளீடாக அமைகின்றன. இது என்மைப்பியின் நேரியல்மையை (linearity) மேம்படுத்துவதர்காக பரிந்துரைக்கப்பட்ட வெளியாக மின்தேக்கத்தை உட்கொள்ளும். ஒரு மின்தேக்கி அதன் வெளியீடு முள்ளில் வைக்கப்படும் போது, OPA694 போன்ற ஒரு அதிவேக செய்மிகைப்பி குறைந்திடப்பட்ட நிலைப்பு (decreased stability) மற்றும் மூடு வளைய மறுமொழி உச்சப்பாடு (closed loop response peaking) ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படும். திறந்த வளைய வெளியீடு மின்தடுப்பை (open loop output resistance) பரிசீலிக்கும் போது இந்த மின்தேக்கச் சுமை கட்டவிடைவெளியை (phase margin) குறைக்கும் ஒரு கூடுதலான முனைமத்தை (pole) அறிமுகப்படுத்துகிறது. இப்பிரச்சனைக்குப் பல வெளியாகத் தீர்வுகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. அலைவெண் மறுமொழி தட்டைமை (frequency response flatness), துடிப்பு மறுமொழி மெய்மை (frequency response fidelity) மற்றும்/அல்லது உருக்குலைவு (distorsion) ஆகியவை முதல்நிலைப் பரிசீலனைகலாக உள்ள போது மின்தேக்கச் சுமையை பின்னூட்டு வளையத்திலிருந்து ஒரு தொடர் தனிமைப்பாடு மின்தடையம் (series isolation resistor) மூலம் தனிமைப்படுத்துவது என்பதே மிகவும் எளிமையான மற்றும் சிறந்த தீர்வு ஆகும். இது வளைய மறுமொழியிலிருந்து முனைமத்தை நீக்குவதில்லை, ஆனால் அதனை நகர்த்தி உயர் அலைவெண்களில்ஒரு சுழிமத்தை சேர்க்கிறது. இந்தக் கூடுதலான சுழிமம் மின்தேக்கச் சுமை முனைமத்தின் கட்டப் பிந்தலை (phase lag) ரத்து செய்து கட்டவிடைவெளியை அதிகரித்து நிலைப்பை மேம்படுத்துகிறது.

வழக்கமான சிறப்பியல்புகள் RS எதிர் மின்தேக்கச் சுமை மற்றும் சுமையில் விளைவாகும் அலைவெண் மறுமொழியைக் காண்பிக்கின்றன. 2pFக்கு மேலான போலிய மின்தேக்கச் சுமைகள் (parasitic capacitive loads) OPA694இன் செயல்வலிமையை சீர்க்கெடும். நீண்ட சுற்றுப்பலகை மின்தடங்கள், பொறுதமுறா வடங்கள் மற்றும் பல சாதனங்களுடன் இணைப்புகள் இம்மதிப்பை எளிமையாக மீற ஏற்படுத்தும். எப்பொழுதும் இவ்விளைவை பரிசீலனை செய்து பரிந்துரைக்கப்பட்ட தொடர் மின்தடையத்தை வெளியீடு முள்ளிற்கு அருகாமையில் சேர்க்கவும் (பலகை மனையமைவு வழிமுறைகளைக் காண்க).

உருக்குலைவு செயல்வலிமை (Distorsion Performance)
OPA694ஆனது 100Ω சுமையில் ±5V மின்வழங்கல்களில் நல்ல உருக்குலைவு செயல்வலிமையை அளிக்கிறது. பொதுவாக அடிப்படையலைவெண் குறிகை (fundamental signal) உயரலைவெண் அல்லது உயர்த்திறன் மட்டங்களை எட்டும் வரை இரண்டாம் இசையும் உருக்குளைவில் ஆதிக்கமேடுத்து மூன்றாம் இசைய உறுப்பு புறக்கணிக்குமளவு உடனிருக்கும். இரண்டாம் இசையத்தில் கவனம் செலுத்தினால் சுமை மின்மறுப்பை உயர்த்தினால் உருக்குலைவு மேம்படும். மொத்த சுமை என்பது பின்னூட்டுப் பிணையம் என்பவற்றை உட்கொள்ளும், புரட்டா உள்ளமைவில் இது RF + RG ஆகும், மாறாக புரட்டும் உள்ளமைவில் இது வெறும் RF ஆகும் . மேலும், (இருகதிர்வு இயக்கத்தின் போது) மின்வழங்கல் முள்களுக்கு இடையே கூடுதலான மின்வழங்கல் பிணைநீக்கு மின்தேக்கிகளை (power-supply decoupling capacitor) சேர்த்தல் இரண்டாம் வரிசை உருக்குலைவை மேம்படுத்தும் (3dB இலிருந்து 6dB).

பெரும்பாலுமான செய்மிகைப்பிகளில் வெளியீடு மின்னழுத்த வீச்சை (output voltage swing) அதிகரித்தல் இசைய உருக்குலைவை (harmonic distorsion) நேரடியாக அதிகரிக்கும். வழக்கமான சிறப்பியல்புகள் இரண்டாம் இசையம் 2xஐ விட சற்று குறைவான வீதத்தில் அதிகரிப்பதை காண்பிக்கிறது, மூன்றாம் இசையம் 3xஐ விட சற்று குறைவான வீதத்தில் அதிகரிக்கிறது. சோதனைத் திறன் இரட்டிப்பாகும் போது, இரண்டாம் இசையம் எதிர்ப்பார்த்த 6-dBஐ விட குறைவாக உயரும்; மூன்றாம் இசையம் எதிர்ப்பார்த்த 12-dBஐ விட குறைவாக உயரும். இது இருதொனி மூன்றாம் வரிசை இடைப் பண்பேற்ற பொய்கை மறுமொழி வளைவுவரைவுகளையும் (2-tone, 3rd-order intermodulation spurious reponse curves) காண்பிக்கிறது. மூன்றாம் வரிசை பொய்கை மட்டங்கள் (3rd-order spurious levels) தாழ்ந்த திறன் மட்டங்களில் மிகவும் தாழ்வாக உள்ளன. அடிப்படையலைவெண் திறன் மிகவும் உயர்ந்த மட்டங்களை எட்டியும் வெளியீடு கூற்று இவற்றை தாழ்வாகவே வைக்கின்றன. வழக்கமான சிறப்பியல்புகளில் காண்பித்தது போல் பொய்கை இடைப் பண்பேற்றத் திறன் பாரம்பரிய வெட்டுப் போல்மத்தில் (traditional intercept model) முன்னறிவித்தது போல் உயர்வதில்லை. அடிப்படையலைவெண் திறன் மட்டம் அதிகரிக்கும் போது இயங்குநேடுக்கம் (dynamic range) கணிசமாக குறைவதில்லை.

இரைச்சல் செயல்வலிமை (Noise Performance)
பொதுவாக அகலப்பட்டை மின்னோட்டப் பின்னூட்டு செய்மிகைப்பிகள் நிகரான மின்னழுத்தப் பின்னூட்டு செய்மிகைப்பிகளை விட உயர்ந்த வெளியீடு இரைச்சலைக் கொணடுள்ளன. OPA694ஆனது உன்னத மின்னூட்ட மற்றும் மின்னழுத்த இரைச்சல் உறுப்புகளின் உன்னத சமநிலையால் தாழ்ந்த வெளியீடு இரைச்சலை அளிக்கிறது. புரட்டும் முனை மின்னூட்ட இரைச்சல் (inverting current noise) (24pA/√Hz) முன்வந்தத் தீர்வுகளை விட கணிசமாக குறைவாக உள்ளது. மேலும் வெளியீடு மின்னழுத்த இரைச்சல் (2.1nV/√Hz) பெரும்பாலுமான இதர ஒரும மிகைப்பு நிலைப்பு அகலப்பட்டை மின்னழுத்த செய்மிகைப்பிகளை (unity-gain stable, wideband, voltage feedback op amps) விட குறைவாக உள்ளது. இந்த தாழ் உள்ளீடு மின்னழுத்த இரைச்சல் உயர்ந்த புரட்டா முனை உள்ளீடு மின்னூட்ட இரைச்சலின் (non-inverting current noise) (22pA/√Hz) விலைக்கு வழங்கப்படுகிறது. புரட்டா முனைக்குப் புறமாக நோக்கும் மாறுதிசை மூல மின்மறுப்பு (AC source impedance looking out of the noninverting node) 100Ωக்குக் குறைவாக உள்ள வரை இந்த மின்னூட்ட இரைச்சல் கணிசமாக வெளியீடு இறைச்சளிற்குப் பங்களிப்பதில்லை. செய்மிகைப்பியின் உள்ளீடு மின்னழுத்த இரைச்சல் மற்றும் இரண்டு மின்னூட்ட மின்னழுத்த இரைச்சல் உறுப்புகள் இரண்டும் சேர்ந்து பல்வேறு இயக்கச் சூழ்நிலைகளிலும் தாழ்ந்த வெளியீடு இரைச்சலை அளிக்கின்றன. படம் 10 அனைத்து இரைச்சல் உறுப்புகளையும் உட்செர்க்கபட்ட இரைச்சல் பகுப்பாய்வு போல்மத்தை (noise analysis model) அளிக்கிறது. இந்தப் போழ்மத்தில் அனைத்து இரைச்சல் உறுப்புகளும் மின்னழுத்த இரைச்சல் அல்லது மின்னூட்ட அடர்வு இரைச்சல் உறுப்புகள் nV/√Hz அல்லது nA/√Hz அலகுகளில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.



மொத்த வெளியீடு கணநிலை இரைச்சல் (total output spot noise) அனைத்து இருபடி வெளியீடு இரைச்சல் மின்னழுத்தப் பங்களிப்பிகளின் கூட்டுத்தொகையின் இருபடி மூலம் என்பதாககணிக்கப்படுகிறது (square root of the sum of all squared output noise voltage contributors). கீழுள்ள சமன்பாடு படம் இல் காண்பித்த உறுப்புகளின் சார்பாக வெளியீடு இரைச்சலின் பொது வடிவத்தைக் காண்பிக்கிறது.

EO = √ { [ENI2 + (IBNRS)2 + 4kTRS]NG2 + (IBIRF)2 + 4kTRFNG }

இக்கோவையை இரைச்சல் மிகைப்பு (Noise Gain NG = (1 + RF/RG)) என்பவற்றுடன் வகுத்தால் புரட்டா முனையில் உள்ள உள்ளீடு மேற்கோளிடப்பட்ட சமவலு இரைச்சல் மின்னழுத்தம் (equivalent input-referred spot noise voltage at the noninverting input)பெறப்படுகிறது.

EN = √ { [ENI2 + (IBNRS)2 + 4kTRS] + (IBIRF/NG)2 + 4kTRF/NG }

மின்சுற்று மற்றும் உறுப்புகளின் மதிப்புகளைக் கொண்டு மேலுள்ள இரண்டு சமன்பாடுகளையும் மதிப்பீடு செய்தல் 11.2nV/√Hz என்கிற மொத்த வெளியீடு கணநேர இரைச்சல் மின்னழுத்தம் (total output spot noise) மற்றும் 5.6nV/√Hz என்கிற மொத்த சமவலு உள்ளீடு கணநேர இரைச்சல் மின்னழுத்தம் (total equivalent input spot noise) ஆகிகயவற்றை அளிக்கிறது. இந்த மொத்த உள்ளீடு மேற்கோளிடப்பட்ட கணநேர இரைச்சல் மின்னழுத்தம் செய்மிகைப்பியின் மின்னழுத்த இரைச்சல் மட்டும் விவரக்கூற்றான 2.1nV/√Hzஐ விட அதிகமானது. இது வெளியீட்டில் சேர்க்கப்பட்ட மின்னூட்ட இரைச்சல் தர பின்னூட்டு மின்தடையம் (current noise times the feedback resistor) என்பவற்றை பிரதிபலிக்கிறது. உயர் மிகைப்பு உள்ளமைவுகளில் (high-gain configurations) பின்னூட்டு மின்தடையம் குறைக்கப்பட்டால் மொத்த உள்ளீடு மேற்கோளிடப்பட்ட மின்னழுத்த இரைச்சல் செய்மிகைப்பியின் பங்களிப்பான 2.1nV/√Hz (EN சமன்பாடு) என்பவற்றை நெருங்கும். உதாரணமாக, RF = 178Ω ஐப் பயன்படுத்தி +10 என்கிற மிகைப்பிற்கு சென்றால் மொத்த உள்ளீடு மேற்கோளிடப்பட்ட இரைச்சல் ஆகும்.

ஒருதிசை துல்லியம் (DC Accuracy)
OPA694 போன்ற மின்னோட்டப் பின்னூட்டு செய்மிகைப்பி உயர் மிகைப்புகளில் பிரமாதமான பட்டையகலம் விரைவான துடிப்பு நிலைநிளையாதல் (fast pulse settling), ஆனால் வெறும் சுமாரான ஒருதிசை துல்லியம் (DC Accuracy) ஆகியவற்றை அளிக்கிறது. மின்னியல் சிறப்பியல்புகள் அதிவேக மின்னழுத்தப் பின்னூட்டு செய்மிகைப்பிகளிற்கு ஒப்பான உள்ளீடு பெயர்ச்சி மின்னழுத்தத்தை (input offset voltage) காண்பிக்கிறது. எனினும், இரண்டு உள்ளீடு சாருகை மின்னோட்டங்களும் (input bias currents) சற்று உயர்வாகவும் பொறுத்தமற்றதாகவும் (unmatched) உள்ளன. சாருகை ரத்தாக்க நுட்பங்கள் (bias-cancellations techniques) மின்னழுத்தப் பின்னூட்டு செய்மிகைப்பிகளில் நன்கு செயல்பட்டாலும் அகலப்பட்டை மின்னோட்டப் பின்னூட்டு செய்மிகைப்பிகளில் வெளியீடு ஒருதிசை பெயர்ச்சியை குறைப்பதில்லை. இரண்டு சாருகை மின்னோட்டங்களும் பருமையிலும் கதிர்விலும் சார்பற்றதாக உள்ளதால் ஒவ்வொரு உள்ளீட்டிளிருந்து புறமாக நோக்கும் மூல மின்மறுப்பை (source impedance looking out of each input) தத்தம் பிழை பங்களிப்பை குறைக்கும் வகையில் பொறுத்தம் செய்தல் நன்கு செயல்படுவதில்லை. பாதக நிலை உள்ளீடு பெயர்ச்சி மின்னழுத்தம் மற்றும் இரண்டு உள்ளீடு சாருகை மின்னோட்டங்கள் ஆகியவற்றுடன் படம் 1 உள்ளமைவை மதிப்பீடு செய்தால் கீழ்ப்படியான பாதகநிலை வெளியீடு பெயர்ச்சி நெடுக்கம் (worst-case output offset range) பெறப்படுகிறது.

± (NG × VOS) ± (IBN × RS/2 × NG) ± (IBI × RF)

= ± (2 × 3mV) ± (20μA × 25Ω × 2) ± (402Ω × 18μA)

= ±6mV + 1mV ± 7.24mV = ±14.24mV

ஒரு துல்லியவளவு வெளியீடு பெயர்ச்சி சூனியம் (fine-scale output offset null) அல்லது ஒருதிசை இயங்குபுள்ளி சரிகட்டல் (DC operating point adjustment சிலமுறை தேவைப்படுகிறது. ஒரு செய்மிகைப்பி மின்சுற்றில் ஒருதிசை பெயர்ச்சி கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு பல்வேறு நுட்பங்கள் உள்ளன . பெரும்பாலுமான எளிமை சரிகட்டல் முறைகள் வெப்பப் பெயர்ச்சியை திருத்துவதில்லை. ஒரு குறைவேக துல்லிய செய்மிகைப்பியை OPA694உடன் சேர்த்து துல்லிய செய்மிகைப்பியின் பிழைக்குறைவும் OPA694இன் பட்டையகலமும் இரண்டும் பெற சாத்தியமாகும். படம் 11 > 150MHz குறிகை பட்டையகலம் (signal bandwidth) கொண்ட, வெப்பம் குறுக்காக (across range of temperture) வெளியீடு பெயர்ச்சியை ±7.5mVக்குக் குறைவாக வைக்கும் G = +10 மிகைப்பு கொண்ட ஒரு புரட்டா செய்மிகைப்பியின் மின்சுற்றைக் காண்பிக்கிறது.



OPA694 கொண்டுள்ள ஒருதிசை பிணைந்த மின்சுற்று (DC coupled circuit) மிகவும் உயர்ந்த பட்டையகலத்தை அளிக்கிறது. குறைந்த அலைவெண்களில் வெளியீடு மின்னழுத்தம் குறிகை மிகைப்பால் (signal gain) மெலிப்பிடப்பட்டு OPA237இல் முதலிருந்த உள்ளீடு மின்னழுத்தத்தால் ஒப்பிடப்படுகிறது. (OPA237 என்பது 1.5MHz மிகைப்பு பட்டையகலப் பெருக்கு (gain bandwidth product) கொண்டுள்ள ஒரு தாழ்வில்லை துல்லிய மின்னழுத்தப் பின்னூட்டு செய்மிகைப்பி). இவ்விரண்டும் பொறுந்தாவிடில் (OPA694இலுள்ள ஒருதிசை பெயர்ச்சி காரணத்தால்) OPA237ஆனது 2.86kΩ வழியாக ஒரு திருத்தல் மின்னோட்டத்தை (correction current) சேர்த்து கூட்டுகிறது. பல வடிவமைப்புப் பரிசீலனைகள் (design considerations) இந்த மின்சுற்றி உகப்புப்படுத்த (optimise) உதவுகின்றன. முதலில், OPA237இன் புரட்டா உள்ளீட்டில் செல்லும் பின்னூட்டு சரியாக அதிவேக குறிகை மிகைப்பிற்கு பொறுத்தப்பட வேண்டும். நிலத்திற்கு செல்லும் 2kΩ மின்தடையத்தை ஒரு மாற்றியமைக்கத்தகு மின்தடையமாக (adjustable resistor) மாற்றினால் தாழ் மற்றும் உயர் அலைவெண் மிகைப்புகள் துல்லியமாக பொறுத்தப்படலாம். இரண்டாவது, OPA237ஆனது கட்டுப்பாட்டை OPA694க்கு அளிக்கும் கடவு அலைவெண் மண்டலம் (cross-over frequency region) மிகச் சிறந்த கட்ட நேரியல்மை (phase linearity) பண்பில் ஏற்பட வேண்டும். இந்த இரண்டு தேவைப்பாடுகளும் ஒட்டு மொத்த மாற்றுச் சார்பின் (overall transfer function) சுழிம-முனிம ரத்தாக்கத்திற்கு (pole-zero cancellation) வடிவமைப்பதற்கு குறைகின்றன. 2.86kΩ மின்தடையத்தைப் பயன்படுத்துதல் படம் 11இல் காண்பித்த மின்சுற்றில் இந்த தேவைப்பாட்டை பெயரல்வாக பூர்த்தி செய்யும். செயற்முறை வெப்பம் குறுக்காக கச்சித ரத்தாக்கம் (perfect cancellation over process and temperature) சாத்தியமாவதில்லை. எனினும், இந்த துவக்க மின் தடைய அமைவு மற்றும் துல்லிய மிகைப்புப் பொறுத்தம் நீண்ட நேர துடிப்பு நிலைப்படுத்தல் வால்களை (long-term pulse settling tails) குறைக்கும்

வெம்மைப் பகுப்பாய்வு (Thermal Analysis)
OPA694இன் உயர் வெளியீடு மின்திறன் திறமை காரணத்தால் மீக்கடுமை நிலைகளில் வெப்பமடு (heat sink) அல்லது காற்று வலுப்பாய்வு (forced air-flow) தேவைப்படலாம். பெரும விருப்பத்தக்க சந்தி வெப்பம் (maximum desired junction temperature) பெரும உள்ளக மின்திறன் விரயத்தை (maximum internal power) கீழ் விளக்கப்பட்டுள்ளது போல் நிர்ணயிக்கும். எக்காரணத்தாலும் பெரும சந்தி வெப்பம் 150°Cஐ மீறக்கூடாது.

இயக்க சந்தி வெப்பம் TA + PDJA சமன்பாட்டால் அளிக்கப்படுகிறது. மொத்த உள்ளக மின்திறன் விரயம் அமைதிய மின்திறன் (quiescent power) (PDQ) மற்றும் சுமைக்கு வழங்கப்படும் வெளியீடு கூற்றில் விரயமாகும் கூடுதல் மின்திறன் (output power stage power delivered to load) (PDL) ஆகியவற்றின் கூட்டுதத் தொகை ஆகும். அமைதிய மின்திறன் என்பது சுமையில் மின்னோட்டம் தர பாகத்தின் குறுக்கே மொத்த மின்னழுத்தம் ஆகும். தேவைப்படும் வெளியீடு குறிகை மற்றும் சுமை ஆகியவற்றை சார்ந்திருக்கும். எனினும், ஒரு நிலப்படுத்தப்பட்ட மின்தடையச் சுமைக்கு (grounded resistive load) வெளியீடு வழங்கல் மின்னழுத்தத்திற்கு பாதி மதிப்பில் உள்ள போது (இருகதிர்வு மின்வழங்கல்களுக்கு (bipolar supplies) ) அது பெருமம் அடைகிறது. இந்த சூழ்நிலையில்,

PDL = V2/(4xRL), இங்கு RL பின்னூட்டப் பிணையத்தின் சுமைப்படுத்தல் (feedback network loading) என்பதை உட்கொள்ளும்.

இந்த மின்திறனானது வெளியீடு கூற்றில் உள்ள மின்திறன், உள்ளக மின்திறனை நிர்ணயிக்கும் சுமை அல்ல.

பாதக நிலை உதாரணமாக (SOT23-5 பொதியத்தில் உள்ள) OPA694IDBVஐ பயன்படுத்தும் போது படம் 1 மின்சுற்றில் காண்பித்தது போல் +85°C சுற்றுப்புற வெப்பத்தில் நிலப்படுத்தப்பட்ட 20Ω சுமையை +2.5V ஒருதிசை மின்னழுத்தத்திற்கு ஓட்டும் போது, பெருமமான TJஐ கண்டுப்பிடிக்கவும்.

PD = 10V × 6.0mA + 52/(4 × (20Ω || 804Ω)) = 380mΩ.

பெருமமான TJ = +85°C + (0.38W × (150°C/W) = 142°C.

இது பெருமமான சந்தி வெப்பத்திற்குக் குறைவாக இருந்தாலும் முறைமை நம்பகப் பரிசீலனைகள் (system reliability considerations) இன்னும் குறைந்த சாந்தி வெப்பத்தை தேவைப்படலாம். இது ஒரு பாதக நிலை உள்ளக மின்திறன் விரயம் (worst case internal power dissipation) என நினைவில் வைக்கவேண்டும் - தங்களது உண்மையான குறிகை மற்றும் சுமையை வைத்து PDLஐ கணிக்க வேண்டும். சுமையானது மின்னோட்டத்தை நேர்ம மதிப்பில் வெளியீட்டில் வலுக்கட்டாயமாக நுழைக்கும் போது அல்லது எதிர்ம மதிப்பில் வெளியீட்டிலிருந்து மடுப்படுத்தும் போது பெருமமான மின் திறன் விரையம் ஏற்படும். இது ஒரு உயர் மின்னோட்டத்தை வெளியீட்டுத் திருதடையங்களின் உயர்ந்த உள்ளக மின்னழுத்த வீழ்ச்சியில் வைக்கிறது. வழக்கமான சிறப்பியல்புகளில் வெளியீடு மின்னழுத்தம் மற்றும் மின்னூட்ட கட்டுபாட்டுகள் வளைவு வரைவு (Output Voltage and Current Limitations) அச்சூழ்நிலைகளில் ஒரு 1W பெரும உள்ளக மின்திறன் விரைய எல்லை (1W maximum internal power dissipation boundary) என்பதை உட்கொண்டுள்ளது.

பலகை மனையமைவு வழிமுறைகள் (Board Design Guidelines)
உகப்பான செயல்வலிமையை பெறும் பொருட்டு, மனைமைவு போலியங்களுக்கு (parasitics) மற்றும் வெளியக உறுப்பு வகைகளுக்கு (external component types) உன்னிப்பான கவனம் தேவைப்படுகிறது. செயல்வலிமையை உகப்புப்படுத்தும் பரிந்துரைகள் கீழ்வருமாறு:

a)அனைத்து குறிகை உல் வெளி முள்ககளின் மாறுதிசை நிலத்திற்கு போலிய மின்தேக்கத்தை சிறுமப் படுத்தவும். வெளியீடு மற்றும் புரட்டும் முள்களில் ஏற்படும் போலிய மின்தேக்கம் நிலைப்பின்மையை விளைவிக்கும். புரட்டா முள்ளில் மூல மின்மறுப்புடன் (source impedance) வினைபுரிந்து வேண்டுமற்ற பட்டைக்கட்டுப்படுத்தலை (unintentional bandlimiting) ஏற்படுத்தும். வேண்டமற்ற மின்தேக்கத்தை குறைக்க, குறிகை உள்வெளி முள்களுக்கு சுற்று வட்டத்தில் நிலத்தலங்கள் மற்றும் திறன்தளங்கள் ஆகியவற்றில் ஒரு சாளரம் இம்முள்களை சுற்றி திறக்கப்பட வேண்டும். அல்லது நிலத்தலங்கள் மற்றும் திறன்தளங்கள் உடையாததாக பலகையின் இதர இடங்களில் அமைந்திருக்க வேண்டும்.

b)மின்வழங்கல் முள்களிருந்து 0.1μF உயரலைவெண் பிணைநீக்கு மின்தேக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவை சிறுமப் படுத்தப்பட வேண்டும் (< 0.25”). சாதன முள்களில் நிலம் மற்றும் திறன் தளங்கள் குறிகை உள் வெளி முல்களுக்கு அருகாமையில் அமையக்கூடாது. முள்களுக்கும் பிணைநீக்கு மின்தேக்கிகளுக்கும் இடையே உள்ள மின்தூண்டத்தை சிறுமப்படுத்தும் பொருட்டு குறுகலான திறன் மற்றும் நில மின்தடங்களை தவிர்க்கவும். மின்வழங்கல் இணைப்புகள் (முள்கள் 4 மற்றும் 7) எப்பொழுதுமே இம்மின் தேக்கிகளுடன் பிணைநீக்கப்பட வேண்டும். இர‌ண்டு மின்திற‌ன் முள்க‌ளுக்கு இடையே ஒரு விருப்ப‌ப்ப‌ட்ட‌ப் பிணைநீக்கு மின்தேக்கி அமைத்த‌ல் இர‌ண்டாம் இசைய‌ செய‌ல்வ‌லிமையை (second harmonic performance) மேம்ப‌டுத்தும். பெரிய‌ அள‌வு (2.2μF இலிருந்து 6.8μF) மின்தேக்கிக‌ள் முத‌ன்மை மின்வ‌ழ‌ங்க‌ல் முள்க‌ளுக்குப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும். இவை சாத‌ன‌த்திலிருந்து ச‌ற்று தொலைவில் அமைக்க‌ப்ப‌ட‌லாம் ம‌ற்றும் சுற்றுப்ப‌ல‌கையில் உள்ள இத‌ர‌ சாத‌ன‌ங‌க‌ளுட‌ன் ப‌கிர்க்க‌ப்ப‌டால‌ம்.

c). வெளியுறுப்புக‌ளின் க‌வ‌ன‌மான‌த் தேர்வு OPA694இன் உய‌ர் அலைவெண் செய‌ல்வ‌லிமையை பாதுகாக்கும். மின்த‌டைய‌ங்க‌ள் தாழ் எதிர்வினைப்பு வ‌கையை (low-reactance type) சார‌ வேண்டும். ப‌ர‌ப்பேற்ற‌ மின் த‌டைய‌ங்க‌ளே சிற‌ந்த‌வை ம‌ற்றும் இறுக்க‌மான‌ ம‌னைய‌மைவை அனும‌திக்கின்ற‌ன‌. மாழைப்ப‌ட‌ல‌ (metal film) ம‌ற்றும் க‌ரிம‌ச் சேர்மான‌ (carbon composition) அச்சிழுது (axial lead) மின்த‌டைய‌ங்க‌ள் சிற‌ந்த‌ உய‌ர‌லைவெண் செய‌ல்வ‌லிமையை அளிக்கின்ற‌ன‌. இருப்பினும், இவைக‌ளின் இழுதுக‌ள் ம‌ற்றும் சுற்றுப்ப‌ல‌கை மின் த‌ட‌ நீள‌ம் இய‌ன்ற‌ள‌வு குட்டையாக‌ இருக்க‌ வேண்டும். க‌ம்பிச்சுருள் மின்தடைய‌ங்க‌ள் (wire-wound resistors) உய‌ர‌லைவெண் பய‌ன‌க‌ங்க‌ளின் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட‌க் கூடாது. வெளியீடு முள் ம‌ற்றும் புர‌ட்டும் உள்ளீடு முள் போலிய‌ மின்தேக்க‌த்திற்கு (parasitic capacitance) மிக‌வும் உண‌ர்ச்சிக‌ர‌மாக‌ உள்ள‌தால், பின்னூட்டு ம‌ற்றும் தொட‌ர் வெளியீடு மின்த‌டைய‌ம் (series output resistor) ஆகிய‌வ‌ற்றை இம்முள்க‌ளுக்கு இய‌ன்ற‌ள‌வு அருகாமையில் அமைக்க‌வும். புர‌ட்டா உள்ளீடு முடிப்பு மின்த‌டைய‌ம் (non-inverting input termination resistor) போன்ற‌ இத‌ர‌ பிணைய‌ம் உறுப்புக‌ள் பொதிய‌த்திற்கு அருகாமையில் அமைக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இருபக்க‌ உறுப்பேற்ற‌ம் அனும‌திக்க‌ப்ப‌டும் போது, பின்னூட்டு மின்த‌டைய‌ம் எதிர்ப் ப‌க்க‌த்தில் வெளியீடு ம‌ற்றும் புர‌ட்டும் உள்ளீடுக‌ளுக்கு இடையே அமைக்க‌ப்பட‌ வேண்டும். அலைவெண் ம‌றுமொழி முத‌ன்மையாக‌ பின்னூட்டு மின்த‌டைய‌த்தால் நிர்ண‌யிக்க‌ப்ப‌டுகிற‌து. இத‌னை அதிக‌ரித்த‌ல், ப‌ட்டையக‌ல‌த்தைக் குறைக்கும், மாறாக‌, இத‌னைக் குறைத்த‌ல் இன்னும் உச்ச‌ அலைவெண் ம‌றுமொழியை அளிக்கும். +2 மிகைப்பில், ±5V மின்வ‌ழ‌ங்க‌லில் மின்னிய‌ல் சிற‌ப்பிய‌ல்புக‌ள் அட்ட‌வ‌ணையில் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ 402Ω ம‌திப்பு ஒரு ந‌ல்ல‌ தொட‌க்க‌ ம‌திப்பாக‌ அமைய‌லாம். ஒரும‌ மிகைப்பு ப‌ய‌ன‌க‌த்தில் (unity-gain application) நேர‌டி குறுக்கிணைப்பிற்கு மாறாக‌ 430Ω ம‌திப்பு ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டுகிற‌து. ஒரு மின்னோட்ட‌ப் பின்னூட்டு செய்மிகைப்பியில் ஒரும‌ மிகைப்பி பின்ப‌ற்றி உள்ள‌மைவிலும் ஒரு பின்னூட்டு மின்த‌டைய‌ம் தேவைப்ப‌டுகிற‌து.

d)இத‌ர‌ அக‌லப்ப‌ட்டை சாத‌ன‌ங்க‌ளுட‌ன் இணைக்கும் போது, குட்டையான‌ நேர‌டி மின் த‌‌ட‌ங்க‌ள் அல்ல‌து சுற்றுப்ப‌ல‌கை ப‌ர‌ப்புத்த‌ட‌ங்க‌ள் மூல‌ம் இணைக்க‌ வேண்டும். குட்டையான‌ இணைப்புக‌ளுக்கு, மின்த‌ட‌ம் ம‌ற்றும் அடுத்த‌ உறுப்பின் உள்ளீடு திர‌ள் மின்தேக்கி சுமையாக‌ (lumped capacitive load) க‌ருத‌ வேண்டும். ச‌ற்று அக‌ல‌ மின் த‌ட‌ங்க‌ளை (இலிருந்து ) ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம், நில‌ம் ம‌ற்றும் திற‌ன் த‌ள‌ங்க‌ள் இவைக‌ளைச் சுற்றி திற‌ந்த‌ நிலையில். மொத்த‌ மின்தேக்க‌ச் சுமையை ம‌திப்பிட‌வும். RS ம‌திப்பை ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌ RS எதிர் மின்தேக்க‌ச் சுமை வ‌ரைவ‌ளைவிலிருந்து நிறுவ‌மைக்க‌வும். குறைந்த‌ போலிய‌ மின்தேக்க‌ச் சுமைக‌ளுக்கு (< 5pF) RS தேவைப்படாது, ஏனென்றால‌ OPA694 உள்ள‌க‌மாக‌ பெய‌ர‌ள‌வு 2pF போலிய‌ மின்தேக்க‌த்தால் இழ‌ப்பீடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. நீண்ட‌ மின்த‌ட‌ம் தேவை என்றால், ம‌ற்றும் இர‌ட்டை முடிப்பு பர‌ப்புத்த‌ட‌த்தில் (doubly terminated transmission line) உள்ள‌ 6dB குறிகை இழ‌ப்பு ஏற்க‌த்த‌க்க‌தாக‌ இருந்தால் மின்ம‌றுப்புப் பொருத்த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌ர‌ப்புத்த‌ட‌ அமைப்பை செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும். சுற்றுப்ப‌ல‌கையில் 50Ω சூழ‌ல் தேவையில்லை, மாறாக‌ ச‌ற்று உய‌ர் மின்ம‌றுப்பு சூழ‌ல் உருக்குலைவு ம‌றுமொழியை மேம்ப‌டுத்த‌லாம். உருக்குலைவு ம‌ற்றும் சுமை வ‌ளைவ‌ரைவைக் காண்க‌. ப‌ல‌கை மூல‌த‌ன‌ங்க‌ளால் வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ சிற‌ப்பிய‌ல்பு மின்த‌ட‌ மின்ம‌றுப்புட‌ன் (board trace impedance) , வெளியீட்டில் பொருத்த‌மான‌ தொட‌ர் மின்த‌டைய‌ம் ம‌ற்றும் சேரிணைப்பு சாத‌ன‌த்தின் உள்ளீட்டில் உள்ள‌ முடிப்பு குறுக்கு மின்த‌டைய‌ம் ஆகிய‌வ‌ தேவைப்ப‌டும். முடிப்பு மின்ம‌றுப்பு என்ப‌து குறுக்கு மின்த‌டைய‌ம் ம‌ற்றும் சேரிணைப்பு சாத‌ன‌த்தின் உள்ளீடு மின்மறுப்பு ஆகிய‌வ‌ற்றின் இணை சேர்மான‌ம் என்ப‌தை நினைவில் வைக்க‌ வேண்டும். முடிப்பு மின்ம‌றுப்பு சேரிணைப்பு சாத‌ன‌ம் ம‌ற்றும் குறுக்கு மின்த‌டைய‌ம் ஆகிய‌வ‌ற்றின் இணை சேர்மான‌மாக‌ அமையும், இந்து மொத்த‌ செய‌ல் மின்ம‌றுப்பு மின்த‌ட‌ மின்ம‌றுப்புட‌ன் பொருத்த‌ப்ப‌ட‌ வேண்டும். OPA694இன் உய‌ர் மின்ன‌ழுத்த‌ ம‌ற்றும் மின்னோட்ட‌ கொள்ள‌வால் ப‌ல‌ சேரிணைப்பு சாத‌ன‌ங்க‌ளை (multiple destination devices) அமைக்க‌லாம். இவை ஒவ்வொன்றும் த‌னித்த‌னி ப‌ர‌ப்புத்த‌ட‌மாக‌ தொட‌ர் ம‌ற்றும் குறுக்கு முடிப்பிக‌ளை வைத்திருக்கும். ஒரு இர‌ட்டை முடிப்பு ப‌ர‌ப்புத்த‌ட‌த்தின் 6dB மெலிப்பு ஏற்க‌த்த‌ல்ல‌தாக‌ இருப்பின், நீண்ட‌ மின்த‌ட‌த்தை தொட‌ர் மின்த‌டைய‌த்தால் மூல‌த்தில் ம‌ற்றும் முடிப்பு செய்ய‌லாம். இச்சூழ‌லில் மின்த‌ட‌த்தை மின் தேக்க‌ச் சுமையாக‌க் க‌ருத‌ வேண்டும். மேலும், தொட‌ர் மின்த‌டைய‌த்தை ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌ RS எதிர் மின்தேக்க‌ச் சுமை வ‌ரைவ‌ளைவு அடிப்ப‌டையில் உள்ள‌ ம‌திப்பிற்கு நிறுவ‌மைக்க‌ வேண்டும். இது இர‌ட்டை முடிப்பு முறையில் உள்ள‌ அள‌வு குறியீடு மெய்மையைக் காப்ப‌‌தில்லை. சேரிணைப்புச் சாத‌ன‌த்தின் உள்ளீடு மின்ம‌றுப்பு தாழ்வாக‌ இருந்தால், தொட‌ர் மின்த‌டுப்பு முடுப்பு மின்ம‌றுப்புட‌ன் ஏற்ப‌டுத்தும் மின்ன‌ழுத்த‌ பிரிப்பு விளைவால் ‌ச‌ற்று குறிகை மெலிப்பு ஏற்ப‌டும்.

e)OPA694 போன்ற‌ அதிவேக‌ச் சாத‌ன‌த்தைமாட்டியில் அம‌ர்த்த‌ல் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டுவ‌தில்லை. இதில் கூடுத‌லான‌ இழுதி நீள‌ம் ம‌ற்றும் மாட்டியால‌ அறிமுக‌மாகும் முள்ளிற்கு முள் மின் தேக்க‌ம் மிக‌வும் இன்ன‌ல‌‌ளிக்கும் போலிய‌ப் பிணைய‌த்தை ஏற்ப‌டுத்தும். இத‌னால‌ சீரான‌ நிலையான‌ அலைவெண் ம‌றுமொழியைப் பெற‌ இய‌லாது. சிற‌ந்த‌ செய‌ல்வ‌லிமைக்காக‌, OPA694ஐ நேர‌டியாக‌ சுற்றுப்ப‌ல‌கையில் சூட்டிணைக்க‌வும்.

உள்ளீடு ம‌ற்றும் நிலைமின்னிற‌க்க‌க் காப‌ந்து (Input and ESD Protection)
ஆன‌து அதிவேக‌ நிர‌ப்பு இருமுனைவு நிர‌ப்புமாழையுயிர‌க‌ செய‌ல்முறையில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. உள்ள‌க‌ ச‌ந்தி உடைவு மின்ன‌ழுத்த‌ங்க‌ள் சார்பாக‌ இந்த‌ மிகு சிறிய‌ வ‌டிவ‌ சாத‌ன‌ங்க‌ளில் குறைவாக‌ உள்ள‌ன‌. இந்த‌ உடைவுக் கூற்றுக‌ள் அறுதிப் பெரும‌ செய்ல‌வ‌ர‌ம்புக‌ளில் பிர‌திப‌லிக்கின்ற‌ன‌. அனைத்து சாத‌ன‌ முள்க‌ளும் உள்ள‌க‌ இருமுனைய‌ங்க‌ளுட‌ன் வ‌ர‌ம்புக்குள்ள‌ நிலைமின்னிற‌க்க‌க் காப‌ந்து கொண்டுள்ள‌ன‌. இது ப‌ட‌ம் 12இல் காண்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.


இந்த‌ இருமுனைய‌ங்க‌ள் மின்வ‌ழ‌ங்க‌ல்க‌ளுக்கு மேலான‌ உள்ளீடு மேலோட்ட‌ல் மின்ன‌ழுத்த‌ங்க‌ளுக்கு (over-drive voltages) எதிரே சுமாரான‌க் காப‌ந்தை அளிக்கின்ற‌ன‌. இந்த‌க் காப‌ந்து இருமுனைய‌ங்க‌ள் 30mA தொட‌ர்நிலை மின்னோட்ட‌த்தை ஆத‌ரிக்கின்ற‌ன‌. இன்னும் அதிக‌ மின்னோட்ட‌ங்க‌ள் சாத்திய‌ம் எனில் (உதார‌ண‌மாக‌, ±15V மின்வ‌ழ‌ங்க‌ல் சாத‌ன‌ங்க‌ள் OPA694 உள்ளே ஓட்டும் போது), மின்னோட்ட‌க் க‌ட்டுப்பாடு மின்த‌டைய‌ங்க‌ள் இர‌ண்டு உள்ளீடுக‌ளுக்கும் சேர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும். இவைக‌ளின் ம‌திப்புக‌ள் குறைவாக‌வே வைக்க‌ப்ப‌ட‌ வேண்டும், ஏனென்றால், உய‌ர் ம‌திப்புக‌ள் இரைச்ச‌ல் ம‌ற்றும் அலைவெண் செய‌ல்வ‌லிமையை சீர்குலைக்கும்.


பொதியத் தகவல்
உத்தரவிடத்தகுச் சாதனம் நிலைமை(1) பொதிய வகை பொதிய வரையல் முள்கள் பொதிய எண்ணிக்கை சுற்றுச்சூழல் திட்டம் (2) இழுது/பந்து மேற்ப‌ர‌ப்பு சீர்மை ஈரவுணர்மை உச்ச வெப்பம் (3)
OPA694ID செயல்பாட்டில் SOIC D 8 75 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
OPA694IDBVR செயல்பாட்டில் SOT-23 DBV 5 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-வரையறையற்றது
OPA694IDBVRG4 செயல்பாட்டில் SOT-23 DBV 5 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-வரையறையற்றது
OPA694IDBVT செயல்பாட்டில் SOT-23 DBV 5 250 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-வரையறையற்றது
OPA694IDBVTG4 செயல்பாட்டில் SOT-23 DBV 5 250 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-வரையறையற்றது
OPA694IDG4 செயல்பாட்டில் SOIC D 8 75 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
OPA694IDR செயல்பாட்டில் SOIC D 8 2500 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
OPA694IDRG4 செயல்பாட்டில் SOIC D 8 2500 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
(1)வர்த்தக நிலைமை மதிப்புகள் கீழ்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன.
செயல்பாட்டில்/ACTIVE: தயாரிப்புச் சாதனம் புதிய வடிவமைப்புகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆயுள்வாங்கல்/LIFEBUY: இத்தயாரிப்பு நிறுத்தப்படும் என TI அறிவித்துள்ளது; ஆயுட்கால வாங்கல் காலம் அமலில் உள்ளது.
புதிய வடிவமைப்பிற்குப் பரிந்துரையல்ல/NRND: "Not Recommended For New Designs"; ஏற்கனவே உள்ள வாடிக்கையாள்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது; ஆனால் TI இப்பாகத்தை புதிய வடிவமைப்புகளுக்கு பரிந்துரைப்பதில்லை.
முன்பார்வை/PREVIEW: இச்சாதனம் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் உற்பத்தியில் இல்லை.
வழக்கொழியுற்று/OBSOLETE: TI இச்சாதனத்தின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது

(2)சுற்றுச்சூழல் திட்டம்/ECO PLAN: திட்டமிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் வகைப்பாடு கீழ்வருமாறு: ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு)/Pb-Free(RoHS); ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு விதிவிலக்கு)/Pb-free (RoHS Excempt) அல்லது பசுமை (இடப்பொருட்குறைப்பு மற்றும் கருநிமிளை, நெடியம் இல்லை)/Green (no Sb, Br).
ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு)-Pb Free (RoHS): TIயின் கலைச்சொற்கள் ஈயமற்றது (Lead-Free அல்லது Pb-Free) அல்லது பசுமை (இடர்ப்பொருட்குறைப்பு மற்றும் கருநிமிளை, நெடியம் இல்லை)-Green (RoHS & No Sb, Br) என்பவை குறைக்கடத்திப் பொருட்கள் அனைத்து ஆறு மூலதனப்பொருட்களுக்கான இடர்ப்பொருட்குறைப்பு வேட்புகளுக்கு (RoHS Requirements) இணங்கும். இது ஈயம், ஓரின மூலதங்களின் எடையின் 0.1%ஐ மீறக்கூடாது ஆகிய வேட்பையும் உட்சேர்க்கும். கூடுதலான தயாரிப்பு இலக்கணங்கத் தகவல்களுக்கு http://www.ti.com/productcontent-ஐ நாடவும். உயர் சூட்டிணைப்பில் வடிவமைக்கப்படும் இடங்களில், TI இயமற்றத் தயாரிப்புகள் குறிப்பிட்டுள்ள ஈயமற்றச் செய்கைகளுக்கு (Pb-free processes) உகுந்ததாகும்.
ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு விதிவிலக்கு)-Pb Free (RoHS Excempt): இவ்வுறுப்பு கீழ்வருமாறு ஏதேனும் விதிவிலக்குகள் கொண்டுள்ளது: 1)ஈயம் சார்ந்த கவிழ்சில்லு சூட்டிணைப் புடைப்புகள் வகுமத்திற்கும் பொதியத்திற்கும் இடையே பயனாகுதல்; 2)ஈயம் சார்ந்த ஒட்டுப்பொருள் வகுமத்திற்கு இழுதுச்சட்டத்திற்கும் இடையே பயனாகுதல். மற்றப்படி உறுப்பு மேல் வரையறுத்துள்ளப்படி ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பிற்கு இணைவொத்தமானது) என கருதலாம்.
பசுமை (இடர்ப்பொருட்குறைப்பு மற்றும் கருநிமிளை, நெடியம் இல்லை)/Green (RoHS & no Sb, Br): TI பசுமை (Green) என்பதை நெடியம் (Bromine) மற்றும் கருநிமிளை (Antimony) சார்ந்த தீத்தடுப்பிகள் (flame retardants) அற்றது (நெடியம் மற்றும் கருநிமிளை ஓரின மூலதங்களின் எடையின் 0.1% சதவிகிதத்தை மீறுவதில்லை) என்பதாக வரையறுக்கிறது.
(3)ஈரவுணர்மை மட்டம், உச்ச வெப்பம் - JEDEC தொழிலக நெறி வகைப்பாடுகளின் படியான ஈரவுணர்மை மட்ட செயல்வரம்பு (MSL rating); உச்ச சூட்டிணைப்பு வெப்பம்
முக்கியத் தகவல் மற்றும் உரிமைத்துரப்பு: இத்தகவல் TIயின் அறிதல் மற்றும் நம்புகையின் பெயரில் தரப்படுகிறது. இத்தகவல் படர்க்கையினர் மூலம் தயார் செயப்பட்டது. ஆகவே, துல்லியத்தின் உத்தரவாதம் அளிக்கப்படுவதில்லை. படர்க்கையினர் வழங்கும் தகவல்களை மேம்பட ஒன்றிணைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. TI துல்லியம் மற்றும் வகைக்குறிப்பு ஆகியவற்றில் முயற்சிகள் செலுத்தி வந்தும், உள்வரும் மூலதங்கள் மற்றும் வேதியங்கள் மீது அழிவுறு சோதனைகள் நடத்துவதும் வேதிப் பகுப்பாய்வு நடத்துவதும் செய்வதில்லை. TI மற்றும் TI வழங்காளர்கள் சில தகவல்களை தனியுரிமத்திற்குரியது என கருதுகின்றனர். ஆகவே CAS எண்கள் மற்றும் மற்ற வரம்புறு தகவல்கள் வெளியிடப்படாமல் இருக்கும்.
TIயின் பொறுப்பேற்றம் TI பாகங்களின் வாங்கல் விலையை ஒருபோதும் மீறாது.

நாடச்சுருள் தகவல் (Tape and Reel Information)


சாதனம் பொதிய வகை பொதிய வரையல் முள்கள் வழங்கெண்ணிக்கை(SPQ) சுருள் விட்டம் (mm) சுருள் அகலம் W1 (mm) A0 (mm) B0 (mm) K0 (mm) P1 (mm) W (mm) முள்-1 காற்பகுதி
OPA694IDBVR SOT-23 DBV 5 3000 180.0 8.4 3.2 3.1 1.39 4.0 8.0 Q3
OPA694IDBVT SOT-23 DBV 5 250 180.0 8.4 3.2 3.1 1.39 4.0 8.0 Q3
OPA694IDR SOIC D 8 2500 330.0 12.4 6.4 5.2 2.1 8.0 12.0 Q1

நாடாச்சுருள் பேழை அளவைகள்

*அனைத்து அளவைகளும் பெயரளவு.
சாதனம் பொதிய வகை பொதிய வரையல் முள்கள் வழங்கெண்ணிக்கை(SPQ) நீளம் (mm) அகலம் (mm) உயரம் (mm)
OPA694IDBVR SOT-23 DBV 5 3000 190.5 212.7 31.8
OPA694IDBVT SOT-23 DBV 5 250 190.5 212.7 31.8
OPA694IDR SOIC D 8 2500 346.0 346.0 29.0