பதிவாம்

ஒப்புமைச் சாதனங்கள் (Analog Devices)
ADF4002கட்டவுணரி/அலைவெண்ணுருப்பி (Phase Detector/Frequency Synthesizer)

அம்சங்கள்
*400MHz பட்டையகலம்
*2.7 - 3.3V மின்வழங்கல்
*தனிப்பட்ட மின்னூட்டவிறைப்பி மின்வழங்கல்(Charge Pump Power Supply) 3V முறைமைகளில் விரிவான இயைபு மின்னழுத்தத்தை (extended tuning voltage) அனுமதிக்கின்றது
*நிரல்படு மின்னூட்டவிறைப்பி மின்னோட்டங்கள்
*3-மின்கம்பி தொடர்நிலை இடைமுகம்
*எண்ணியல் மற்றும் ஒப்புமை பூட்டுணர் (lock detect)
*வன்பொருள் மற்றும் மென்பொருள் திறனகற்றப் பாங்கு (power down mode)

பயனகங்கள்
*கடிகைப் பதனீட்டு
*கடிகை உற்பத்தி
*இடையலை உள்ளகவலைவு (IF LO) உற்பத்தி
*3-மின்கம்பி தொடர்நிலை இடைமுகம்
*எண்ணியல் மற்றும் ஒப்புமை பூட்டுணர் (lock detect)
*வன்பொருள் மற்றும் மென்பொருள் திறனகற்றப் பாங்கு (power down mode)

பொது விவரம்
ADF4002 என்பது கம்பியில்லாப் பெறுவிகள் மற்றும் செலுத்திகளில் மேல்மாற்றம் அல்லது கீழ்மாற்ற பிரிகூறுகளின் உள்ளக அலைப்பிகளைச் செயல்முறைப்படுத்தும் அலைவெண்ணுருப்பி ஆகும். இதில் ஒரு தாழிரைச்சல் எண்ணியல் கட்டவலைவெண்ணுரரி, ஒரு துல்லியமான மின்னூட்டிறைப்பி, ஒரு நிரல்படு மேற்கோள் பிரிப்பி மற்றும் நிரல்படு N-வகுப்பி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 14-துணுக்கு மேற்கோள் எண்ணி (R-எண்ணி) கட்டவலைவெண்ணுணரி உள்ளீட்டிலிருந்து தேர்வு செய்யத்தகு REFIN அலைவெண்களை அனுமதிக்கின்றது. உருப்பி ஒரு வெளியக வளைய வடிப்பியுடன் பயன்படுத்தப்பட்டால், ஒரு முழு கட்டவடையை (PLL) செயல்முறைப்படுத்தலாம். Rஉம் Nஉம் 1ஆக நிரல்படுத்தப்பட்டால், இப்பாகத்தை ஒரு தனியுருவமமான கட்டவலைவெண்ணுணரி மற்றும் மின்னூட்டிறைப்பி ஆகியதாகப் பயன்படுத்தலாம்.

செயல்வரம்புகள்
AVDD = DVDD =3V±10%, AVDD ≤ VP ≤ 5.5V, AGND = DGND = CPGND, RSET = 5.1kΩ, dBm 50Ωற்கு மேற்கோள்ளிடப்பட்டுள்ளது, TA = TMAXஇலிருந்து TMIN வரை, மாறாக குறிப்பிடவில்லையெனில் பொறுந்தும்
பண்பளவு
B வடிவுரு
அலகு சோதனைச் சூழ்நிலை
சிறுமம் வழக்கம் பெருமம்
வானலைச் சிறப்பியல்புகள்
வானலை உள்ளீடு உணர்மை -10   0 dBm உள்ளீடு சுற்றிற்கான படத்தைக் காண்க
வானலை உள்ளீடு அலைவெண் (RFIN) 5   400 MHz  
REFIN சிறப்பியல்புகள்
REFIN உள்ளீடு அலைவெண் 20   300 MHz REFIN < 20MHz, விளிம்பு வீதம் > 50/μs
REFIN உள்ளீடு உணர்மை (குறிப்பு 2) 0.8   VDD Vp-p AV2/2இல் சாருகையானது (குறிப்பு 3)
REFIN உள்ளீடு மின்தேக்கம்     10 pF  
REFIN உள்ளீடு மின்னோட்டம்     ±100 μA  
கட்டவுணரி
கட்டவுணரி அலைவெண் (குறிப்பு 4)     104 MHz ABP = 0, 0 (2.9ns பின்னடிப்புத் தடுப்பு துடிப்பகலம்)
மின்னூடவிறைப்பி
மின்னூட்டவிறைப்பி மடு/மூல மின்னோட்டம் ICP - உயர் மதிப்பு   5   mA RSET = 5.1 kΩஉடன்
மின்னூட்டவிறைப்பி மடு/மூல மின்னோட்டம் ICP - உயர் மதிப்பு   625   mA  
மின்னூட்டவிறைப்பி மடு/மூல மின்னோட்டம் ICP - அறத்தனி துல்லியம்   2.5   % RSET = 5.1 kΩஉடன்
மின்னூட்டவிறைப்பி மடு/மூல மின்னோட்டம் ICP - RSET நெடுக்கம் 3   11 செயற்கூறு தாழ் (function latch) விவரப்படத்தைக் காண்க
மின்னூட்டவிறைப்பி மடு/மூல மின்னோட்டம் ICP - மூன்றுநிலை மின்கசிவு   1   nA TA = 25°C
மின்னூட்டவிறைப்பி மடு/மூல மின்னோட்டம் ICP எதிர் மின்னூட்டவிறைப்பி மடு/மூல மின்னழுத்தம் VCP   1.5   % 0.5 V ≤ VCP ≤ VP − 0.5 V
மின்னூட்டவிறைப்பி மடு மற்றும் மூல மின்னோட்டப் பொறுத்தம்   2   % 0.5 V ≤ VCP ≤ VP − 0.5 V
மின்னூட்டவிறைப்பி மடு மற்றும் மூல மின்னோட்டப் பொறுத்தம்   2   % 0.5 V ≤ VCP ≤ VP − 0.5 V
மின்னூட்டவிறைப்பி மடு/மூல மின்னோட்டம் ICP எதிர் வெப்பம்   2   % VCP = VP/2
ஏரண உள்ளீடுகள்
VIH - உள்ளீடு உயர் மின்னழுத்தம் 1.4     V  
VIL - உள்ளீடு தாழ் மின்னழுத்தம்     0.6 V  
CINH, IINL - உள்ளீடு உயர், தாழ் மின்னோட்டம்     ±1 μA  
IIN - உள்ளீடு மின்தேக்கம்     10 pF  
ஏரண வெளியீடுகள்
VOH - வெளியீடு உயர் மின்னழுத்தம் 1.4     V திறந்த வடிவாய் வெளியீடு தேர்வு, 1 kΩ மேலிழு மின்தடையம் 1.8Vற்கு
VOH - வெளியீடு உயர் மின்னழுத்தம் VDD − 0.4     V நிரப்புமாழையுயிரக (CMOS) வெளியீடு தேர்வு
VOH - வெளியீடு உயர் மின்னழுத்தம் VDD − 0.4     V  
IOH     100 μA  
VOL - வெளியீடு தாழ் மின்னழுத்தம்     0.4 V IOL = 500 μA
மின்வழங்கிகள்
AVDD 2.7   3.3 V  
DVDD AVDD        
VP AVDD   5.5 V AVDD ≤ VP ≤ 5.5V
IDD (குறிப்பு 5) (AIDD + DIDD)   5.0 6.0 V  
IP     0.4 V mA
திறனகற்ற (Power Down) பாங்கு   1   V mA
இரைச்சல் சிறப்பியல்புகள்
நெறிப்படுத்தப்பட்ட இரைச்சல் தரை (குறிப்பு 6)   −222   dBc/Hz  

குறிப்பு 1: இயக்க வெப்ப நெடுக்கம் (B வடிவுரு) −40°C இலிருந்து +85°C ஆகும்.
குறிப்பு 2: AVDD = DVDD = 3V.
குறிப்பு 3: மாறுதிசை பிணைப்பு (AC Coupling) AVDD/2 சாருகையை உறுதிப்படுத்துகிறது.
குறிப்பு 4: வடிவமைப்பு மூலம் உத்திரவாதம். மாதிரிச் சோதனை மூலம் இணக்கம்.
குறிப்பு 5: TA = 25°C; AVDD = DVDD = 3V; RFIN = 350MHz; ஏதேனும் ஏற்பாடில் (25°C, 3.0 V) mAஇல் 2.35 + 0.0046 (REFIN) + 0.0062 (RF) என்கிற வாய்ப்பாடு மூலம் அளிக்கப்படுகிறது. RF அலைவெண் மற்றும் REFIN அலைவெண் MHzஇல்.
குறிப்பு 6: நெறிப்படுத்தப்பட்ட கட்டவிரைச்சல் தரை (Normalized Phase Noise Floor) மின்னழுத்தவியக்கு அலைப்பியின் வெளியீட்டில் உள்பட்டை கட்டவிரைச்சலை (In-band Phase Noise) அளந்து, 20logN (இங்கு N என்பது வகுப்பியின் மதிப்பு) மற்றும் 10logFPFD. ஆகியவை கழித்துவிட்டு பெறப்படுகிறது. அதாவது PNSYNTH = PNTOT − 10logFPFD − 20logN.

காலவியல் சிறப்பியல்புகள் (Timing Characteristics)
AVDD = DVDD =3V±10%, AVDD ≤ VP ≤ 5.5V, AGND = DGND = CPGND, RSET = 5.1kΩ, dBm 50Ωற்கு மேற்கோள்ளிடப்பட்டுள்ளது, TA = TMAXஇலிருந்து TMIN வரை, மாறாக குறிப்பிடவில்லையெனில் பொறுந்தும்
பண்பளவு வரம்பு (B வடிவுரு) (குறிப்பு 2) அலகு சோதனைச் சூழ்நிலை
t1 10 ns சிறுமம் DATA (தரவு)லிருந்து CLK (கடிகை) ஆயத்தநேரம்
t2 10 ns சிறுமம் DATA (தரவு)லிருந்து CLK (கடிகை) பிடிநேரம்
t3 25 ns சிறுமம் CLK (கடிகை) உயர் நேரம்
t4 25 ns சிறுமம் CLK (கடிகை) தாழ் நேரம்
t5 25 ns சிறுமம் CLK (கடிகை)இலிருந்து LE (தாழிடு செயலாக்கு) ஆயத்தநேரம்
t6 25 ns சிறுமம் LE (தாழிடு செயலாக்கு) துடிப்பகலம்
குறிப்பு 1: வடிவமைப்பு மூலம் உத்திரவாதம். ஆனால் உற்பத்திச் சோதனை செய்யப்படவில்லை.
குறிப்பு 2: இயக்க வெப்ப நெடுக்கம் (B வடிவுரு) −40°C இலிருந்து +85°C ஆகும்.


அறுதிப் பெரும செயல்வரம்புகள்
பண்பளவு செயல்வரம்பு
AVDDஇலிருந்து நிலம் (குறிப்பு 1) −0.3 V இலிருந்து +3.6 V
AVDDஇலிருந்து DVDD −0.3 V இலிருந்து +0.3 V
VPPஇலிருந்து நிலம் −0.3 V இலிருந்து +5.8V
VPPஇலிருந்து AVDD −0.3 V இலிருந்து +5.8V
எண்ணியல் உள்வெளியிலிருந்து இலிருந்து நிலம் −0.3 V இலிருந்து VDD + 0.3V
ஒப்புமை உள்வெளியிலிருந்து இலிருந்து நிலம் −0.3 V இலிருந்து VP + 0.3V
REFIN, RFINA, RFINB, உள்வெளியிலிருந்து இலிருந்து நிலம் −0.3 V இலிருந்து VDD + 0.3V
இயக்க வெப்ப நெடுக்கம் - தொழிலகம் (B வடிவுரு) −40°C இலிருந்து +85°C
வைப்பு வெப்ப நெடுக்கம் - தொழிலகம் (B வடிவுரு) −65°C இலிருந்து +125°C
பெருமச் சந்தி வெப்பம் 150°C
இழுது வெப்பம், சூட்டிணைப்பு  
  வளிம நிலை (60 நொடி) 215°C
  அகச்சிவப்பு (15 நொடி) 220°C
திரிதடைய எண்ணிக்கை  
  நிரப்பு மாழையுயிரகம் 6425
  இர்முனை 303
குறிப்பு 1: நிலம் (GND) = AGND = DGND = 0V
எச்சரிக்கை: அறுதிப் பெரும செயல்வரம்புகள் எனப்படுபவை வளைப்பு செயல்வரம்புகள் மட்டும் ஆனவை. செயல்கூறு இயக்கம் பரிந்துரைக்கப்பட்டச் சூழ்நிலைகளுக்கு புறமாக உட்கிடையானதல்ல. அறுதிப் பெரும செயல்வரம்புகளில் நீண்ட நேரம் உட்படுத்தல் சாதனத்தின் நம்பகத்தை பாதிக்கும். இது ஒரு உயர் செயல்வலிமை வானலை ஒருங்கிணைச்சுற்று ஆகும். இதன் நிலைமின்னிறகச் செயல்வரம்பு < 2kV மற்றும் நிலைமின்னிறக்க உணர்மையுடையது. கையாளுவதில் மற்றும் ஒன்றுக்கூட்டலில் தகுந்த முன்னெச்சரிக்கைகள் கைப்பிடிக்கப்பட வேண்டும்.
வெம்மைச் செயல்வரம்புகள்
வெம்மை மறுப்பு.
பொதிய வகை θJA அலகு
TSSOP 150.4 °C/W
LFCSP 122 °C/W

நிலைமின்னிறக்க எச்சரிக்கை: : நிலைமின்னிறக்க உணர்மைச் சாதனம். மின்னூட்டப்பட்டச் சாதனங்கள் மற்றும் சுற்றுப்பலகைகள் கண்டறியப்படாமலேயே மின்னிறக்கம் அடையலாம். இச்சாதனத்தில் படைப்புர்மை அல்லது தனியுரிம காபந்து சுற்றமைப்பு அம்சமாகக் கொண்டிருந்தாலும் உயர் நிலைமின்னிறக்கத்தால் சேதம் அடையலாம். எனவே, செயல்வலிமை சீர்க்குலைவு அல்லது செயற்கூறு இழப்பைத் தடுப்பதற்கு தகுந்த நிலைமின்னிறக்க முன்னெச்சரிக்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.


முள் செயற்கூறு விவரம்
முள் எண் நினைவுமொழி விவரம்
TSSOP LFCSP
1 19 RSET இம்முள்ளிற்கும் PGNDற்கும் ஒரு மின்தடையத்தை இணைப்பது மின்னூட்டவிறைப்பியின் மின்னோட்டத்தைப் பெருமப்படுத்தும். RSET முள்ளில் உள்ள பெயரளவு மின்னழுத்தம் 0.66V ஆகும். ICP மற்றும் RSET என்பவற்றிற்கு உள்ள தொடர்பு: ICP = 25.5/RSET, இங்கு RSET = 5.1kΩ; ICP MAX = 5 mA.
2 20 CP மின்னூட்டவிறைப்பி வெளியீடு; செயலாக்கப்படும் போது, ±ICP அளவான மின்னோட்டம் வெளியக வளைய வடிப்பிக்கு வழங்குகிறது, அது தன் பங்காக வெளியக மின்னழுத்தவியக்க அலைப்பியை ஓட்டுகிறது.
3 1 CPGND மின்னூட்டவிறைப்பி நிலம்; இது மின்னூட்டவிறைப்பியின் நிலத் திரும்பு பாதை ஆகும்.
4 2, 3 AGND ஒப்புமை நிலம்; இது வானலை உள்ளீடின் நிலத் திரும்பு பாதை ஆகும்.
5 4 RFINB வானலை உள்ளீடின் நிரப்பு உள்ளீடு. இப்புள்ளி நிலத்திலிருந்து ஒரு சிறிய புறவழி மின்தேக்கி, வழக்கமாக 100pF மூலம் பிணைநீக்கப்பட வேண்டும்.
6 5 RFINA வானலை உள்ளீடின் உள்ளீடு. இக்குறுங்குறிகை உள்ளீடு வெளியக மின்னழுத்தவியக்க அலைப்பியுடன் மாறுதிசை பிணைநீக்கப்பட வேண்டும்.
7 6, 7 AVDD ஒப்புமை மின்வழங்கல். 2.7 - 3.3V நெடுக்கத்தில் இருக்கக்கூடியது; ஒப்புமை நிலத்தளத்திற்கு பிணைநீக்கு மின்தேக்கிகள் AVDD முள்ளிற்கு முடிந்தவரை அருகாமையில் அமைக்கப்பட வேண்டும். AVDD DVDDயுடன் சமமதிப்பு கொள்ள வேண்டும்.
8 8 REFIN மேற்கோள் உள்ளீடு; இது VDD/2 என பெயரளவு கருவுணர் மற்றும் 100 kΩ என சமவலு ஒருதிசை மின்துடுப்பு கொண்டுள்ள நிறப்புமாழையுயிரக உள்ளீடு (CMOS Input). இவ்வுள்ளீடை திரிதடைய மட்டவிடை (TTL) அல்லது நிரப்பு மாழையுயிரக (CMOS) படிகவலைப்பி மூலம் ஓட்டப்படலாம்.
9 9, 10 DGND எண்ணியல் நிலம்.
10 11 CE சில்லு செயலாக்கம்; இம்முள்ளில் ஏரணத் தாழ் மட்டம் சில்லை திறனகற்றுதகிறது மற்றும் மின்னூட்டவிறைப்பியை மூன்றுநிலைப்படுத்துகிறது. இம்முள்ளை உயர் மட்டத்திற்கு எடுத்து செல்லுதல், திறனகற்றத் துணுக்கு F2 நிலைமையைப் பொறுத்து, சில்லை திறன்படுத்திகிறது.
11 12 CLK தொடர்நிலைக் கடிகை உள்ளீடு; தொடர்நிலைக் கடிகை தொடர்நிலைத் தரவைப் பதிவகங்களுக்குள் கடிகையிட பயன்படுத்தப்படுகிறது. தரவானது 24-துணுக்கு பெயர்ச்சிப் பதிவகத்திற்குள் கடிகையின் எழு விளிம்பில் தாழிடப்படுகிறது. இது ஒரு உயர் மின்மறுப்பு நிறப்பு மாழையுயிரக (CMOS) உள்ளீடு ஆகும்.
12 13 CLK தொடர்நிலைத் தரவு உள்ளீடு; உள்ளீடு தரவு பெருமமதிப்பிலக்கம் முதலாக ஏற்றப்படுகிறது. இரண்டு சிறும்மதிப்பிலக்கங்கள் கட்டுப்பாட்டுத் துணுக்குகள் (control bits) ஆகும். இது ஒரு உயர் மின்மறுப்பு நிறப்பு மாழையுயிரக (CMOS) உள்ளீடு ஆகும்.
13 14 LE தாழிடு செயலாக்கம். நிறப்பு மாழையுயிரக (CMOS) உள்ளீடு. LE உயர செல்லும் போது, பெயர்ச்சிப் பதிவகங்களில் உள்ள தரவு நான்கில் ஏதேனும் ஒரு தாழில் ஏற்றப்படுகிறது. தாழ் கட்டுப்பாட்டுத் துணுக்குகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறது.
14 15 MUXOUT பன்மைப்பி வெளியீடு. இது பூட்டுணர் (lock detect), படிப்பெருகுறு வானலை வெளியீடு (scaled RF output) அல்லது படிப்பெருகுறு மேற்கோள் அலைவெண் (scaled reference frequency) ஏதேனும் வெளியகமாக அணுகும் பொருட்டு தேர்வு செய்யப்படுகிறது.
15 16, 17 DVDD எண்ணியல் மின்வழங்கல். 2.7 - 3.3V நெடுக்கத்தில் இருக்கக்கூடியது; ஒப்புமை நிலத்தளத்திற்கு பிணைநீக்கு மின்தேக்கிகள் இம்முள்ளிற்கு முடிந்தவரை அருகாமையில் அமைக்கப்பட வேண்டும். DVDD AVDDயுடன் சமமதிப்பு கொள்ள வேண்டும்.
16 18 VP மின்னூட்டவிறைப்பி மின்வழங்கல். இது VDDக்கு சமம் அல்லது மேல் இருக்க வேண்டும். VDD 5V ஆக உள்ள முறைமைகளில் இது 5.5V ஆக நிறுவமைக்கப்பட்டு 5V இசைவிப்பு நெடுக்கம் (tuning range) கொண்டுள்ள மின்னழுத்தவியக்க அலைப்பியை ஓட்டலாம்.


இயக்கக் கோட்பாடு

மேற்கோள் உள்ளீடு செயற்கூறு

மேற்கோள் உள்ளீடு கீழுள்ளப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.


நிலைமாற்றிகள் SW1, SW2 வழக்கமாக மூடப்படுபகவை. SW3 வழக்கமாக திறந்தப்படுபவை. திறனகற்றம் (power down) தூண்டப்படும் போது, SW3 மூடப்பட்டு SW1, SW2 திறக்கப்படுகிறது. இது திறனகற்றத்தின் போது, REFIN முள்ளின் சுமையிடலை தவிர்க்கிறது.

வானலை உள்ளீடு செயற்கூறு

மேற்கோள் உள்ளீடு கீழுள்ளப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு வேறுபாடு இரட்டையால் (differential pair) பின்தொடரப்பட்டு N-எண்ணியிற்குத் தேவையான மின்னோட்டப்பாங்கு கடிகை மட்டங்களை (CML clock levels) உற்பத்தி செய்கின்றது.

N-எண்ணி

நிரப்புமாழையுயிரக (CMOS) N-எண்ணியானது கட்டவடை பின்னூட்டு எண்ணியில் (feedback divider counter) அகல நெடுக்க வகுத்தல் விகிதத்தை (wide range division ratio) அனுமதிக்கின்றது. 1இலிருந்து 8191 வரையிலான வகுத்தல் விகிதம் அனுமதிக்கப்படுகிறது.

N, R தொடர்பு: N-எண்ணியால் மேற்கோள் அலைவெண் வகுத்தல் R இடைவெளி கொண்டுள்ள வெளியீடு அலைவெண்களை உற்பத்தி செய்ய சாத்தியமாகிறது. மின்னழுத்தவியக்க அலைப்பியின் அலைவெண்:

fVCO = N x fREFIN/R

என்கிற சமன்பாட்டினால் உறுதிசெய்யப்படுகிறது. இங்கு fVCO என்பது வெளியக மின்னழுத்தவியக்க அலைப்பியின் அலைவெண்; N என்பது 13-துணுக்கு இரும (1-8191) எண்ணியின் முன்நிறுவமை வகுத்தல் விகிதம் (preset divide ratio); fREFIN என்பது வெளியக மேற்கோள் அலைவெண் அலைப்பி.


R-எண்ணி

14-துணுக்கு கொண்டுள்ள R-எண்ணியானது உள்ளீடு மேற்கோள் அலைவெண்ணை வகுக்து கட்டவலைவெண்ணுணரிக்கு கடிகையாக அளிக்க அனுமதிக்கின்றது. 1லிருந்து 16,383 வரையிலான வகுத்தல் விகிதங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

கட்டவலைவெண்ணுணரி மற்றும் மின்னூட்டவிறைப்பி (Phase Frequency Detector, Charge Pump)

கட்டவலைவெண்ணுணரியானது தன் உள்ளீடுகளை R-எண்ணி மற்றும் N-எண்ணியிலிருந்து ஏற்று அவைகளின் கட்டம் மற்றும் அலைவெண்ணி வேறுபாடு ஆகியவற்றிற்கு நேர்விகிதமான ஒரு வெளியீடினை உற்பத்தி செய்கிறது. இதற்கான திட்டப்படம் கீழ்வருமாறு:


கட்டவலைவெண்ணுணரியானது பின்னடிப்பு எதிர்ப்புத் துடிப்பின் (anti-backlash pulse) அகலத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு நிரல்படு சுணக்க உறுப்பினை (programmable delay element) கொண்டுள்ளாது. இத்துடிப்பானது கட்டவலைவெண்ணுணரி மாற்றுச்சார்பில் உயிரிலி மண்டலத்தை (dead zone) தவிர்த்து கட்டவிரைச்சல் மற்றும் மேற்கோள் துருத்தங்கள் (phase noise, reference spurs)ஆகிவற்றினை சிறுமப்படுத்துகிறது. மேற்கோள் எண்ணி தாழில் உள்ள இரண்டு துணுக்குகள்- ABP2 மற்றும் ABP1துடிப்பின் அகலத்தைக் கட்டுப்படுத்துகின்றன. சிறுமமான பின்னடிப்பு எதிர்ப்புத் துடிப்பு பரிந்துரைக்கப்படுவதில்லை.

பன்மைப்பி வெளியீடு மற்றும் பூட்டுணர் (MUXOUT, LOCK DETECT)

ADF4002இன் பன்மைப்பியானது பயனரை சில்லின் வெவ்வேறு உள்ளகப் பகுதிகளை அணுக அனுமதிக்கின்றது. பன்மைப்பி வெளியீடின் நிலையை செயற்கூறு தாழின் (function latch) M3, M2, M1 துணுக்குகளால் கட்டுப்படுத்த இயல்கிறது.


இதற்கான மெய்யட்டவணை கீழ்வரும் படத்தில் காணப்படுகிறது.


பூட்டுணர் (LOCK DETECT)

பன்மைப்பி வெளியீடினை இரண்டு வகைகளான பூட்டுணர்களுக்காக நிரல்பட இயலும் - ஒப்புமை பூட்டுணர் (analog lock detect) மற்றும் எண்ணியல் பூட்டுணர் (digital lock detect).

எண்ணியல் பூட்டுணர் உயர்மட்ட செயல்பாடு (active high) குறிகையாகும். R-எண்ணியில் உள்ள LDP துணுக்கு 0 ஆக நிறுவமைக்கும் போது, கட்டப்பிழை மூன்று அடுத்தடுத்த கட்டவுணர் சுழற்சிகளில் (phase detect cycles) 15nsக்குக் குறைவாக இருந்தால், எண்ணியல் பூட்டுணர் உயர்மட்டத்திற்கு செல்லும். LDP 1 ஆக நிறுவமைக்கப்பட்டால், ஐந்து அடுத்தடுத்த 15nsக்குக் குறைவான கட்டப்பிழை உள்ள சுழற்சிகளில் பூட்டுணரினை உயர்நிலையில் நிறுவமைக்கத் தேவைப்படுகிறது. இது 25nsக்கு மேலான கட்டப்பிழை ஏதேனும் பின்வரும் கட்டவுணர் சுழற்சியில் பெறும்வரை உயர்மட்டத்தில் நீடிக்கிறது. 10MHzக்கு மேலான கட்டவலைவெண்ணுணரி அலைவெண்களில் ஒப்புமை பூட்டுணர் சிறிய துடிப்பகலங்கள் காரணத்தால் இன்னும் துல்லியமானது.

N-தடம், திறந்த வடிவாய், ஒப்புமை பூட்டுணர் என்பவை 10kΩ பெயரளவான வெளியக மேலிழுப்பு மின்தடையத்தால் இயக்கப்பட வேண்டும்.

உள்ளீடு பெயர்ச்சிப் பதிவகம் (Input Shift Register)

ADF4002இன் எண்ணியல் பிரிவானது ஒரு 24-துணுக்கு உள்ளீடு பெயர்ச்சிப் பதிவகம், ஒரு 14-துணுக்கு R-எண்ணி மற்றும் 13-துணுக்கு N-எண்ணி ஆகியவற்றினை உட்கொண்டுள்ளது. தரவு பெருமமதிப்புத் துணுக்கு மதலாக கடிகையிடப்படுகிறது.

C2, C1 மெய்யட்டவணை:
கட்டுப்பாட்டுத் துணுக்குகள் தரவுத் தாழ்
C2 C1
0 0 R-எண்ணி
0 1 N-எண்ணி
1 0 செயற்கூறுத் தாழ் (function latch)
1 1 முன்னமைவுத் தாழ்(initialization latch)

செயற்கூறுத் தாழ் (Function Latch)

C2, C1 1, 0 ஆக நிறுவமைக்கப்படும் போது, சில்லடை செயற்கூறு தாழ் நிரல்படுத்தப்படுகிறது. கீழுள்ளப் படத்தில் தரவின் வார்ப்புரு காண்பிக்கப்பட்டுள்ளது.


எண்ணி மீளமைவு: DB2 (F1) என்பது எண்ணியின் மீளமைவுத் துணுக்கு. இது 1ஆக நிறுவமைக்கப்பட்டால், R மற்றும் N எண்ணிகள் மீளமைக்கப்படும். இயலியக்கத்திற்கு இத்துணுக்கை 0ஆக நிறுவமைக்கவும். திறன்தொடங்கும் போது F1 செயலிழக்கச் செய்யப்பட வேண்டும் (0ஆக நிறுவமைக்கப்பட வேண்டும்). பிறகு N-எண்ணியானது R-எண்ணியின் அருகாமையில் எண்ணத் தொடரும் - பெருமமானப் பிழை ஒரு முன்னளவுப்பெருக்கி (prescaler) சுழற்சி ஆகும்.

திறனகற்றம்: DB3 (PD1) மற்றும் DB21 (PD2) நிரல்படு திறனக்கற்றப் பாங்குகளை அளிக்கின்றன. இத்துணுக்குகள் CE முள்ளால் செயலாக்கப்படுகின்றன.

CE தாழ்ந்திருந்தால், சாதனம் உடனடியாக PD2, PD1 நிலைகளைக் கருதாமல் செயலிழக்கப்படுகிறது. நிரல்படு ஒத்தியங்கா பாங்கில் (programmed synchronous power down), துணுக்கு PD1இல் 1 தாழிட்டப்பட்டதும், PD2வில் 0 ஏற்றப்பட்டிருந்தால், சாதனம் உடனடியாக திறனகலும்.

நிரல்படு ஒத்தியங்கு பாங்கில் (programmed synchronous power down), சாதனத்தின் திறனகற்றம் விருப்பமற்ற அலைவெண் துள்ளல்களைத் தடுக்க, மின்னூட்டவிறப்பியால் வாயிலிடப்படுகிறது. PD1இல் 1 எழுதி திறனகற்றம் செயலாக்கப்படும் போது (PD2இல் 1 ஏற்றப்படும் நிபந்தனையில்), சாதனம் அடுத்த மின்னூட்டவிறைப்பி நிகழ்வில் திறனகலும்.

திறனகற்றம் செயற்பத்தப்படும் போது (ஒத்தியங்கு அல்லது ஒத்தியங்கா பாங்குகளில்), கீழ்வரும் நிழழ்வுகள் ஏற்படுகின்றன.

. அனைத்து செயல்படு ஒருதிசை மின்பாதைகள் (DC current paths) விலக்கப்படுகின்றன.

. R, N மற்றும் காலமுடிவு எண்ணிகள் அவைகளின் ஏற்றநிலை சூழ்நிலைகளில் (load-state conditions) கட்டாயப்படுத்தப்படுகின்றன.

. மின்னூட்டவிறைப்பி மூன்றுநிலை பாங்கில் கட்டாயப்படுத்தப்படுகிறது.

. எண்ணியல் பூட்டணர் சுற்றமைப்பு (digital lock detect circuitry) மீளமைக்கப்படுகிறது.

. RFIN உள்ளீடு சாருகையகற்றப்படுகிறது (debiased).

. மேற்கோள் உள்ளீடு இடையகச் சுற்றமைப்பு (reference input buffer circuitry) செயலிழக்கப்படுகிறது.

. உள்ளீடு பதிவகம் செயல்பாட்டில் இருக்கச் செய்யப்பட்டு பதியத் தரவுகளை ஏற்று தாழிட இயலும்.பன்மைப்பி வெளியீடு கட்டுப்பாடு (Muxout Output Control)

சில்லடை பன்மைப்பி M3, M2, M1 ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கான மெய்யட்டவணை செயற்கூறு தாழ் வரையமைவு (Function Latch Map) படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

விரைப்பூட்டு செயலாகத் துணுக்கு (Fast Lock Enable Bit): DB9 என்பது விரைப்பூட்டு செயலாகத் துணுக்கு ஆகும்; இது 1ஆக இருக்கும் போது, விரைப்பூட்டு செயல்படும்.

விரைப்பூட்டு பாங்குத் துணுக்கு (Fast Lock Mode Bit): DB10 என்பது விரைப்பூட்டு பாங்குத் துணுக்கு ஆகும்; விரைப்பூட்டு செயலாக்கப்படும் போது, இத்துணுக்கு பயன்படுத்தப்படும் விரைப்பூட்டுப் பாங்கை உறுதிப்படுத்துகிறது. விரைப்பூட்டு பாங்கு 0ஆக நிறுவமைக்கப்பட்டால், விரைப்பூட்டு பாங்கு 1 பயன்படுத்தப்படுகிறது. விரைப்பூட்டு பாங்கு 1ஆக இருந்தால், விரைப்பூட்டு பாங்கு 2 தேர்ந்தெடுக்கப்படுகிறது.

விரைப்பூட்டு பாங்கு 1 (Fast Lock Mode 1): இப்பாங்கில் மின்னூட்டவிறைப்பி மின்னோட்டம் மின்னோட்ட நிறுவுப்பாடு Current Setting 2 மதிப்பிற்கு நிலைமாற்றப்படுகிறது. N-எண்ணி தாழிலுள்ள மின்னூட்டவிறைப்பி மிகைப்புத் துணுக்கு CP Gain Bit 1ஆக எழுதியதும், சாதனம் விரைப்பூட்டில் நுழைகிறது. AB எண்ணி தாழிலுள்ள மின்னூட்டவிறைப்பி மிகைப்புத் துணுக்கு CP Gain Bit 0ஆக எழுதியவுடன் சாதனம் விரைப்பூட்டிலிருந்து வெளியேறுகிறது.

விரைப்பூட்டு பாங்கு 2 (Fast Lock Mode 2): இப்பாங்கில் மின்னூட்டவிறைப்பி மின்னோட்டம் மின்னோட்ட நிறுவுப்பாடு Current Setting 2 மதிப்பிற்கு நிலைமாற்றப்படுகிறது. N-எண்ணி தாழிலுள்ள மின்னூட்டவிறைப்பி மிகைப்புத் துணுக்கு CP Gain Bit 1ஆக எழுதியதும், சாதனம் விரைப்பூட்டில் நுழைகிறது. சாதனம் காலப்பி எண்ணியின் கட்டுப்பாட்டில், விரைப்பூட்டை வெளியேறுகிறது. TC4-1 மதிப்பால் உறுதிப்படுத்தப்படும் காலமுடிவுக் காலத்திற்குப் பிறகு மின்னூட்டவிறைப்பி மிகைப்புத் துணுக்கு CP Gain Bit மீளமைக்கப்பட்டு, சாதனம் விரைப்பூட்டிற்கு மாறாக இயல்புப் பாங்கிற்குத் திரும்புகிறது. காலமுடிவுக் காலங்களுக்கு செயற்கூறு தாழ் வரையமைவு (Function Latch Map) படத்தை நாடவும்.

காலப்பி எண்ணி கட்டுப்பாடு (Timer Counter Control): பயனரிடம் இரண்டு மின்னூட்டவிறைப்பி மின்னோட்டங்களை நிரல்படுத்தும் விழைவுகள் உள்ள. மின்னோட்ட நிறுவுப்பாடு Current Setting 1 என்பவற்றின் நோக்கம் வானலை வெளியீடு நிலைப்பாக இருக்கும் போதும் முறைமை மாறா நிலை அடையும் போதும் பயன்படுத்துவது ஆகும். மின்னோட்ட நிறுவுப்பாடு Current Setting 2 முறைமை இயங்குநிலை மற்றும் மாறு நிலையில் பயன்படுத்தவதற்காக, அதாவது ஒரு புதிய வெளியீடு அலைவெண் நிரல்படுத்தப்படும் போது ஆகும்.

வழக்கமான நிகழுகளின் வரிசையம் கீழ்வருமாறு:

துவக்கத்தில், பயனர் மின்னூட்டவிறைப்பியின் மேற்கோளிடப்பட்ட மின்னோட்டத்தை முடிவு செய்கிறார். உதாரணமாக, விழைவு 2.5mA மின்னோட்ட நிறுவுப்பாடு Current Setting 1ஆகவும் 5mA மின்னோட்ட நிறுவுப்பாடு Current Setting 2ஆகவும் இருக்கலாம்.

அதே நேரத்தில், இரண்டாம் நிலை மின்னோட்டம் எவ்வளவு நேரம் செயற்பட்டப் முதல் நிலை மின்னோட்டத்திற்கு நிலைமாற வேண்டும் என்ற முடிவு செய்யப்பட வேண்டும். இது செயற்கூறு தாழ் (Function Latch) இலுள்ள காலப்பி எண்ணி கட்டுப்பாடு, Timer Counter Control துணுக்கு DB14இலிருந்து DB11 (TC4 - TC11) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. மெய்யட்டவெணைக்கு செயற்கூறு தாழ் வரையமைவு படத்தைக் காண்க.

ஒரு புதிய வெளியீடு அலைவெண்ணை நிரல்படுத்த, N-எண்ணி தாழில் (N-counter Latch) Nஇல் ஒரு புதிய மதிப்பை வெறுமென நிரல்படுத்தவும். அதே நேரத்தில் மின்னூட்டவிறைப்பி மிகைப்பு CP Gain துணுக்கு 1 ஆக எழுதப்படலாம். இது மின்னூட்டவிறைப்பியை CPI6 : CPI4 மதிப்பிற்கு TC4 : TC1 என்கிற காலத்திற்கு அமைக்கிறது. இந்த நேரம் முடிந்ததும், மின்னூட்டவிறைப்பி CPI3 :CPI1 என்கிற மதிப்பிற்குத் திரும்புகிறது. அதே நேரத்தில் மின்னூட்டவிறைப்பி மிகைப்பு துணுக்கு மீளமைக்கப்பட்டு பயனர் அலைவெண்ணை மாற்ற வேண்டிய அடுத்த நேரத்திற்குத் தயாராகிவிடுகிறது.

காலப்பி எண்ணியில் ஒரு செயலாக்க அம்சம் (enable feature) உள்ளது என்பதைக் கவனிக்கவும். செயற்கூறு தாழிலுள்ள விரைப்பூட்டு துணுக்கு DB10 1ஆக நிறுவமைக்கப்பட்டு விரைப்பூட்டு பாங்கு 2 தேர்ந்தெடுக்கப்பட்டதும், காலப்பி எண்ணி செயலாக்கப்படுகிறது.

மின்னூட்டவிறைப்பி மின்னோட்டங்கள் : CPI3, CPI2, மற்றும் CPI1 ஆகியவை மின்னூட்டவிறைப்பியின் மின்னோட்ட நிறுவுப்பாடு 1ஐ நிரல்படுத்துகின்றன. CPI6, CPI5, மற்றும் CPI4 ஆகியவை மின்னூட்டவிறைப்பியின் மின்னோட்ட நிறுவுப்பாடு 2ஐ நிரல்படுத்துகின்றன. செயற்கூறு தாழ் வரையமைவில் உள்ள மெய்யட்டவணையைக் காண்க..

கட்டவுணரி கதிர்வு(PD Polarity: இத்துணுக்கு கட்டவுணரியின் கதிர்வை நிறுவமைக்கிறது. செயற்கூறு தாழ் வரையமைக் காண்க.

மின்னூட்டவிறைப்பி மூன்றுநிலை(CP Three-state): இத்துணுக்கு மின்னூட்டவிறைப்பியின் வெளியீடு முள்ளைக் கட்டுப்பாடு செய்கிறது. இதனை உயர் நிறுவமைத்தல் மின்னூட்டவிறைப்பியை மூன்றுநிலைப்படுத்தும். இந்தத் துணுக்கு தாழ இருந்தால், மின்னூட்டவிறைப்பி செயலாக்கம் ஆகும்.

முன்னமைவுத் தாழ் (Initialization Latch)

முன்னமைவுத் தாழ் C2, C1 = 1, 1 நிபந்தனையில் நிரல்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படை செயற்கூறு செயற்கூறு தாழ் (C2, C1 = 1, 0 நிபந்தனையில் நிரல்படுத்தப்படுவது) என்பதைப் போன்றது.

எனினும், முன்னமைவுத் தாழ் நிரல்படுத்தும் போது, R மற்றும் N எண்ணிகளில் ஒரு கூடுதலான மீளமை துடிப்பு செலுத்தப்படுகிறது. இத்துடிப்பானது N எண்ணியில் தரவு தாழிடப்படும் போது N எண்ணி ஏற்ற நிலையில் (load point) உள்ளது என உறுதிப்படுத்துகிறது. எனவே, சாதனம் அருகாமையிலுள்ள கட்டச் சீரமைவில் (phase alignment) எண்ணத் துவங்குகிறது.

சாதனம் ஒத்தியங்கு திறனகற்றம் (synchronous power down) (PD1 துணுக்கு உயர்நிலையில், PD2 துணுக்கு தாழ்நிலையில்) என்பதற்கு நிரல்படுத்தப்பட்டால், உள்ளகத் துடிப்பானது இத்திறனகற்றத்தைத் தூண்டவும் செய்யும். முன்னளவுப்பெருக்கி (prescaler) மற்றும் அலைப்பி உள்ளீடு இடையகம் (Oscillator Input Buffer) இந்த உள்ளகத் துடிப்பால் பாதிக்கப்படுவதில்லை. எனவே, எண்ணுதல் தொடரும் போது, அருகாமையானக் கட்டச் சீரமைவு பராமரிக்கப்படுகிறது.

முன்னமைவிற்குப் பிறகு, முதல் N-எண்ணி தரவு தாழிடப்படும் போது. உள்ளக மீளமை துடிப்பு மறுசெயல்படுத்தப்படுகிறது. எனினும், அடுத்தடுத்த AB எண்ணி ஏற்றங்கள் உள்ளக மீளமை துடிப்பை ஏற்படுத்துவதில்லை.

முன்னமைவுத் திறன்தொடக்கத்திற்குப் பிறகான சாதன் நிரல்பாடு (Device Programming After Initial Power-up: சாதனம் முதலில் திறன்தொடங்கும் போது, அது மூன்று வகைகளில் நிரல்படுத்தலாம்.

முன்னமைவுத் தாழ் முறை (Initialization Latch Method:

1. மின் திறன் VDDஐ செலுத்தவும்.

2. முன்னமைவுத் தாழை (உள்ளீடு சொல்லின் இரண்டு சிறுமமதிப்புத் துணுக்குகளில் 11) நிரல்படுத்தவும். F1 துணுக்கு 0ஆக நிரல்படுத்தப்பட்டுள்ளது என உறுதி செய்க.

3. செயற்கூறு தாழ் ஏற்றம் (கட்டுப்பாட்டுச் சொல்லின் இரண்டு சிறுமமதிப்புத் துணுக்குகளில் 10) செய்க. F1 துணுக்கு 0ஆக நிரல்படுத்தப்பட்டுள்ளது என உறுதி செய்க.

4. R-எண்ணியை ஏற்றம் (சிறுமமதிப்புத் துணுக்குகளில் 00) செய்க.

5. N-எண்ணியை ஏற்றம் (சிறுமமதிப்புத் துணுக்குகளில் 01) செய்க.

முன்னமைவுத் தாழ் ஏற்றப்படும் போது, கீழ்க்கண்டவை நடைபெறுகின்றன:

.செயற்கூறு தாழ் பொருளடக்கங்கள் ஏற்றப்படுகின்றன.

.ஒரு உள்ளகத் துடிப்பு R, N மற்றும் காலமுடிவு எண்ணிகளை ஏற்ற நிலை சூழ்நிலைகளுக்கு (load state conditions) மீளமைக்கிறது மற்றும் மின்னூட்டவிறைப்பியை மூன்றுநிலைப்படுத்துகிறது. அளவுப்பெருக்கியின் பட்டையிடுக்கு மேற்கோள் (prescaler bandgap reference) மற்றும் அலைப்பி உள்ளீடு இடையகம் (oscillator input buffer) உள்ளகத் துடிப்பால் பாதிக்கப்படுவதில்லை, எனவே எண்ணுதல் தொடரும் போது அருகாமையான கட்டச் சீரமைவை உறுதிப்படுத்துகிறது.

.முன்னமைவிற்குப் பிறகு முதல் N-எண்ணி தரவைத் தாழிடுதல் அதே உள்ளக மீளமைவுக் குறிகையை செயற்படுத்துகிறது. அடுத்தடுத்து N-எண்ணி ஏற்றங்கள் வேறொரு முன்னமைவு இடம்பெறாவிடில் உள்ளக மீளமைவுத் துடிப்பை தூண்டுவதில்லை.

CE முள் முறை (CE Pin Method):

1. மின் திறன் VDDஐ செலுத்தவும்.

2. CEஐ கீழே கொண்டுவந்து சாதனத்தை திறனகற்றத்திற்குள் எடுத்துச்செல்லவும். இது ஒரு ஒத்தியங்கா செயற்பாடு மற்றும் உடனேயே நடைபெருகிறது.

3. செயற்கூறு தாழை (10) நிரல்படுத்தவும்.

4. R-எண்ணியை (00) நிரல்படுத்தவும்.

5. N-எண்ணியை (01) நிரல்படுத்தவும்.

6. CEஐ மேலே கொண்டுவந்து சாதனத்தை திறனகற்றத்திலிருந்து வெளியே எடுக்கவும். R மற்றும் N-எண்ணிகள் அருகாமைச் சீரமைவில் எண்ணத் தொடர்கின்றன. முன்னளவுப்பெருக்கியின் பட்டையிடுக்கு மின்னழுத்தம் மற்றும் அலைப்பி உள்ளீடு சாருகை நிலைநிலையை அடைய CE மேலுயர்ந்தப் பிறகு 1μs தேவைப்படலாம்.

சாதனத்தை திறன்படுத்த அல்லது திறனகற்ற CE பயன்படுத்தப்பட்டு தட நடமாட்டத்தைச் சோதனைச் செய்ய உதவப்படலாம். ஒவ்வொரு தடவையும் சாதனத்தை செயலாக்க அல்லது செயலிழக்கப்பட்டாலும் உள்ளீடு பதிவகத்தை நிரல்படுத்தத் தேவை கிடையாது; துவக்கத்தில் VDD செலுத்தப்பட்டப் பிறகு ஒரு முறையாவது நிரல்படுத்தப்பட வேண்டும்.

எண்ணி மீளமை முறை (Counter Reset Method):

1. மின் திறன் VDDஐ செலுத்தவும்.

2. செயற்கூறு தாழ் ஏற்றம் (இரண்டு சிறுமமதிப்புத்துணுக்கில் 10) செய்யவும். இந்தப் படியின் பங்காக, F1 துணுக்கில் 1 ஏற்றவும். இது எண்ணி மீளமைவை செயலாக்குகிறது.

3. R-எண்ணி ஏற்றம் (இரண்டு சிறுமமதிப்புத்துணுக்கில் 00) செய்யவும்.

4. N-எண்ணி ஏற்றம் (இரண்டு சிறுமமதிப்புத்துணுக்கில் 01) செய்யவும்.

5. செயற்கூறு தாழ் ஏற்றம் (இரண்டு சிறுமமதிப்புத்துணுக்கில் 10) செய்யவும். இந்தப் படியின் பங்காக, F1 துணுக்கில் 0 ஏற்றவும். இது எண்ணி மீளமைவை செயலழக்கச் செய்கிறது.

இந்த வரிசையம் முன்னமைவுத் தாழ் முறையில் உண்டாகும் அதே அருகாமை சீரமைவை அளிக்கிறது. இது உள்ளக மீளமைவின் நேரடி கட்டுப்பாட்டை அளிக்கின்றது. எண்ணி மீளமைவு எண்ணிகளை ஏற்ற நிலையில் (load point) வைத்து மின்னூட்டவிறைப்பியை மூன்றுநிலைப்படுத்துகிறது, ஆனால் ஒத்தியங்கு திறனகற்றத்தைத் தூண்டுவதில்லை..

பயனகங்கள்

அதிவேக எண்மைப்பி மாற்றிகளுக்கான மிகுக் குறை நடுக்கக் குறியேற்றக் கடிகை (Very Low Jitter Clock Encode for High Speed DAC Converters)

ADF4002 ஒரு மின்னோட்டவியக்க அலைப்பியுடன் அதிவேக எண்மைப்பிக்கான கடிகைக் குறியேற்றத் அளிக்கும் பயனகம் கீழுள்ளப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.


இப்பயனகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள எண்மைப்பி AD9215 ஆகும். இது ஒரு 12-துணுக்கு, 80MHz குறியேற்றக் கடிகை (encode clock) வரை ஏற்கும் மாற்றி ஆகும். குறை நடுக்க நிலையானக் கடிகையை செயல்முறைப்படுத்த ஒரு 77.86MHz குறுகலைவரிசை மின்னழுத்தவியக்கப் படிகவலைப்பியை (narrow-band VCXO) பயன்படுத்தவும். இந்த உதாரணம் ஒரு 19.44MHz மேற்கோள் கடிகையை தற்கோளாகக்கொள்கிறது.

AD4002இன் கட்டவிரைச்சல் அளிப்பை சிறுமப்பத்த, 4 என்கிற சிறுமமான பெருக்கல் காரணி பயன்படுத்தப்படுகிறது. எனவே, R-வகுப்பி 1ஆக நிரல்படுத்தப்படுகிறது மற்றும் N-வகுப்பி 4ஆக நிரல்படுத்தப்படுகிறது.

AD4002இன் மின்னூட்டவிறைப்பி வெளியீடு (முள் 2) வளைய வடிப்பியை ஓட்டுகிறது. வளைய மிகைப்பியின் பட்டையகலம் உன்னதமான மூல சராசரி இருபடி நடுக்கத்திற்கு (rms jitter) உகப்புப்படுத்தப்பட்டுள்ளது. மூல சராசரி இருபடி நடுக்கம் என்பது எண்மைப்பியின் குறிகை-இரைச்சல் விகிதத்தில் (SNR) ஒரு முக்கியக் காரணி ஆகும். மிகு குறுகலானப் பட்டையகலம் ADF4002யின் இரைச்சலை மின்னழுத்தவியக்கப் படிகவலைப்பி இரைச்சல் ADF4002 இரைச்சலை விட குறைவாக உள்ள அலைவெண் பெயர்ச்சிகளில் ADF4002யின் இரைச்சலை முதன்மைப்படுத்த அனுமதிக்கிறது. ADF4002 இரைச்சல் மற்றும் மின்னழுத்தவியக்கலைப்பி இரைச்சல் இடையே உள்ள வெட்டு (intersection) உகப்பு வளைய வடிப்பி பட்டையகலமாக (optimum loop filter bandwidth) தேர்ந்தெடுக்கபடுகிறது.

வளைய வடிப்பியின் வடிவமைப்பில் ADIsimPLL (பதிப்பு 3.0) மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனை www.analog.com/pll என்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கலாம். மூல சராசரி இருபடி நடுக்கம் (rms jitter) <1.2ps ஆக அளக்கப்படுகிறது. இந்த மட்டம் கோட்பாடு ரீதியாக 59 dB குறிகையிரைச்சல் விகிதத்தை உறுதிப்படுத்த அனுமுதிக்கத்தகு பெரும மதிப்பான 6 ps மூல சராசரி இருபடி நடுக்கத்தை (allowed maximum rms jitter) விட குறைவாகும்.

ADF4002, AD9215 மற்றும் HSC-ADC-EVALA-SC மதிப்புப் பலகை ஆகியவற்றினைப் பயன்படுத்தும் குறியேற்றக் கடிகை ஏற்பாடு பயனரை எண்மைப்பி மற்றும் குறியேற்றக் கடிகையின் தக்கபடியை உறுதி செய்ய உதவுகின்றது. SPI® இடைமுகம் ADF4002ஐக் கட்டுப்பாடு செய்ய உதவுகின்றது மற்றும் USB இடைமுகம் AD9215-80இன் இயக்கத்தைக் கட்டுப்பாடு செய்ய உதவுகின்றது. ஒரு எண்மைப்பி பகுப்பாய்வி (ADC analyzer) பயன்படுத்தப்பட்டால், கட்டுப்பிப் பலகையானது (controller board) விரைவு ஃபுரியர் உருமாற்றம் தகவலை (FFT information) தனிநபர் கண்ணியிற்கு (PC) திரும்ப அனுப்புகிறது.

கட்டவலைவெண்ணுணரி (PFD)

ADF4002ஆனது R மற்றும் N எண்ணிகள் இரண்டையும் 1ஆக நிரல்படுத்த அனுமதிப்பதால், இச்சாதனத்தை ஒரு தனித்த கட்டவலைவெண்ணுணரி மற்றும் மின்னூட்டவிறைப்பி ஆகியவற்றாகப் பயன்படுத்தலாம். இது குறிப்பாக ஒரு கடிகை சுதாரிப்புப் பயனகம் (clock cleaning application) அல்லது உயர் செயல்வலிமை உள்ளகவலைப்பி (high performance LO) ஆகியவற்றில் பயன்மிக்கதாகும். மேலாக, மிக குறைந்த நெறி கட்டவிரைச்சல் தரை (normalized phase noise floor) (−222 dBc/Hz) மிக குறைத உள்பட்டை கட்டவிரைச்சல் மட்டங்களை (in-band phase noise levels) விடுவிக்கின்றது. கட்டவலைவெண்ணுணரியை 104 MHz என்கிற பெருமமான அலைவெண் வரை பயன்படுத்தலாம்.

கீழுள்ளப் படத்தில் மேற்கோள் அலைவெண் கட்டவலைவெண்ணுணரியின் அலைவெண்ணிற்குச் சமமாகும்.


மின்னூட்டவிறைப்பியானது இரு நிலையான கட்டுப்பாடு மின்னழுத்தத்தை மின்னழுத்தவியக்கப் படிகவலைப்பியிடம் (VCXO) தருகிறது. மின்னழுத்தவியக்கப் படிகவலைப்பி வெளியீடு வெளியக வகுப்பியால் (External Divider) விருப்பப்பட்ட கட்டவலைவெண்ணுணரி அலைவெண்ணிற்கு வகுக்கப்படுகிறது.

இடைமுகப்பாடு (Interfacing)

ADF4002 ஒரு எளிய SPI-இணைவொப்பான இடைமுகத்தைக் கொண்டுள்ளது. CLK, DATA, மற்றும் LE தரவுப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன. தாழ் செயலாக்கம் (LE முள்) உயர சென்றால், CLK (கடிகையின்) உயர் விளிம்பில் கடிகையிடப்பட்ட 24 துணுக்குகள் தகுந்தத் தாழிற்குள் மாற்றப்படுகிறது. இதற்கான C2, C1 மெய்யட்டவணை மற்றும் காலப்படம் மேற்படி விவரிக்கப்பட்டுள்ளன.

பெருமமாக அனுமதியான தொடர்நிலை கடிகை வீதம் 20MHz ஆகும். அப்படி என்றால் பெருமமாக சாத்தியமான இற்றைப்பாடு (maximum update rate) வீதம் 833 kHz அல்லது 1.2 μsற்கு ஒரு முறையான இற்றைப்பாடு ஆகும். இது பல நூறு மைக்ரோ நொடிகளில் எடுக்கும் வழக்கமான பூட்டுநேரங்கள் கொண்டுள்ள முறைமைகளில் தாராளமாகவே போதுமாகும்.

ADuC812 இடைமுகம்

ADF4002 மற்றும் ADuC812 MicroConverter® ("நுண்மாற்றி") இடையிலான ஒரு இடைமும் கீழுள்ளப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.


ADuC812ஆனது ஒரு 8051இன் உள்ளகத்தின் அடிப்படையில் உள்ளதால், அது எந்த 8051-அடிப்படையிலானக் நுண்ணியக்கியையும் (microcontroller) பயன்படுத்தலாம். ஒவ்வொரு தாழெழுதலுக்கும் (latched write), ADF4002 ஒரு 24-துணுக்கு தொடர்நிலைச் சொல்லினைத் தேவைப்படுகிறது. ADSP21xx குடும்பத்துடன் இதனை எளிமையாக மாறான தரவுச்சட்டம் கொண்டுள்ள (alternate framing) "தன்னிடையக செலுத்தப் பாங்கு" (autobuffered transmit mode) மூலம் சாதிக்கலாம். இதன் மூலம் முழுமையான தொடர்நிலைத் தரவுக் கோட்டத்தை இடையீடு உண்டாகுவதற்கு முன்பு அனுப்பலாம். சொல் நீளத்தை 8-துணுக்காக ஏற்படுத்தவும் மற்றும் ஒவ்வொரு 24-துணுக்கு சொல்லுக்கு 3 நினைவக இருப்பிடங்களை ஒதுக்கவும், தன்னிடையகப் பாங்கை செயலாக்கவும், பிறகு எண்குறிகைச்செயலியின் (DSP) செலுத்தப் பதிவகத்தில் (transmit register) எழுதவும். இக்கடைசி செயற்பாடு ஒரு தன்னிடையகப் பரிமாற்றத்தை (autobuffer transfer) துவக்கும்.

சில்லளவுப் பொதியத்திற்கான சுற்றுப்பலகை மனையமைவு வழிமுறைகள் (Chip Scale Package PCB Design Guidelines)

சில்லளவுப் பொதியத்தின் இழுதுச் சட்ட அமர்வகுதிகள் செவ்வகமாக உள்ளன. சுற்றுப்பலகை நிரப்பிடங்கள் பொதியத்தின் அமர்வகுதி நீளத்தை விட 0.1 mm நீளமாகவும் பொதியத்தின் அமர்வகுதி அகலத்தை விட 0.05mm அகலமாக இருத்தல் வேண்டும். இது சூட்டிணை மூட்டின் அளவு பெருமப்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்கிறது. சில்லளவுப் பொதியத்தின் அடியின் மையப் பகுதியில் ஒரு வெம்மை நிரப்பிடம் (thermal pad) உள்ளது.

சுற்றுப்பலகையின் வெம்மை நிரப்பிடமானது வெளிப்படு நிரப்பிடத்தின் (exposed pad) அளவிற்கு இருக்க வேண்டும். சுற்றுப்பலகையினுள் வெம்மை நிரப்பிடத்திற்கும் நிரப்பிட வகுதி (pad pattern) உள் விளிம்புகளுக்கும் இடையே 0.25 mm விடுவெளி குறைந்தது இருத்தல் வேண்டும். இது குறுக்குச்சுற்றைத் தவிர்க்கிறது. வெம்மை செயல்வலிமையை மேம்படுத்த, வெம்மை வழிமங்கள் சுற்றுப்பலகை வெம்மை நிரப்பிடம் மீது பயன்படுத்தப்படலாம். வழிமங்கள் பயன்படுத்தப்பட்டால், அவை வெம்மை நிரப்பிடத்தில் 1.2 mm புரி இடைவெளி கொண்டுள்ள நெய்யரியில் அமைக்கப்பட வேண்டும். வழிமத்தின் விட்டம் 0.3 mmஇலிருந்து 0.33 mm இடையிலாக இருத்தல் வேண்டும். வழிமப் பீப்பாய் (via barrel) 1 அவுன்சு செப்புடன் முலாமிடப்பட்டு வழிமத்தை அடைக்க வேண்டும்.

பயனர் சுற்றுப்பலகையின் வெம்மை நிரப்பிடத்தை ஒப்புமை நிலத்து - AGNDஉடன் இணைக்க வேண்டும்.

திட்டவரை அளவைகள்


(அளவைகள் அனைத்தும் mmகளில்)