டெக்ஸஸ் கருவிகளின் பர்-பிரவுன் தயாரிப்புகள் (Texas Instruments - Burr-Brown Products) - www.ti.com

OPA333/OPA2333 1.8V, நுண்மின்திறன் நிரப்புமாழையுயிரக செயல்படு மிகைப்பிகள், சுழியப் பெயர்ச்சி அணிவரிசை (1.8V, microPOWER CMOS OPERATIONAL AMPLIFIERS, Zerø-Drift Series)

அம்சங்கள்
*குறைந்தப் பெயர்ச்சி மின்னழுத்தம் - 10μV (பெருமம்).
*சுழியப் பெயர்ச்சி (Zero-Drift) : 0.05μV/°C (பெருமம்)(single-ended reference clock input)
*0.01Hzஇலிருந்து 10Hz வரையிலான இரைச்சல்: 1.1μVPP
*அமைதிய மின்னோட்டம் : 17μA
*ஒற்றைய மின்வழங்கள் இயக்கம்
*வழங்கல் மின்னழுத்தம் : 1.8Vஇலிருந்து 5.5V
*மின்கிராதிக்கு மின்கிராதி உள்ளீடு/வெளியீடு (Rail-to-rail input/output)
*நுண்ணளவு பொதியங்கள் - SC70 மற்றும் SOT23

பயனகங்கள்
*ஆற்றல்மாற்றி பயனகங்கள்
*வெப்ப அளவைகள்
*மின்னணுத் தராசுகள்
*மருத்துவ அளவுப்பொறிகள்
*மின்கல இயக்கக் கருவிகள்
*கையடக்க சோதனைத் தளவாடங்கள்

விவரம்
OPA333 அணிவரிசை செயல்படு மிகைப்பிகள் உடனிகழ்வாக மிகக் குறைந்தப் பெயர்ச்சி மற்றும் காலம் மற்றும் வெப்பம் சார்ந்த சுழிய அருகாமை நகர்வு ஆகியவற்றை அளிக்க ஒரு தனியுரிம தன்னியக்க அளவொப்புமை நுட்பத்தை (auto-calibration technique) பயன்படுத்துகின்றன. இந்தக் குறுவுரு உயர்த்துல்லிய குறை அமைதிய மின்னோட்ட மிகைப்பிகள் மின்கிராதிகளுக்கு 100mV அப்பாலான பொதுப்பாங்கு நெடுக்கத்தையும் மின்கிராதிகளுக்கு 50mVக்குள் வீசும் மின்கிராதிக்கு மின்கிராதி வெளியீடுகளையும் அளிக்கிறது. +1.8V (±0.9V) வரை குறைந்த மற்றும் +5.5V (±2.75V) வரை உயர்ந்த ஒற்றை அல்லது இரட்டை மின்வழங்கல்கள் பயன்படுத்தப்படலாம். இவை தாழ் மின்னழுத்த ஒற்றை மின்வழங்கல் இயக்கத்திற்கு உகப்புப்படுத்தப்பட்டுள்ளன.

OPA333 குடும்பமானது பாரம்பரிய நிரப்பு உள்ளீடுக்கூறுகளில் (complementary input stages) தொடர்புக்கொண்டுள்ள குருக்குக்கடவு (crossover) இல்லாமல் சிறந்த பொதுப்பாங்கு மருத்தொழிப்பு விகிதத்தை (CMRR) அளிக்கிறது. இவ்வடிவமைப்பு வேறுபாட்டு நேரியல்மையின் (differential linearity) சீர்க்குலைவில்லாமல் எண்மைப்பிகளை (analog-to-digital converters) ஓட்டுவதற்கான மேன்மையான செயல்வளிமையை அளிக்கிறது.
OPA333 (ஒற்றைய வடிவுரு) SC70-5, SOT23-5, மற்றும் SO-8 ஆகியப் பொதியங்களில் கிடைக்கிறது. OPA2333 (இரட்டைய வடிவுரு) DFN-8 (3mm x 3mm), MSOP-8, மற்றும் SO-8 ஆகியப் பொதியங்களில் கிடைக்கிறது. அனைத்து வடிவுருக்களும் –40°Cஇலிருந்து +125°C வரை இயங்க விவரக்கூற்றிடப்பட்டுள்ளன.




இந்த ஒருங்கிணைச்சுற்று நிலைமின்னிறக்கத்தால் (ESD) சேதமடையலாம். டெக்ஸஸ் கருவிகள் அனைத்து ஒருங்கினைச்சுற்றுக்களும் முன்னெச்சரிக்கைகளுடன் கையாளப்படுமாறு பரிந்துரைக்கிறது. தகுந்த கையாளல் மற்றும் நிறுவல் செய்முறைகளைக் கைப்பிடிக்கத் தவறுதல் சேதத்தில் நேரிடலாம்.

நிலைமின்னிறக்கப் பாதிப்பு என்பது இலேசான செயல்வலிமை சீர்க்குலைவிலிருந்து ஒட்டுமொத்த சாதனத் தோல்வி வரை தோன்றலாம். துல்லிய ஒருங்கிணைச் சுற்றுக்களில் சிறு பண்பளவு மாற்றங்கள் சாதனத்தை வெளியிடப்பட்ட விவரக்கூற்றுகளைப் பூர்த்தி செய்யாதவாறு ஆக்கக்கூடுவதால் இவை இச்செதங்களுக்கு மேலும் பாதிக்கப்ப்படும்படி அமையலாம்.

உத்தரவிடல் தகவல்
தயாரிப்பு பொதியம்-முள்கள் பொதிய அடையாளக்குறி பொதியக் குறியிடல்
OPA333 SOT23-5 DBV OAXQ
SC70-5 DCK BQY
SO-8 D O333A
OPA2333 SO-8 D O2333A
DFN-8 DRB BQZ
MSOP-8 DGK OBAQ
தற்போதயப் பொதிய மற்றும் உத்தரவிடல் தகவலுக்கு இவ்வானத்திற்கு இறுதியில் உள்ள பொதிய விழைவு பிற்சேர்க்கையைக் காண்க அல்லது டெக்ஸஸ் கருவிகள் இணையதளம் www.ti.com என்பதைக் காண்க.

அறுதிப் பெரும செயல்வரம்புகள் (குறிப்பு 1)
  OPA333, OPA2333 அலகு
வழங்கல் மின்னழுத்தம் +7 V
குறிகை உள்ளீடு முனையங்கள், மின்னழுத்தம் –0.3 இலிருந்து (V+) + 0.3 V
குறிகை உள்ளீடு முனையங்கள், மின்னோட்டம் ±10 mA
வெளியீடு குறுக்குச்சுற்று தொடர்ந்த  
இயக்க வெப்பம் –40 இலிருந்து +150 °C
வைப்பு வெப்பம் –65 இலிருந்து +150 °C
சந்தி வெப்பம் +150 °C
நிலைமின்னிறக்கச் செயல்வரம்புகள் :    
மனித உடல் மாதிரி (Human Body Model - HBM) 4000 V
மின்னூட்டுறு சாதன மாதிரி (Charged Device Model - CDM) 1000 V
இயந்திர மாதிரி (Machine Model - MM) 400 V
(1)மேலுள்ள செயல்வரம்புகளுக்கு அப்பாலான வளைப்புகள் நிரந்திர சேதத்தை விளைவிக்கலாம். நீடித்த நேரங்களுக்கு அறுதிப் பெரும் சூழ்நிலைகளுக்கு வெளிப்படுத்துதல் சாதன நம்பகத்தை சீர்க்குலைக்கும். இவை வளைப்புச் செயல்வரம்புகள் மட்டும் தான். இச்சூழ்நிலைகளில் அல்லது விவரக்கூற்றிடப்பட்டச் சூழ்நிலைகளுக்கு அப்பாலான செயற்கூறு இயக்கம் ஆதரிக்கப்படவில்லை.
(2)உள்ளீடு முனையங்கள் மின்கிராதிகளுடன் இருமுனையப் பற்றிடப்பட்டுள்ளன (diode-clamped). மின்கிராதிகளுக்கு 0.3V அப்பால் வீச இயலும் உள்ளீடு குறிகைகள் 10mA அல்லது குறைவாக மின்னோட்ட வரம்பிடப்பட வேண்டும்.
(3)நிலத்துடன் குறுக்குச்சுற்றிடப்பட்டுள்ளது, பொதியத்திற்கு தலா ஒரு மிகைப்பி.

மின்னியல் சிறப்பியல்புகள் : VS = +1.8Vஇலிருந்து +5.5V
பட்டையெழுத்து வரம்புகள் TA = –40°C to +125°C சுற்றுப்புற வெப்ப நெடுக்கத்தில் விவரக்கூற்றிப்பட்டுள்ளன.
மாறாகக் குறிப்பிடப்படவில்லையெனில், TA = +25°C, RL = 10kW VS/2உடன் இணைந்தது, VCM = VS/2, VOUT = VS/2 ஆகியவை பொறுந்தும்.
பண்பளவு சோதனைச் சூழல்கள் OPA333, OPA2333 அலகு
சிறுமம் வழக்கம் பெருமம்
பெயர்ச்சி மின்னழுத்தம்
உள்ளீடு பெயர்ச்சி மின்னழுத்தம் VOS VO = +5V   2 10 μV
எதிர் வெப்பம் dVOS/dT     0.02 0.05 μV/°C
எதிர் மின்வழங்கள் மின்வழங்கல் மறுத்தொழிப்பு விகிதம்(PSRR) VS = +1.8Vஇலிருந்து +5.5V   1 5 μV/V
நீண்டக்கால நிலைப்பு (1)     குறிப்பு 1    
தடப் பிரிகை, ஒருதிசை (1)     0.1   μV/V
உள்ளீடு சாருகை மின்னோட்டம்
உள்ளீடு சாருகை மின்னோட்டம் IB     ±70 ±200 pA
வெப்பம் சார்ந்த     ±150   pA
உள்ளீடு பெயர்ச்சி மின்னோட்டம் IOS     ±140 ±400 pA
இரைச்சல்
உள்ளீடு மின்னழுத்த இரைச்சல், f = 0.01Hz to 1Hz     0.3   μVPP
உள்ளீடு மின்னழுத்த இரைச்சல், f = 0.1Hz to 10Hz     1.1   μVPP
உள்ளீடு மின்னோட்ட இரைச்சல், f = 10Hz     100   fA/√Hz
உள்ளீடு மின்னழுத்த நெடுக்கம்
பொதுப்பாங்கு மின்னழுத்த நெடுக்கம் VCM   (V–) – 0.1 100 (V+) + 0.1 V
பொதுப்பாங்கு மறுத்தொழிப்பு விகிதம் CMRR (V–) – 0.1V < VCM < (V+) + 0.1V 106 130   dB
உள்ளீடு மின்தேக்கம்
வேறுப்பாடு     2   pF
பொதுப்பாங்கு     4   pF
திறந்த வளைய மிகைப்பு
திறந்த வளைய மின்னழுத்த மிகைப்பு AOL (V–) + 100mV < VO < (V+) - 100mV, RL = 10KΩ 106 130   dB
அலைவெண் மறுமொழி
மிகைப்பு பட்டையகலப் பெருக்கு GBW CL = 100pF   350   kHz
திரும்பு வீதம் SR G = +1   0.16   V/μs
வெளியீடு
மின் கிராதியிலிருந்து மின்னழுத்த வெளியீடு வீச்சு RL = 10KΩ   30 50 mV
வெப்பம் சார்ந்த RL = 10KΩ     70 mV
குறுக்குச்சுற்று மின்னோட்டம் ISC     ±5   mA
மின் தேக்கச் சுமையோட்டல் CL   வழக்கமானச் சிறப்பியல்புகளைக் காண்க
திறந்த வளைய வெளியீடு மின்மறுப்பு f = 350kHz, IO = 0   2  
மின்வழங்கல்
விவரக்கூற்றிடப்பட்ட மின்னழுத்த நெடுக்கம் VS   1.8   5.5 V
தலா மிகைப்பி அமைதிய மின்னோட்டம் IQ IO = 0   17 25 μA
வெப்பம் சார்ந்த       28 μAV
நிகழ்நிலையாகு நேரம் VS = +5V     100 μs
வெப்ப நெடுக்கம்
விவரக்கூற்றிடப்பட்ட நெடுக்கம்   –40   +125 °C
இயக்க நெடுக்கம்   –40   +150 °C
வைப்பு நெடுக்கம்   –65   +150 °C
வெம்மைத் தடுப்பு θJA         °C/W
SOT23-5     200   °C/W
MSOP-8, SO-8     200   °C/W
DFN-8     50   °C/W
DFN-8     250   °C/W
(1)+150°Cஇல் 300-மணிநேர ஆயுள் சோதனை தோராயமான 1μV சமவாய்ப்புப் பரவல் மாறுபாட்டைக் காண்பித்தது.

முள்ளமைவுகள்

(1)"NC" இணைப்புறா என்பதைக் குறிக்கும்.
(2)வெம்மை நிரப்பிடத்தை V-உடன் இணைக்கவும்.

வழக்கமானச் சிறப்பியல்புகள்
மாறாகக் குறிப்பிடப்படவில்லையெனில், TA = +25°C, VS = +5V மற்றும் CL = 0pF ஆகியவை பொறுந்தும் .

பயனகத் தகவல்
என்பவை ஒரும மிகைப்பு நிலைப்பான மற்றும் எதிர்ப்பாராத வெளியீடு கட்ட எதிர்மாறல் அற்றதாக உள்ளவை. செயல்படு மிகைப்பிகள் மிகக் குறைந்தப் பெயர்ச்சி மற்றும் காலம் மற்றும் வெப்பம் சார்ந்த சுழிய அருகாமை நகர்வு ஆகியவற்றை அளிக்க ஒரு தனியுரிம தன்னியக்க அளவொப்புமை நுட்பத்தை (auto-calibration technique) பயன்படுத்துகின்றன. குறைந்தப் பட்சபப் பெயர்ச்சி மின்னழுத்தம் மற்றும் துல்லியச் செயல்வளிமைக்கு மின் சுற்று மனையமைவு மற்றும் பொறிமுறைச் சூழ்நிலைகள் உகப்புப்படுத்தப்பட வேண்டும். நிகரற்ற மின்கடத்திகளை இணைப்பதன் மூல உருவாகும் வெப்பவிரட்டை சந்திகளில் (thermo-couple junctions) (ஸீபெக் விளைவுகளை) ஏற்படுத்தும் வெப்பச் சரிவுகளை (temperature gradients) தவிர்க்கவும். இந்த வெம்மையேற்படு மின்னழுத்தங்கள் இரண்டு முனையங்களிலும் சமமாக இருக்க உறுதியளித்தால் இவை ரத்தாகப்பட வைக்கப்படலாம். இதர மனையமைவுப் பரிசீலனைகள் கீழ்வருமாறு :
*குறைந்த வெப்பமின் கெழு சூழ்நிலைகளை (நிகரற்ற மாழைகளைத்) தவிர்த்தல் .
*வெப்ப ரீதியாக மின்வழங்கல்கள் மற்றும் இதர வெப்ப மூலங்கள் ஆகியவற்றிலிருந்து உறுப்புகளைத் தனிப்படுத்துதல்.
*செயமிகைப்பி மற்றும் உள்ளீடு சுற்றமைப்புகளை குளிர்வு விசிறிகள் போன்ற காற்றோட்டங்கலிருந்து கவசமிடுதல்.

இவ்வழிமுறைகளைப் பின்பற்றுதல் சந்திகள் வெவ்வேறு வெப்பங்களில் இருக்கும் தகைமையைக் குறைக்கும். இவ்வெப்ப வேறுப்பாடுகள் பயன்படுத்தப்பட்ட மூலதங்களைப் பொறுத்து, 0.1μV/°C அல்லது உயர்ந்த வெப்பமின்விளைவு மின்னழுத்தங்களை ஏற்படுத்தலாம்

இயக்க மின்னழுத்தம் (Operating Voltage)
OPA333 மற்றும் OPA2333 செய்மிகைப்பிகள் +1.8Vஇலிருந்து +5.5V (±0.9V இலிருந்து ±2.75V) ஆன மின்வழங்கல் நெடுக்கங்களில் இயங்குகின்றன. +7Vக்கு மேலான வழங்கல் மின்னழுத்தங்கள் (அறுதிப் பெருமம்) சாதனத்தை நிரந்திரமாக சேதப்படுத்தக் கூடியவை. வழங்கல் மின்னழுத்தம் மற்றும் வெப்பம் ஆகியவற்றிற்கு மாறுப்படும் பண்பளவுகள் இத்தரவுத்தாளில் வழக்கமானச் சிறப்பியல்புகள் பகுதியில் காண்பிக்கப்பட்டுள்ளன.

உள்ளீடு மின்னழுத்தம் (Input Voltage)
OPA333 மற்றும் OPA2333 உள்ளீடு பொதுப்பாங்கு நெடுக்கம் வழங்கல் மின்கிராதிகலிருந்துக்கு அப்பால் 0.1V வரை நீடிக்கிறது. OPA333 இதர மின்கிராதிக்கு மின்கிராதி மிகைப்பிகளில் (rail-to-rail amplifiers) காணாத பிரச்சினைத் தரும் நிலைத்திரிவு மண்டலம் (transition region) இல்லாமல் முழு நெடுக்கத்தை அளிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக உள்ளீடு சாருகை மின்னோட்டம் தோராயமாக 70pA ஆக உள்ளது; எனினும், வழங்கல் மின்கிராதிகளை மீறும் உள்ளீடு மின்னழுத்தங்கள் மிகுதியான மின்னோட்டத்தை உள்ளீடு முள்களுக்கு உள்ளே அல்லது வெளியே பாயச் செய்கின்றன. மின்வழங்களுக்கு அதிகமான கணநேர மின்னழுத்தங்கள் உள்ளீடு மின்னோட்டம் 10mAக்கு வரம்பிடப்பட்டால் சகிக்கப்படுகின்றன. இந்த வரம்புப்பாடு எளிமையாக கீழே காண்பிக்கப்பட்டது போல் ஒரு உள்ளீடு மின் தடையத்தால் சாதிக்கப்படுகிறது.


உள்ளகப் பெயர்ச்சித் திருத்தல் (Internal Offset Correction)
குறிகைப் பாதையில் உள்ள ஒரு காலத்தொடர்ச்சியான 350KHz செய்மிகைப்பியுடன் ஒரு தன்னியக்க அளவோப்புமை நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இம்மிகைப்பி ஒவ்வொரு 8μsஉம் ஒரு தனியுரிம நுட்பத்தால் சுழியத்திருத்தப்படுகிறது (zero-corrected). திறன்துவக்கத்தில் இம்மிகைப்பி குறிப்பிடப்பட்டத் துல்லியத்தைச் சாதிக்க தோராயமாக 100μs தேவைப்படுகிறது.

எதிர்ம மின்கிராதியில் வெளியீடு வீச்சைச் சாதித்தல் (Achieving Output Swing to the Op-Amp Negative Rail)
சிலப் பயனகங்கள் இலிருந்து நேரம் முழு அளவு மின்னழுத்தம் சிறந்தத் துல்லியத்துடன் தேவைப்படுகின்றன. பெரும்பாலுமான ஒற்றை மின்வழங்கள் செய்மிகைப்பிகளில் வெளியீடு குறிகை செய்மிகைப்பி தாழ் வெளியீடு வீசச் வரம்பு பக்கத்த்திஇலுள்ள 0Vஐ அணுகும் போது பிரச்சினைகள் தோன்றுகின்றன.ஒரு நல்ல ஒற்றை மின்வழங்கள் செய்மிகைப்பு ஒற்றை மின்வழங்கல் நிலத்திற்கு (single supply ground) அருகாமையில் வீசும், ஆனால நிலத்தை எட்டாது. OPA333 மற்றும் OPA2333 ஆகியவற்றின் வெளியீடு ஒரு ஒற்றை மின்வழங்கள் மின்திறன் மூலம் மீது நிலத்திற்கு அல்லது அதற்கு சற்றுக் குறைவாக வீச விடப்படுகிறது. இதன் பொருட்டு வேறொரு மின்தடையம் மற்றும் கூடுதலான இன்னும் எதிர்மமான ஒற்றை மின்வழங்கல் மின்திறன் மூலம் தெவைப்படுகிறது. வெளியீட்டிற்கும் இந்தக் கூடுதலான எதிர்ம மின்வழங்களிற்கும் இடையே ஒரு கீழிழுப்பு மின்தடையம் இணைக்கப்படுகிறது, ஆகையால் வெளியீடு வழக்கத்தை விட இன்னும் கீழே இழுக்கப்படும். இது கீழுள்ளப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.


OPA333 மற்றும் OPA2333 ஆகியவை மேற்சொல்லப்பட்ட முறைப்படி எதிர்ம மின்கிராதி அல்லது அதைவிட சற்றுக் குறைவாக வரை வெளியீட்டினை இழுக்க இயலும் வெளியீடு கூற்றுகளைக் கொண்டுள்ளன. இந்த நுட்பம் ஒரு சில குறிப்பிட்ட வெளியீடு கூற்றுகளில் மட்டும் வேலை செய்யும். OPA333 மற்றும் OPA2333 ஆகியவை இந்த நுட்பத்தால் வலுவியங்க சிறப்பியல்பு வர்ணிக்கப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட மின்தடைய மதிப்பு 20kΩ ஆகும். இந்த உள்ளமைவு மின்னோட்ட நுகர்வை பல நூறு மைக்ரோ ஆம்ப் அளவில் அதிகரிக்கூடும். துல்லியம் 0V வரை சிறப்பாக உள்ளது மற்றும் -2mV அளவு குறைவாக உள்ளது. வரம்பிடல் மற்றும் நேரியலின்மை -2mVக்குக் குறைவாக ஏற்படுகிறது மற்றும் வெளியீடு -2mVக்கு மேல் ஓட்டப்பட்டதும் சிறப்பானத் துல்லியம் திரும்பிவிடுகிறது. கீழிழுப்பு மின் தடையத்தைக் குறைத்தல் செய்மிகைப்பியை எதிர்ம மின்கிராதிக்கு இன்னும் கீழ வீச விடுகிறது. 10kΩ வரை குறைவான மின்தடையங்கள் -10mV கீழ் வரை சிறந்தத் துல்லியத்தை சாதிக்கக்கூடும்.

பொதுவான மனையமைவு வழிமுறைகள் (General Layout Guidelines)
நல்ல மனையமைவு செய்முறைப் பழக்கம் எப்பொழுதும் பரிந்துரைக்கப்படுகிறது. மின்தடங்களை குட்டையாக வைக்கவும் மற்றும் இயன்றால் சுற்றுப்பலகை நிலத்தலத்தைப் பயன்படுத்தவும் மற்றும் உறுப்புகளை சாதன முல்களுக்கு அருகாமையில் வைக்கவும். மின்வழங்கல் முல்களுக்குப் பக்கத்தில் ஒரு 0.1μF மின்தேக்கியை வைக்கவும். இந்த வழிமுறைகள் மேம்பட்டச் செயல்வலிமை மற்றும் மின்காந்த இடையூறுப் பாதிப்த்தன்மையை (electromagnetic interference susceptibility) குறைக்கும் நலன்களைப் பெற ஒப்புமைச் சுற்றுக்கு முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். செயல்பாடு மிகைப்பிகள் அவைகளின் வானலை இடையூறு பாதிப்புத்தன்மைகளில் மாறுபடுகின்றன. வானலை இடையூறு பாதிப்புத்தன்மை என்பது இடையூறு செய்யும் வானலைக் குறிகையால் பெயர்ச்சி மின்னழுத்தம் அல்லது ஒருதிசைக் குறிகை மட்டங்களின் மாறுதல்கள் என்பதாக அடையாளம் காணலாம். குறிப்பாக வானலை இடையூற்றைகக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் முந்தையத் தலைமுறைச் சாதங்களை விடக் குறிப்பிடத்தக்கதானக் குறைந்த உணர்மையைப் பிரதிபலிக்கிறது. வலுவான வானலைப் புலன்கள் இருப்பினும் மாறுபடும் பெயர்ச்சி மட்டங்களை உண்டாக்கும்.



கீழுள்ளப் படம் ஒரு சமனி மிகைப்பியின் அடிப்படை உள்ளமைவைக் காண்பிக்கிறது.


ஒரு கீழ்ப்பக்க மின்னோட்டப் பக்கச்சுற்று கண்காணிப்பி (low-side current shunt monitor) கீழுள்ளப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.


RN என்பவை ADS1100ஐ I2C பாட்டையின் இரைச்சிலிருந்து தனிமைப்படுத்த உதவும் இயக்கத்திலுள்ள மின்தடையங்கள். ADS1100 என்பது ஒரு 16-துணுக்கு ஒப்புமைப்பியாக உள்ளதால் ஒரு துல்லியமான மேற்கோள் அதிகபட்சத் துல்லியத்திற்குத் தேவைப்படும். அறுதித் துல்லியம் (absoulte accuracy) தேவையில்லையென்றால் மற்றும் 5V மின்வழங்கல் போதுமான அளவு நிலைப்பாக இருந்தால்,REF3130 விலக்கப்படலாம்.









DFN பொதியம் (DFN Package)
OPA2333 DFN-8 (வேற்று அழைப்பு SON) பொதியத்தில் அளிக்கப்படுகிறது. DFN என்பது பொதியத்தின் அடியில் இரண்டு பக்கத்தில் மட்டும் இழுதுத் தொடுகைகள் உள்ள QFN பொதியம் ஆகும். இந்த இழுதற்றப் பொதியம் (leadless package) பலகைப் பரப்பளவைப் பெருமப்படுத்துகிறது மற்றும் வெம்மை மற்றும் மின்னியல் சிறப்பியல்புகளை ஒரு வெளிப்படு நிரப்பிடம் (exposed pad) மூலம் மேம்படுத்துகிறது.

DFN பொதியங்கள் இயற்பியல்ரீதியாக சிறியவை, சிறியத் திசைவுப் பரப்பளவு கொண்டுள்ளவை, மேம்பட்ட வெம்மை செயல்வலிமை மற்றும் மேம்பட்ட மின்னியல் போலியங்கள் கொண்டுள்ளவை. மேலும், புற இழுதுகள் இல்லாமை மடங்கிய இழுதுகள் பிரச்சினைகளை நீக்குகின்றன.

DFN பொதியம் எளிமையாக செந்தர சுற்றுப்பலகை ஒன்றுக்கூட்டல் நுட்பங்களுடன் ஏற்றப்படலாம். பயனகக் குறிப்பு QFN/SON PCB Even with applications that have low-power Attachment (SLUA271) மற்றும் பயனக அறிக்கை Quad dissipation, the exposed pad must be soldered to the Flatpack No-Lead Logic Packages (SCBA017) ஆகியவற்றைக் காண்க. இவைகளை இணையதளத்திலிருந்து பதிவிறக்கலாம்.

பொதியத்திற்கு அடியில் உள்ள வெளிப்படு இழுதுச்சட்ட வகும நிரப்பிடம் (exposed leadframe die pad) V–உடன் இணைக்கப்படவோ அல்லது இணைப்புறாவாக விடப்பட வேண்டும்.

DFN மனையமைவு வழிமுறைகள் (DFN Layout Guidelines)
DFN பொதியத்திலுள்ள வெளிப்படு இழுதுச்சட்ட வகும நிரப்பிடம் சுற்றுப்பலகையில்லுள்ள வெம்மை நிரப்பிடத்துடன் (PCB thermal pad) சூட்டிணைக்கப்பட வேண்டும். ஒரு உதாரணத்தைக் காட்டும் பொறிமுறை வரையல் இத்தரவுத்தாளின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கூட்டல் செய்முறை வேட்புக்களைப் பொறுத்து மனையமைவில் சீர்த்திருத்தங்கள் தேவைப்படலாம். இத்தரவுத்தாளின் இறுதியிலுள்ளப் பொறிமுறை வரையல்களில் பொதியம் மற்றும் நிரப்பிடத்தின் இயற்பியல் அளவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அமர்வகுதியிலுள்ள துளைகள் விருப்பத்தக்கவை. இவை இழுதுச்சட்ட வகும நிரப்பிடம் மற்றும் சுற்றுப்பலகை வெப்பமடு பகுதி ஆகியவற்றை இணைக்கும் வெம்மை வழிமங்களுடன் பயன்படுத்த நோக்கம் கொண்டவை.

வெளிப்படு நிரப்பிடத்தை சூட்டிணைத்தல் வெம்மைச் சுழற்சி (thermal cycle) , விசைத் தள்ளல் (key push) , பொதியக் கொய்வு (package shear) மற்றும் நிகரான பலகை மட்டச் சோதனைகளில் குறிப்பிடத்தக்கதாக பலகை மட்ட நம்பகத்தை (board-level reliability) மேம்படுத்தும். குறைந்த மின்திறன் விரயம் உள்ளப் பயனகங்களிலும் வெளிப்படு நிரப்பிடம் கட்டுமான உறுதி மற்றும் நீண்டக்கால நம்பகத்திற்காக, சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும்.


பொதியத் தகவல்
உத்தரவிடத்தகுச் சாதனம் நிலைமை(1) பொதிய வகை பொதிய வரையல் முள்கள் பொதிய எண்ணிக்கை சுற்றுச்சூழல் திட்டம் (2) இழுது/பந்துச் சீர்மை ஈரவுணர்மை உச்ச வெப்பம் (3)
OPA2333AID செயல்பாட்டில் SOIC D 8 75 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-வரையறையற்றது
OPA2333AIDG4 செயல்பாட்டில் SOIC D 8 75 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-வரையறையற்றது
OPA2333AIDGKR செயல்பாட்டில் MSOP DGK 8 2500 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
OPA2333AIDGKRG4 செயல்பாட்டில் MSOP DGK 8 2500 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
OPA2333AIDGKT செயல்பாட்டில் MSOP DGK 8 250 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
OPA2333AIDGKTG4 செயல்பாட்டில் MSOP DGK 8 250 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
OPA2333AIDR செயல்பாட்டில் SOIC D 8 2500 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
OPA2333AIDRBR செயல்பாட்டில் SON DRB 8 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA2333AIDRBRG4 செயல்பாட்டில் SON DRB 8 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA2333AIDRBT செயல்பாட்டில் SON DRB 8 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA2333AIDRBTG4 செயல்பாட்டில் SON DRB 8 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA2333AIDRG4 செயல்பாட்டில் SOIC D 8 2500 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA2333SHKJ செயல்பாட்டில் CFP HKJ 8 25 தீர்மானிக்கப்படவுள்ளது TIஐ அழைக்கவும் TIஐ அழைக்கவும்
OPA333AID செயல்பாட்டில் SOIC D 8 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDBVR செயல்பாட்டில் SOT-23 DBV 5 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDBVRG4 செயல்பாட்டில் SOT-23 DBV 5 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDBVT செயல்பாட்டில் SOT-23 DBV 5 250 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDBVTG4 செயல்பாட்டில் SOT-23 DBV 5 250 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDCKR செயல்பாட்டில் SC70 DCK 5 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDCKRG4 செயல்பாட்டில் SC70 DCK 5 3000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDCKT செயல்பாட்டில் SC70 DCK 5 250 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDCKTG4 செயல்பாட்டில் SC70 DCK 5 250 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDG4 செயல்பாட்டில் SOIC D 8 75 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDR செயல்பாட்டில் SOIC D 8 2500 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
OPA333AIDRG4 செயல்பாட்டில் SOIC D 8 2500 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-1-260C-1 ஆண்டு
(1)வர்த்தக நிலைமை மதிப்புகள் கீழ்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன.
செயல்பாட்டில்/ACTIVE: தயாரிப்புச் சாதனம் புதிய வடிவமைப்புகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆயுள்வாங்கல்: இத்தயாரிப்பு நிறுத்தப்படும் என TI அறிவித்துள்ளது; ஆயுட்கால வாங்கல் காலம் அமலில் உள்ளது.
புதிய வடிவமைப்பிற்குப் பரிந்துரையல்ல/NRND: "Not Recommended For New Designs"; ஏற்கனவே உள்ள வாடிக்கையாள்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது; ஆனால் TI இப்பாகத்தை புதிய வடிவமைப்புகளுக்கு பரிந்துரைப்பதில்லை.
முன்பார்வை/PREVIEW: இச்சாதனம் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் உற்பத்தியில் இல்லை.
வழக்கொழியுற்று/OBSOLETE: TI இச்சாதனத்தின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது
தீர்மானிக்கப்படவுள்ளது/TBD: ஈயமற்ற
(2)சுற்றுச்சூழல் திட்டம்/ECO PLAN: திட்டமிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் வகைப்பாடு கீழ்வருமாறு: ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு)/Pb-Free(RoHS); ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு விதிவிலக்கு)/Pb-free (RoHS Excempt) அல்லது பசுமை (இடப்பொருட்குறைப்பு மற்றும் கருநிமிளை, நெடியம் இல்லை)/Green (no Sb, Br).
ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு)-Pb Free (RoHS): TIயின் கலைச்சொற்கள் ஈயமற்றது (Lead-Free அல்லது Pb-Free) அல்லது பசுமை (இடர்ப்பொருட்குறைப்பு மற்றும் கருநிமிளை, நெடியம் இல்லை)-Green (RoHS & No Sb, Br) என்பவை குறைக்கடத்திப் பொருட்கள் அனைத்து ஆறு மூலதனப்பொருட்களுக்கான இடர்ப்பொருட்குறைப்பு வேட்புகளுக்கு (RoHS Requirements) இணங்கும். இது ஈயம், ஓரின மூலதங்களின் எடையின் 0.1%ஐ மீறக்கூடாது ஆகிய வேட்பையும் உட்சேர்க்கும். கூடுதலான தயாரிப்பு இலக்கணங்கத் தகவல்களுக்கு http://www.ti.com/productcontent-ஐ நாடவும். உயர் சூட்டிணைப்பில் வடிவமைக்கப்படும் இடங்களில், TI இயமற்றத் தயாரிப்புகள் குறிப்பிட்டுள்ள ஈயமற்றச் செய்கைகளுக்கு (Pb-free processes) உகுந்ததாகும்.
ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு விதிவிலக்கு)-Pb Free (RoHS Excempt): இவ்வுறுப்பு கீழ்வருமாறு ஏதேனும் விதிவிலக்குகள் கொண்டுள்ளது: 1)ஈயம் சார்ந்த கவிழ்சில்லு சூட்டிணைப் புடைப்புகள் வகுமத்திற்கும் பொதியத்திற்கும் இடையே பயனாகுதல்; 2)ஈயம் சார்ந்த ஒட்டுப்பொருள் வகுமத்திற்கு இழுதுச்சட்டத்திற்கும் இடையே பயனாகுதல். மற்றப்படி உறுப்பு மேல் வரையறுத்துள்ளப்படி ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பிற்கு இணைவொத்தமானது) என கருதலாம்.
பசுமை (இடர்ப்பொருட்குறைப்பு மற்றும் கருநிமிளை, நெடியம் இல்லை)/Green (RoHS & no Sb, Br): TI பசுமை (Green) என்பதை நெடியம் (Bromine) மற்றும் கருநிமிளை (Antimony) சார்ந்த தீத்தடுப்பிகள் (flame retardants) அற்றது (நெடியம் மற்றும் கருநிமிளை ஓரின மூலதங்களின் எடையின் 0.1% சதவிகிதத்தை மீறுவதில்லை) என்பதாக வரையறுக்கிறது.
(3)ஈரவுணர்மை மட்டம், உச்ச வெப்பம் - JEDEC தொழிலக நெறி வகைப்பாடுகளின் படியான ஈரவுணர்மை மட்ட செயல்வரம்பு (MSL rating); உச்ச சூட்டிணைப்பு வெப்பம்
முக்கியத் தகவல் மற்றும் உரிமைத்துரப்பு: இத்தகவல் TIயின் அறிதல் மற்றும் நம்புகையின் பெயரில் தரப்படுகிறது. இத்தகவல் படர்க்கையினர் மூலம் தயார் செயப்பட்டது. ஆகவே, துல்லியத்தின் உத்தரவாதம் அளிக்கப்படுவதில்லை. படர்க்கையினர் வழங்கும் தகவல்களை மேம்பட ஒன்றிணைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. TI துல்லியம் மற்றும் வகைக்குறிப்பு ஆகியவற்றில் முயற்சிகள் செலுத்தி வந்தும், உள்வரும் மூலதங்கள் மற்றும் வேதியங்கள் மீது அழிவுறு சோதனைகள் நடத்துவதும் வேதிப் பகுப்பாய்வு நடத்துவதும் செய்வதில்லை. TI மற்றும் TI வழங்காளர்கள் சில தகவல்களை தனியுரிமத்திற்குரியது என கருதுகின்றனர். ஆகவே CAS எண்கள் மற்றும் மற்ற வரம்புறு தகவல்கள் வெளியிடப்படாமல் இருக்கும்.
TIயின் பொறுப்பேற்றம் TI பாகங்களின் வாங்கல் விலையை ஒருபோதும் மீறாது.

இதர தகுதியுற்றப் OPA2333 வடிவுருக்கள் :
•ஊர்தியியல் (Automotive) : OPA2333-Q1
குறிப்பு : தகுதியுற்ற வடிவுரு வரையறுக்கள் :
ஊர்தியியல் - Q100 சாதனங்கள் சுழிய வழுவை (zero-defect) இலக்காகக் கொண்டு உயர் நம்பக ஊர்தியியல் பயனகங்களுக்குத் தகுதிப்படுத்தப்படுகின்றன.

நாடச்சுருள் தகவல் (Tape and Reel Information)

சாதனம் பொதிய வகை பொதிய வரையல் முள்கள் வழங்கெண்ணிக்கை(SPQ) சுருள் விட்டம் (mm) சுருள் அகலம் W1 (mm) A0 (mm) B0 (mm) K0 (mm) P1 (mm) W (mm) முள்-1 காற்பகுதி
OPA2333AIDGKR MSOP DGK 8 2500 330.0 12.4 5.3 3.3 1.3 8.0 12.0 Q1
OPA2333AIDGKT MSOP DGK 8 250 180.0 12.4 5.3 3.3 1.3 8.0 12.0 Q1
OPA2333AIDR SOIC D 8 2500 330.0 12.4 6.4 5.2 2.1 8.0 12.0 Q1
OPA2333AIDRBR SON DRB 8 3000 330.0 12.4 3.3 3.3 1.1 8.0 12.0 Q2
OPA2333AIDRBT SON DRB 8 250 180.0 12.4 3.3 3.3 1.1 8.0 12.0 Q2
OPA333AIDBVR SOT-23 DBV 5 3000 179.0 8.4 3.2 3.2 1.4 4.0 8.0 Q3
OPA333AIDBVT SOT-23 DBV 5 250 179.0 8.4 3.2 3.2 1.4 4.0 8.0 Q3
OPA333AIDCKR SC70 DCK 5 3000 179.0 8.4 2.2 2.5 1.2 4.0 8.0 Q3
OPA333AIDCKT SC70 DCK 5 250 179.0 8.4 2.2 2.5 1.2 4.0 8.0 Q3
OPA333AIDR SOIC D 8 2500 330.0 12.4 6.4 5.2 2.1 8.0 12.0 Q1

நாடாச்சுருள் பேழை அளவைகள்

*அனைத்து அளவைகளும் பெயரளவு.
சாதனம் பொதிய வகை பொதிய வரையல் முள்கள் வழங்கெண்ணிக்கை(SPQ) நீளம் (mm) அகலம் (mm) உயரம் (mm)
OPA2333AIDGKR MSOP DGK 8 2500 370.0 355.0 55.0
OPA2333AIDGKT MSOP DGK 8 250 195.0 200.0 45.0
OPA2333AIDR SOIC D 8 2500 346.0 346.0 29.0
OPA2333AIDRBR SON DRB 8 3000 346.0 346.0 29.0
OPA2333AIDRBT SON DRB 8 250 190.5 212.7 31.8
OPA333AIDBVR SOT-23 DBV 5 3000 195.0 200.0 45.0
OPA333AIDBVT SOT-23 DBV 5 250 195.0 200.0 45.0
OPA333AIDCKR SC70 DCK 5 3000 195.0 200.0 45.0
OPA333AIDCKT SC70 DCK 5 250 195.0 200.0 45.0
OPA333AIDR SOIC D 8 2500 346.0 346.0 29.0


குறிப்புகள் :
A. அனைத்து நேரியல் அளவைகளும் மில்லிமீட்டர்களில்.
B. இவ்வரையல் முன்னறிவிப்பின்றி மாறத்தக்கது.
C. உடல் அளவைகள் எழுதக நீட்டல் அல்லது நொட்டல் ஆகியவற்றை உட்கொள்ளவில்லை. எழுதக நீட்டல் அல்லது நொட்டல் ஒரு பக்கத்திற்கு 0.15ஐ மீறக்கூடாது.
D. JEDEC MO-178 Variation AA அடியில் விழுகிறது.

வெம்மைத் தகவல்:
இப்பொதியமானது நேரடியாக ஒரு வெளியக வேப்பமடுவுடன் பிணையும் வெளிப்படு வெம்மை நிரப்பிடதத்தைக் கைபிடிக்கிறது. வெம்மை நிரப்பிம் நேரடியாக சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும். சூட்டிணைக்கப்பட்டப் பிறகு, சுற்றுப்பலகை ஒரு வெப்பமடுவாக பயன்படுத்தலாம். மேலும், வெம்மை வழிமங்களின் பயன்பாடு மூலம், வெம்மை நிரப்பிடம் நேரடியாக திட்டப்படத்தில் காண்பிக்கப்பட்ட செப்புத் தளத்துடன் இணைக்கப்படலாம் அல்லது மாறாக சுற்றிப்பலகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பான வேப்பமடுவுடன் பிணைக்கப்படலாம். இவ்வடிவமைப்பு ஒருங்கிணைச்சுற்றிலிருந்து வெப்பப் பரிமாற்றத்தை உகப்புப்படுத்துகிறது
நான்மைத் தட்டை இழுதற்ற (QFN) பொதியம் மற்றும் அதன் நிறைகள் பற்றி மேலும் தகவலிற்கு, பயனக அறிக்கை "QFN/SON PCB Attachment" டெக்ஸஸ் கருவிகள் இலக்கியம் எண் SLUA271 என்பவற்றை நாடவும். இந்த ஆவணம் www.ti.comஇல் கிடைக்கும்.
இப்போதியத்திற்கான வெம்மை நிரப்பிட அளவைகள் கீழுள்ள வரையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள் :
A. அனைத்து நேரியல் அளவைகளும் மில்லிமீட்டர்களில்.
B. இவ்வரையல் முன்னறிவிப்பின்றி மாறத்தக்கது.
C. உடல் அளவைகள் எழுதக நீட்டல் அல்லது நொட்டல் ஆகியவற்றை உட்கொள்ளவில்லை. எழுதக நீட்டல் அல்லது நொட்டல் ஒரு பக்கத்திற்கு 0.15ஐ மீறக்கூடாது.
D. JEDEC MO-230 Variation AA அடியில் விழுகிறது.


குறிப்புகள் :
A. அனைத்து நேரியல் அளவைகளும் மில்லிமீட்டர்களில். அளவைப்பாடு மற்றும் பொறுதிப்பாடு ASME Y14.5M-1994 படியாக.
B. இவ்வரையல் முன்னறிவிப்பின்றி மாறத்தக்கது.
C. சிறு திட்டவரை - இழுதற்றது (SON - Small Outline - No Lead) உள்ளமைவு.
/D\. இப்பொதியமானது பலகையில் ஒரு வெம்மை நிரப்பிடத்திற்கு சூட்டிணைக்கப்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்படு நிரப்பிட அளவைகளுக்கு தயாரிப்புகளின் தரவுத்தாள்களை நாடவும்.
/E\. மாழையிடப்பட்டத் தோற்றங்கள் வழங்குனர் விழைவுகள் மட்டும்; போதியத்தில் இல்லாமல் இருக்கும்
வெம்மைத் தகவல் :

வெம்மைத் தகவல்:
இப்பொதியமானது நேரடியாக ஒரு வெளியக வேப்பமடுவுடன் பிணையும் வெளிப்படு வெம்மை நிரப்பிடதத்தைக் கைபிடிக்கிறது. வெம்மை நிரப்பிம் நேரடியாக சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும். சூட்டிணைக்கப்பட்டப் பிறகு, சுற்றுப்பலகை ஒரு வெப்பமடுவாக பயன்படுத்தலாம். மேலும், வெம்மை வழிமங்களின் பயன்பாடு மூலம், வெம்மை நிரப்பிடம் நேரடியாக திட்டப்படத்தில் காண்பிக்கப்பட்ட செப்புத் தளத்துடன் இணைக்கப்படலாம் அல்லது மாறாக சுற்றிப்பலகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பான வேப்பமடுவுடன் பிணைக்கப்படலாம். இவ்வடிவமைப்பு ஒருங்கிணைச்சுற்றிலிருந்து வெப்பப் பரிமாற்றத்தை உகப்புப்படுத்துகிறது
நான்மைத் தட்டைப் பொதியம் - இழுதற்றது மற்றும் அதன் நிறைகள் பற்றி மேலும் தகவலிற்கு, தொழில்நுட்பச் சுருக்கம் "Quad Flat Package - No Lead and Its Advantages" டெக்ஸஸ் கருவிகள் இலக்கியம் எண் SLMA017 என்பதை நாடவும். இது www.ti.comஇல் கிடைக்கும்.
இப்போதியத்திற்கான வெம்மை நிரப்பிட அளவைகள் கீழுள்ள வரையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு :
அனைத்து நேரியல் அளவைகளும் மில்லிமீட்டர்களில்.


குறிப்புகள் :
A. அனைத்து நேரியல் அளவைகளும் மில்லிமீட்டர்களில்.
B. இவ்வரையல் முன்னறிவிப்பின்றி மாறத்தக்கது.
C. மாறான வடிவமைப்புகளுக்கு IPC-7351 வெளியீடு பரிந்துரைக்கப்படுகிறது.
D. இப்பொதியமானது பலகையில் ஒரு வெம்மை நிரப்பிடத்திற்கு சூட்டிணைக்கப்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வெம்மைத் தகவல்கள், வழிம வேட்புகள், மற்றும் பரிந்துரையான பலகை மனையமைவிற்கு பயனகக் குறிப்பு, "Quad Flat Packages", டெக்ஸஸ் கருவிகள் இலக்கியம் எண் SCBA017, SLUA271 மற்றும் தயாரிப்புகளின் தரவுத்தாள்களை நாடவும். இந்த ஆவணம் www.ti.comஇல் கிடைக்கும்.
E. சரிவக சுவர்கள் (trapezoidal walls) கொண்டுள்ள ஊடொளி வெட்டுத் திறப்புகள் (laser cut openings) மற்றும் வட்டப்படு முனைகள் (rounded corners) சிறந்த சூட்டிணைப் பசை விடுவிப்பை (solder paste release) அளிக்கிறது. வரையச்சு வடிவமைப்புப் பரிசீலனைகளுக்கு IPC 7525ஐ நாடவும்.
F. பரிந்துரையான சூட்டிணை மறைப்புப் பொறுதிகளுக்கு மற்றும் வழிம மூடல் (via tenting) பரிந்துரைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் பலகைப் புனைவகத்தைத் தொடர்புக்கொள்ள வேண்டும்.


குறிப்புகள் :
A. அனைத்து நேரியல் அளவைகளும் மில்லிமீட்டர்களில். அளவைப்பாடு மற்றும் பொறுதிப்பாடு ASME Y14.5M-1994 படியாக.
B. இவ்வரையல் முன்னறிவிப்பின்றி மாறத்தக்கது.
/C\. உடல் அளவைகள் எழுதக நீட்டல் அல்லது நொட்டல் ஆகியவற்றை உட்கொள்ளவில்லை. எழுதக நீட்டல் அல்லது நொட்டல் ஒரு பக்கத்திற்கு 0.15ஐ மீறக்கூடாது.
/D\. உடல் அகலம் இடையிழுது நீட்டலை (interlead-flash) உட்கொள்ளவில்லை. இடையிழுது நீட்டல் ஒரு பக்கத்திற்கு 0.50ஐ மீறக்கூடாது .
E. JEDEC MO-187 variation AA அடியில் விழுகிறது.


குறிப்புகள் :
A. அனைத்து நேரியல் அளவைகளும் மில்லிமீட்டர்களில்.
B. இவ்வரையல் முன்னறிவிப்பின்றி மாறத்தக்கது.
/C\. உடல் அளவைகள் எழுதக நீட்டல் (mould flash , நொட்டல் (protrusion) அல்லது வாயில் சிம்பு (gate burr) ஆகியவற்றை உட்கொள்ளவில்லை. எழுதக நீட்டல், நொட்டல் அல்லது வாயில் சிம்பு ஒரு பக்கத்திற்கு 0.15ஐ மீறக்கூடாது.
/D\. உடல் அகலம் இடையிழுது நீட்டலை (interlead-flash) உட்கொள்ளவில்லை. இடையிழுது நீட்டல் ஒரு பக்கத்திற்கு 0.17 (0.43)ஐ மீறக்கூடாது .
E. JEDEC MS-012 variation AA அடியில் விழுகிறது.


குறிப்புகள் :
A. அனைத்து நேரியல் அளவைகளும் அங்குலங்களில் (மில்லிமீட்டர்களில்).
B. இவ்வரையல் முன்னறிவிப்பின்றி மாறத்தக்கது.
C. இப்பொதியம் ஒரு மாழை மூடி கொண்டு காற்றுப்புகாநிலையாக அடைக்கப்படுகிறது. (hermetically sealed)
D. முனையங்கள் தங்க முலாமிடப்படும்.