LTC3544B நான்மை ஒத்தியங்கு படியிறக்குச் சீர்ப்பி (Quad Synchronous Step-Down Regulator) - 2.25MHz, 300mA, 200mA, 200mA, 100mA

அம்சங்கள்
*உயர் செயல்வலிமை : 95% வரை
*நான்கு தன்னிச்சையான சீர்ப்பிகள் முறையே 300mA, 200mA, 200mA மற்றும் 100mA வெளியீடு மின்னோட்டம் வரை அளிக்கிறது
*2.25 - 5.5V உள்ளீடு நெடுக்கம்
*2.25MHz மாறா அலைவெண் செயல்பாடு
*தாழ் வீழ்ச்சி இயக்கம் : 100% பணிசுழற்சி
*ஷாட்கி இருமுனையங்கள் தேவையில்லை
*குறைந்த சுமையில் சிறும குறுவலைவுக்கு துடிப்புத் தவறல் (Pulse Skipping)
*0.8V மேற்கோள் தாழ் மின்னழுத்தங்களை அனுமதிக்கிறது
*அணையல் பாங்கு (shutdown mode) 1uA மின்னோட்டம் மட்டும் இழுக்கும்
*தாழ்வீழ்ச்சி இயக்கம் 100% பணிசுழற்சியில் (duty-cycle)
*மின்னோட்டப் பாங்கு இயக்கம் (current mode operation) உன்னத தடத்திரிநிலை மறுமொழி (line transient response) மற்றும் சுமைத்திரிநிலை மறுமொழி (load transient response) அளிக்கும்
*மிகுவெம்மை (overtemperature) காபந்து

பயனியங்கள்
*அலைபேசிகள்
*தன்னுதவிகள் (PDAs)
*கம்பியில்லா மற்றும் எண்சந்தாத்தட இணக்கிகள் (wireless, DSL modems)
*எண்ணியல் புகைப்படக்கருவிகள்(digital still cameras)
*எடுத்துச்செல்லத்தகுக் கருவிகள்

வழக்கமானப் பயனகம்


முள்ளமைவு


உத்தரவிடல் தகவல்
ஈயமற்றப் பரப்புச்சீர்மை நாடாச்சுருள் பாகம் குறியிடல் பொதியத்தின் விவரம் வெப்ப நெடுக்கம்
LTC3544BEUD#PBF LTC4263IDE#TRPBF LCLN 16-முள் (3mmx3mm) நெகிழி QFN –40°C - 125°C
ஈயமுள்ளப் பரப்புச்சீர்மை நாடாச்சுருள் பாகம் குறியிடல் பொதியத்தின் விவரம் வெப்ப நெடுக்கம்
LTC3544BEUD LTC4263IDE#TR LCLN 16-முள் (3mmx3mm) நெகிழி QFN –40°C - 125°C

மின்னியல் செயல்வரம்புகள்
# குறிப்பிடப்பட்ட விவரக்கூற்றுகள் முழு வெப்ப நெடுக்கம் பொறுந்தும், மற்றவை TA=25C, VIN=3.6V சூழ்நிலையில், மாறாக குறிப்பிடவில்லையெனில் பொறுந்தும்
குறியீடு பண்பளவு சூழ்நிலைr சிறுமம் வழக்கம் பெருமம் அலகு
பொது சிறப்பியல்புகள்
VIN உள்ளீடு மின்னழுத்த நெடுக்கம்  # 2.5   5.5 V
VFBREGx சீராக்கப்பட்ட பின்னூட்டு மின்னழுத்தம் (குறிப்பு 5)    0.792 0.8 0.808 V
# 0.784 0.8 0.816 V
Δ VFBREGx மேற்கோள் மின்னழுத்த மின்தொடர் சீர்ப்பாடு (குறிப்பு 5) VIN=2.25V - 5.5V    0.05 0.25 % / V
VLOADREG வெளியீடு மின்னழுத்த சுமைச் சீர்ப்பாடு (குறிப்பு 6)      0.5   %
IS உள்ளீடு நேர்மின்னழுத்தச் சாருகை மின்னோட்டம் - செயல்படு பாங்கு (துடிப்புத் தவறல்-pulse skip) VFB=0.7V, ILOAD=0A, 2.25MHz, நான்கு சீர்ப்பிகளும் செயலாக்க நிலையில்    825 1100 µ A
அணையல்      0.1 2 µ A
fOSC அலைப்பி அலைவெண் VIN=3V    2.25   MHz
VIN=2.5V - 5.5V# 1.8   2.7 MHz
VRUN(HIGH) இயங்கு முள் (RUNx) உயர்மட்ட மின்னழுத்தம்  # 1.0     V
VRUN(LOW) இயங்கு முள் (RUNx) தாழ்மட்ட மின்னழுத்தம்  #     0.3 V
ILSW நிலைமாறு முள் (SWx) கசிவு VRUN=0V, VSW=0V அல்லது 5.5V, VIN=5.5V,    ±0.1 ±1 µA
IRUN இயங்கு முள் (RUNx) கசிவு VIN=5.5V#   ± 0.1 ± 1 µA
IVFB பின்னூட்டு முள் (FBx) கசிவு        80 nA
tSS மென்துவக்கச் சுணக்கம் VFB=7.5%இலிருந்து 92.5% முழு அளவு  650 875 1200 µs
VULVO குறை மின்னழுத்த செயலிழப்புப் பூட்டு  #   1.9 2.25 V
தனிப்பட்டச் சீர்ப்பிகளின் சிறப்பியல்புகள்
சீர்ப்பி SW300 - 300mA
IPK உச்ச நிலைமாறு மின்னோட்ட வரம்பு VFB < VFBREG, பிணைசுழற்சி < 35%  400 600 800 mA
IS300 உள்ளீடு நேர்மின்னழுத்தச் சாருகை மின்னோட்டம் - SW300 மட்டும் செயல்படு பாங்கு (துடிப்புத் தவறல்-pulse skip) VFB < 0.7V, ILOAD = 0A, 2.25MHz    320   µA
RPFET நேர்மாழையுயிரகியின் (PFET) செயல்படு மின்தடுப்பு (RDSON) (குறிப்பு 7) ISW = 100mA    0.55  
RNFET எதிர்மாழையுயிரகியின் (NFET) செயல்படு மின்தடுப்பு (RDSON) (குறிப்பு 7) ISW = -100mA    0.50  
சீர்ப்பி SW200A - 200mA
IPK உச்ச நிலைமாறு மின்னோட்ட வரம்பு VFB < VFBREG, பிணைசுழற்சி < 35%  300 400 500 mA
IS300 உள்ளீடு நேர்மின்னழுத்தச் சாருகை மின்னோட்டம் - SW300 மட்டும் செயல்படு பாங்கு (துடிப்புத் தவறல்-pulse skip) VFB < 0.7V, ILOAD = 0A, 2.25MHz    320   µA
RPFET நேர்மாழையுயிரகியின் (PFET) செயல்படு மின்தடுப்பு (RDSON) (குறிப்பு 7) ISW = 100mA    0.65  
RNFET எதிர்மாழையுயிரகியின் (NFET) செயல்படு மின்தடுப்பு (RDSON) (குறிப்பு 7) ISW = -100mA    0.60  
சீர்ப்பி SW200B - 200mA
IPK உச்ச நிலைமாறு மின்னோட்ட வரம் VFB < VFBREG, பிணைசுழற்சி < 35%  300 400 500 mA
IS300 உள்ளீடு நேர்மின்னழுத்தச் சாருகை மின்னோட்டம் - SW300 மட்டும் செயல்படு பாங்கு (துடிப்புத் தவறல்-pulse skip) VFB < 0.7V, ILOAD = 0A, 2.25MHz    320   µA
RPFET நேர்மாழையுயிரகியின் (PFET) செயல்படு மின்தடுப்பு (RDSON) (குறிப்பு 7) ISW = 100mA    0.65  
RNFET எதிர்மாழையுயிரகியின் (NFET) செயல்படு மின்தடுப்பு (RDSON) (குறிப்பு 7) ISW = -100mA    0.60  
சீர்ப்பி SW100 - 100mA
IPK உச்ச நிலைமாறு மின்னோட்ட வரம்பு VFB < VFBREG, பிணைசுழற்சி < 35%  300 400 500 mA
IS300 உள்ளீடு நேர்மின்னழுத்தச் சாருகை மின்னோட்டம் - SW300 மட்டும் செயல்படு பாங்கு (துடிப்புத் தவறல்-pulse skip) VFB < 0.7V, ILOAD = 0A, 2.25MHz    320   µA
RPFET நேர்மாழையுயிரகியின் (PFET) செயல்படு மின்தடுப்பு (RDSON) (குறிப்பு 7) ISW = 100mA    0.65  
RNFET எதிர்மாழையுயிரகியின் (NFET) செயல்படு மின்தடுப்பு (RDSON) (குறிப்பு 7) ISW = -100mA    0.60  

அறுதிப் பெரும செயல்வரம்புகள்
*உள்ளீடு மின்வழங்கல்: -0.3V - 6V
*RUNx: -0.3V - (VIN + 6V)
*VFBx: -0.3V - (VIN + 6V)
*SWx: -0.3V - (VIN + 6V)
*300mA நேர்மாழையுயிரகி மூல நேர்மின்னோட்டம் (PMOS source DC current): 450mA
*300mA நேர்மாழையுயிரகி மடு நேர்மின்னோட்டம் (PMOS sink DC current): 450mA
*200mA நேர்மாழையுயிரகி மூல நேர்மின்னோட்டம் (PMOS source DC current): 300mA
*200mA நேர்மாழையுயிரகி மடு நேர்மின்னோட்டம் (PMOS sink DC current): 300mA
*100mA நேர்மாழையுயிரகி மூல நேர்மின்னோட்டம் (PMOS source DC current): 200mA
*100mA நேர்மாழையுயிரகி மடு நேர்மின்னோட்டம் (PMOS sink DC current): 200mA
*300mA உச்ச நிலைமாறு (SW) மூல/மடு மின்னோட்டம் (PMOS sink DC current): 600mA
*200mA உச்ச நிலைமாறு (SW) மூல/மடு மின்னோட்டம் (PMOS sink DC current): 400mA
*100mA உச்ச நிலைமாறு (SW) மூல/மடு மின்னோட்டம் (PMOS sink DC current): 100mA
*இயக்க வெப்ப நெடுக்கம் -40°C - 125°C
*சந்தி வெப்பம்: -40°C - 125°C
*வைப்பு வெப்ப நெடுக்கம்: -65°C to 125°C

குறிப்புகள்
(1)அறுதிப் பெரும செயல்வரம்புகளுக்குப் புறமாக வளைக்கப்பட்டால், நிரந்திர சேதம் நேரிடலாம்; நீண்ட நேரம் உட்படுத்தப்பட்டால் நம்பகம் மற்றும் ஆயுட்காலத்தைப் பாதிக்கும்
(2)LT3544B 0 - 85°C வெப்ப நெடுக்கத்தில் விவரக்கூற்றுகளை நிறைசெய்வதில் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. -40 - 85°C நெடுக்கத்தில், விவரக்கூற்றுகள் வடிவமைப்பு, பண்புருவர்ணனை (characterization), புள்ளியியல் செய்கைக் கட்டுப்பாடு (statistical process control) மூலமாக உறுதிசெய்யப்படுகிறது.
(3)சந்தி வெப்பம், TJ சுற்றுப்புற வெப்பம் TA மற்றும் மின்திறன் விரயம் PD ஆகியவையிலிருந்து கீழுள்ள வாய்ப்பாடு மூலம்கணிக்கப்படுகிறது
(4)TJ = TA + (PD)(68°C)/W
(5)இந்தச் சில்லில் மிகுவெப்பக் காபந்து சேர்க்கப்பட்டுள்ளது. இது கனநேர மிகுவெப்பச் சூழ்நிலைகளிலிருந்து காக்கும். மிகுவெப்பம் என்றால் சந்தி வெப்பம் 125°Cஐத் தாண்டுதல். மிகுவெப்பத்தில் தொடர்ந்து இயக்குதல் நம்பகத்தை பாதிக்கும்.
(6)LTC3544B தனியுரிமச் சோதனைப் பாங்கில் சோதிக்கப்படுகிறது. இச்சோதனைப் பாங்கில் VFB வெளியீடு மிகைப்பிக்கு இணைக்கப்படுகிறது
(7)சுமைச் சீர்ப்பாடு (load regulation) சீர்ப்பாடு வளைய மிகைப்பை (regulation loop gain) அளந்து உய்த்துணரலாம்
(8)QFN நிலைமாற்றியின் நிகழ் மின்தடுப்பு (on resistance) சீவல் அளவைகளின் ஒட்டுறவு மூலம் உத்தரவாதமளிக்கப்படுகிறது.
(9)நீண்டகால மின்னோட்ட அடர்வு கட்டுப்பாடுகளால் உத்தரவாதமளிக்கப்படுகிறது

செயல்வலிமை சிறப்பியல்புகள்:



முள் செயற்கூற்றுகள்
VFB200B (முள் 1): 200mA சீர்ப்பி B பின்னூட்டு முள்; இம்முள் வெளியீட்டிற்குக் குறுக்கிலுள்ள வெளியக மின்தடையப் பிரிப்பியிடமிருந்த் பின்னூட்டு மின்னழுத்தத்தைப் பெறுகிறது.
VFB200A (முள் 2): 200mA சீர்ப்பி A பின்னூட்டு முள்; இம்முள் வெளியீட்டிற்குக் குறுக்கிலுள்ள வெளியக மின்தடையப் பிரிப்பியிடமிருந்த் பின்னூட்டு மின்னழுத்தத்தைப் பெறுகிறது.
RUN200A (முள் 3): 200mA சீர்ப்பி Aவின் செயலாக்கு முள்; இம்முள்ளில் உள்ளீடு மின்னழுத்தத்தைக் கட்டாயப்படுத்தல் 200mA சீர்ப்பி தடம்-Aவை செயலாக்கும்; நிலத்தைக் கட்டாயப்படுத்தல் அணையலிடச் செய்யும்.
SW200B (முள் 4): மின்தூண்டிக்கு இணைக்கப்படும் 200mA சீர்ப்பி Bவின் நிலைமாறு கணு (switch node) முள்; இம்முள் உள்ளக மாழையுயிரகியின் வடிவாய்களுடன் இணைந்துள்ளது.
SW200A (முள் 5): மின்தூண்டிக்கு இணைக்கப்படும் 200mA சீர்ப்பி Aவின் நிலைமாறு கணு (switch node) முள்; இம்முள் உள்ளக மாழையுயிரகளின் வடிவாய்களுடன் இணைந்துள்ளது.
PGND (முள் 6): திறனிலம்; இரண்டு 200mA சீர்ப்பிகளுக்கும் 300mA சீர்ப்பிக்கும் திறன் பாதை திரும்பம் (power path return)
PVIN (முள் 7): இரண்டு 200mA சீர்ப்பிகளுக்கும் 300mA சீர்ப்பிக்கும் திறன் பாதை மின்வழங்கல் முள் (power path supply); இம்முள் PGNDஉடன் மின்தேக்கியால் அருகில் பிணைநீக்கப்பட வேண்டும். (decoupled)
SW300 (முள் 8): மின்தூண்டிக்கு இணைக்கப்படும் 300mA சீர்ப்பியின் நிலைமாறு கணு (switch node) முள்; இம்முள் உள்ளக மாழையுயிரகிகளின் வடிவாய்களுடன் இணைந்துள்ளது.
RUN300 (முள் 9): 300mA சீர்ப்பியின் செயலாக்கு முள்; இம்முள்ளில் உள்ளீடு மின்னழுத்தத்தைக் கட்டாயப்படுத்தல் 300mA சீர்ப்பியை செயலாக்கும்; நிலத்தைக் கட்டாயப்படுத்தல் அணையலிடச் செய்யும்.
VFB300 (முள் 10): 300mA சீர்ப்பி பின்னூட்டு முள்; இம்முள் வெளியீட்டிற்குக் குறுக்கிலுள்ள வெளியக மின்தடையப் பிரிப்பியிடமிருந்த் பின்னூட்டு மின்னழுத்தத்தைப் பெறுகிறது.
VFB100 (முள் 11): 100mA சீர்ப்பி பின்னூட்டு முள்; இம்முள் வெளியீட்டிற்குக் குறுக்கிலுள்ள வெளியக மின்தடையப் பிரிப்பியிடமிருந்த் பின்னூட்டு மின்னழுத்தத்தைப் பெறுகிறது.
RUN100 (முள் 12): 100mA சீர்ப்பியின் செயலாக்கு முள்; இம்முள்ளில் உள்ளீடு மின்னழுத்தத்தைக் கட்டாயப்படுத்தல் 300mA சீர்ப்பியை செயலாக்கும்; நிலத்தைக் கட்டாயப்படுத்தல் அணையலிடச் செய்யும்.
SW100 (முள் 13): மின்தூண்டிக்கு இணைக்கப்படும் 100mA சீர்ப்பியின் நிலைமாறு கணு (switch node) முள்; இம்முள் உள்ளக மாழையுயிரகிகளின் வடிவாய்களுடன் இணைந்துள்ளது.
GNDA (முள் 14): ஒப்புமை நிலம்; உள்ளக மேற்கோள் மற்றும் இயக்கச் சுற்றமைப்பிற்கான நில மேற்கோள்(ground reference) ; 100mA சீர்ப்பியின் திறன் பாதை திரும்பம்
VCC (முள் 15): உள்ளக மேற்கோள் மற்றும் இயக்கச் சுற்றமைப்பிற்கான மின்வழங்கல் முள்; 100mA சீர்ப்பியின் திறன் பாதை மின்வழங்கல்
RUN200B (முள் 16): 200mA சீர்ப்பி Bவின் செயலாக்கு முள்; இம்முள்ளில் உள்ளீடு மின்னழுத்தத்தைக் கட்டாயப்படுத்தல் 200mA சீர்ப்பி தடம்-Bவை செயலாக்கும்; நிலத்தைக் கட்டாயப்படுத்தல் அணையலிடச் செய்யும்.
வெளிப்படு நிரப்பிடம் (முள் 17): நிலம்; சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும்.

செயற்கூற்றுப்படம்


இயக்கம்

முதன்மை கட்டுப்பாடு வளையம்
LTC3544B ஒரு மாறா அலைவெண், மின்னோட்டப் பாங்கு, படியிறக்குக் கட்டமைப்பை பயன்படுத்துகிறது. முதன்மை நேர்மாழையுயிரகியும் ஒத்தியங்கு எதிர்மாழையுயிரகியும் உள்ளகமானதாகும். வழக்கமான இயக்கத்தில், ஒவ்வொரு சுழற்சியிலும், அலைவி நிறுவமை-மீளமை தாழை (RS latch) நிறுவமைக்கும் போது (set), உள்ளக மேல்மாழையுயிரகி (upper MOSFET) நிகழாக்கப்படுகிறது (turned on) மற்றும் மின்னோட்ட ஒப்பீட்டி ICOMP நிறுவமை-மீளமை தாழை மீளமைக்கும் போது (reset) மேல்மாழையுயிரகி அகலாக்கப்படுகிறது (turned off). ICOMP நிறுவமை-மீளமை தாழை மீளமைக்கும் போது ஏற்படும் உச்ச மின்தூண்டி மின்னோட்டம் பிழை மிகைப்பி EAவின் வெளியீட்டால் கட்டுப்படுத்தப்படுகிறது. சுமை மின்னோட்டம் அதிகரிக்கும் போது பின்னூட்டு மின்னழுத்தம் FB, 0.8Vக்கு சார்பாக இலேசாக குறைகிறது. இதனால் EAவின் வெளியீடு மின்னழுத்தம் அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு மின்தூண்டி மின்னோட்டம் புதிய சுமை மின்னோட்டத்தை பொறுந்தும் வரை நீடிக்கும். மேல்மாழையுயிரகி அகலாக்கப்படும் போது, கீழ்மாழையுயிரகி மின்தூண்டி மின்னோட்டம் திசைத்திரும்பும் வரை அல்லது அடுத்தச் சுழற்சி தொடங்கும் வரை நிகழாக்கப்படுகிறது (turned on). மின்தூண்டி மின்னோட்டத்தின் திசைத்திரும்பல், மின்னோட்டத் திசைத்திரும்பு ஒப்பீட்டி (current reversal comparitor) IRCMPயால் நிலைக்காட்டப் படுகிறது.

துடிப்புத் தவறல் இயக்கப் பாங்கு (pulse-skip mode)
இலகுவானச் சுமைகளில், மின்தூண்டி மின்னோட்டம் ஒவ்வொரு துடிப்பிலும் சுழியம் அடையும் அல்லது திசைத்திரும்பும். கீழ்மாழையுயிரகி திசைத்திரும்பு ஒப்பீட்டி IRCMPயால் அகலாக்கப்பட்டு (turn-off) நிலைமாற்றி மின்னழுத்தம் வளையலைகிறது (ringing). இதுவே தொடரற்ற இயக்கம் (discontinuos operation) ஆகும். ஒரு நிலைமாறு சீர்ப்பியில் இது இயல்பானது. மிக இலகுவானச் சுமைகளில், LTC3544B தானாகவே வெளியீடு சீர்ப்பாட்டைப் பராமரிக்க துடிப்புகளைத் தவறும்.

மென்துவக்கம்
மென்துவக்கம் VINஇல் உள்ள துள்ளு மின்னோட்டங்களையும் வெளியீடு மேற்பாய்வுகளையும் துவக்கத்தில் தடுக்கிறது. LTC3544B மென்துவக்கமானது உள்ளக மேற்கோள் குறிகையை சரிவேற்றம் செய்து பிழை மிகைப்பியில் 1ms காலசுழற்சியில் ஊட்டி செயல்முறைப்படுத்தப்படுகிறது. கீழுள்ளப் படத்தில் நான்கு தடங்களின் நடைமுறையைக் காண்பிக்கிறது:


குறுக்குச்சுற்றுக் காபந்து
மின்தூண்டி மின்னோட்டத்தைக் கண்காணிப்பதன் மூலம் குறுக்குச்சுற்றுக் காபந்து சாதிக்கப்படுகிறது. ஒரு முன்னிர்ணயிக்கப்பட்ட மட்டத்தை மின்னோட்டம் மீறிவிட்டால், முதன்மை நிலைமாற்றி (main switch) அகலாக்கப்படுகிறது, மற்றும் ஒத்தியங்கு நிலைமாற்றி (synchronous switch)மின்தூண்டி மின்னோட்டம் வழு கருவுணர்க்கு (fault threshold) கீழ் தேய்வடையும் வரை போதுமான நேரம் நிகழாக்கப்படுகிறது. இது சீற்ற மின்தூண்டி மின்னோட்டம் (catastrophic inductor current), ஓடியநிலை (run-away) ஆகியவற்றைத் தடுத்தும் வெளியீட்டிற்கு மின்னோட்டத்தை அளிக்கிறது. இந்த நிலையில் வெளியீடு சீர்ப்பாடு சாதிக்கப்படுவதில்லை.

வீழ்ச்சி இயக்கம் (Drop-out Operation)
உள்ளீடு வழங்கல் மின்னழுத்தம் வெளியீடு குறைந்து மின்னழுத்தத்தின் மதிப்பை அணுகினால், பணிசுழற்சி பெரும நிகழ்நிலை நேரத்தை (maximum on-time) நோக்கி அதிகரிக்கும். வழங்கல் மின்னழுத்தும் இன்னும் குறைதல், முதன்மை நிலைமாற்றியை ஒன்றுக்கு மேலான சுழற்சிகளுக்கு 100% பணிசுழற்சி எட்டும் வரை நிகழ்நிலையில் நீடிக்க வலுக்கட்டாயபடுத்தும். வெளியீடு மின்னழுத்தம் உள்ளீடு மின்னழுத்தம் கழித்தல் நேர்மாழையுயிரகி மற்றும் மின்தூண்டி வீழ்ச்சிகள் என்பவற்றால் உறுதிசெய்யப்படுகிறது. தாழ்ந்த வழங்கல் மின்னழுத்தங்களில் நேர்மாழையுயிரகியின் நிகழ்நிலை மின்தடுப்பு RDS(ON) குறையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும் (வழக்கமான செயல்வலிமை சிறப்பியல்புகளைக் காண்க). எனவே, LTC3544B தாழ்ந்த உள்ளீடு மின்னழுத்தத்தில் 100% பணிசுழற்சியில் பயன்படுத்தப்படும் போது, பயன் மின்திறன் விரயத்தைக் கணிக்க வேண்டும் (பயனகத் தகவல் பிரிவில் வெம்மைப் பரிசீலனைகளைக் காண்க). அடிப்படை LTC3544B பயனக மின்சுற்று இத்தரவுத்தாளில் முதல் படத்தில் காண்பிகப்பட்டுள்ளது. வெளியக உறுப்புகளின் தேர்வு சுமை வேட்புகளால் நிர்ணயிக்கப்பட்டு மின்தூண்டியின் தேர்வில் தொடங்கி பின்தொர்ந்து மின்தேக்கிகள் CIN, COUT ஆகியவற்றைத் தேர்ந்துடுக்கவும்.

மின்தூண்டி தேர்வு (Drop-out Operation)
பெரும்பாலுமானப் பயனகங்களில் மின்தூண்டி 1μH - 10μH நெடுக்கத்தில் விழும். அதன் மதிப்பு விருப்பப்பட்ட குறுவலைவு மின்னோட்டத்தின் அடிப்படையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பெரிய மின்தூண்டி மதிப்புகள் குறுவலைவு மின்னோட்டத்தைக் குறைக்கின்றன மற்றும் சிறிய மின்தூண்டி மதிப்புகள் உயர்ந்த குறுவலைவு மின்னோட்டங்களை விளைவிக்கின்றன. உயர்ந்த உள்ளீடு அல்லது வெளியீடு மின்னழுத்தங்கள் ஆகியவையும் குறுவலைவு மின்னோட்டத்தை அதிகரிக்கின்றன. 300mA சீர்ப்பிக்கான குறுவலைவு மின்னோட்டத்தை நிறுவமைக்க நியாயமான மதிப்பு ΔIL = 120mA (அதாவது 300mAஇன் 40%).
ΔIL = {1/(f)(L )}VOUT{1 - (VOUT/VIN)}
உள்ளகத் தெவிட்டலை (core saturation) தடுக்க, மின்தூண்டியின் ஒருதிசை செயல்வரம்பு குறைந்தபடியாக சுமை மின்னோட்டம் சய பாதி குறுவலைவு மின்னோட்டம் (load current plus half the ripple current) என்பதாக இருத்தல் வேண்டும். எனவே, ஒரு 360mA செயல்வரம்புக் கொண்டுள்ள மின்தூண்டி பெரும்பாலுமானப் பயனகங்களுக்குப் போதுமாகிறது (300mA + 60mA). சிறந்த செயற்திறனுக்கு, குறைந்த தொடர் மின்தடுப்பு (DCR) மின்தூண்டியைத் தேர்ந்தெடுக்கவும்.

மின்தூண்டி உள்ளகத் தேர்வு (Inductor Core Selection)
பல்வேறு உள்ளக மூலதனங்களும் (core materials) வடிவங்களும் (shapes) மின்தூண்டியின் அளவு/மின்னோட்டம் மற்றும் விலைப்பாடு/மின்னோட்டம் ஆகிய உறவுகளை மாற்றுகின்றன. இரும்பியம் (Ferrite) அல்லது உட்புகுமாழை (Permalloy) ஆகிய மூலதனங்களால் ஆன நங்கூரச்சுருள்கள் மற்றும் கவசமுறு பானையுள்ளகங்கள் சிறிதானவை மற்றும் ஆற்றலைக் கதிர்வீசுவதில்லை, எனினும் பொடியிரும்பு உள்ளக மின்தூண்டிகளை விட விலையுயர்ந்தவை. மின்தூண்டியின் விழைவு LTC3544B எந்த மின்தூண்டியில் இயங்கு என்பதை விட விலை எதிர்வு அளவு வேட்புகள் (price vs. size requirements) அல்லது கதிர்வீச்சுப் புலம்/மின்காந்த இடையூறு வேட்புகள் (radiated field/EMI requirements) ஆகியவற்றைச் சாரும். கீழுள்ள அட்டவணை LTC3544Bயுடன் நன்கு பணிபுரியும் வழக்கமான பரப்பேற்று மின்தூண்டிகளைக் காண்பிக்கிறது:
பாகம் எண் மதிப்பு (μH) தொடர் மின்தடுப்பு (Ω பெருமம்) பெரும ஒருதிசை மின்னோட்டம் (A) அகலம் × நீளம் × உயரம்
ஸுமிடா CDH2D09B 10 0.47 0.48 3.0 × 2.8 × 1.0
6.4 0.32 0.6
4.7 0.218 0.7
3.3 0.15 0.85
வர்த் TPC744029 10 0.50 0.50 2.8 × 2.8 × 1.35
6.8 0.38 0.65
4.7 0.210 0.80
3.3 0.155 0.95
TDK VLF3010AT 10 0.67 0.49 2.8 × 2.6 × 1.0
6.8 0.39 0.61
4.7 0.28 0.70
3.3 0.17 0.87

CIN மற்றும் COUT மின்தேக்கிகளின் தேர்வு
தொடர் பாங்கில், உள்ளீடு குறுவலைவின் பாதக நிலை மதிப்பீடு மேல் மாழையுயிரகியில் VOUT/VIN பணிசுழற்சி மற்றும் IOUT(MAX) கொண்டுள்ள சதுர அலையை எண்ணுவதன் மூலம் உறுதிசெய்யப்படுகிறது. பெரிய மின்னழுத்தத் திரிவுகளைத் தடுக்க, அதிகபட்ச மூல சராசரி இருபடி மின்னோட்டத்திற்கு (RMS current) அளவுப்படுத்தப்பட்டத் தாழ் தொடர் மின்தடுப்பு உள்ளீடு மின்தேக்கி (low ESR input capacitor) பயன்படுத்தப்பட வேண்டும். பெரும மூல சராசரி இருபடி மின்னோட்டம் கீழ்வருமாறு தரப்படுகிறது:
IRMS ≅ IOUT(MAX) = √{(VOUT)(VIN - VOUT)}/VIN

இவ்வாய்ப்பாடு VIN = 2VOUT, இங்கு IRMS = IOUT(MAX)/2 என்கிற நிலையில் பெருமம் கொண்டுள்ளது. இந்த எளிமையான பாதக நிலை பெரும்பாலுமாக வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. மின்தேக்கி தயாரிப்பாளரின் குறுவலைவு மின்னோட்டச் செயல்வரம்புகள் 2000 மணிநேர ஆயுட்காலத்திற்கு அடிப்படையாகக் கொண்டுள்ளன (வனைமம் அல்லாத மின்தேக்கிகள்). ஆகவே, மின்தேக்கியை இன்னும் செயல்வரம்புநீக்கவும் அல்லது தேவைப்படும் வெப்பத்திற்கு அதிகமாக செயல்வரம்பிடப்பட்ட மின்தேக்கியைப் பயன்படுத்தவும். கேள்வி எழுந்தால், தயாரிப்பாளரை நாடவும்.

COUTஇன் தேர்வு வேட்பன செயல்படு தொடர் மின்தடுப்பு (required effective series resistance) என்பவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது. வழக்கமாக, COUTஇன் தொடர் மின்தடுப்பு வேட்பு பூர்த்திசெய்யப்பட்டால், மூல சராசரி இருபடி மின்னோட்டச் செயல்வரம்பு (RMS current rating) உச்ச-உச்ச குறுவலைவு வேட்பு IRIPPLE(P-P) மிகவும் தாரளமாக விஞ்சும். வெளியீடு குறுவலைவு ΔVOUT கீழ்வருமாறு தரப்படுகிறது:
VOUT = ΔIL {ESR + 1/(8•f•COUT)}

இங்கு f = இயக்க அலைவெண், COUT = வெளியீடு மின்தேக்கம், ΔIL = மின்தூண்டியில் குறுவலைவு மின்னோட்டம். நிலையான வெளியீடு மின்னோட்டத்திற்கு, வெளியீடு குறுவலைவு அதிகபட்ச உள்ளீடு மின்னழுத்தத்தில் பெருமமாகும், ஏனென்றால், ΔIL உள்ளீடு மின்னழுத்தத்துடன் அதிகரிக்கும்.

வனைம உள்ளீடு மற்றும் வெளியீடு மின்தேக்கிகளைப் பயன்படுத்துதல்
உயர்ந்த மதிப்பு, குறைந்த விலை, வனைம மின் தேக்கிகள் இப்போது சிறிய சிமிழ்களில் கிடைக்கின்றன. இவைகளின் உயர்ந்த குறுவலைவுச் செயல்வரம்பு, உயர்ந்த மின்னழுத்தச் செயல்வரம்பு, தாழ்ந்த தொடர் மின்தடுப்பு நிலைமாறு சீர்ப்பி பயனகங்களுக்குத் தகுந்ததாக அமைகின்றன. LTC3544Bஇன் கட்டுப்பாடு வளையம் வெளியீடு மின்தேக்கியின் தொடர் மின்தடுப்பை சாராதலால், வனைம மின்தேக்கிகள் குறைந்த வெளியீடு குறுவலைவு மற்றும் சிறிய மின்சுற்று அளவு ஆகியவற்றினைச் சாதிக்கும் பொருட்டு, தாராளமாகப் பயன்படலாம்.
எனினும், வனைம மின் தேக்கிகளை உள்ளீடு மற்றும் வெளியீடு, முன்னெச்சரிக்கைகள் கைப்பிடிக்கப்பட வேண்டும். உள்ளீட்டில் வனைம மின்தேக்கி பயன்படுத்தப்பட்டால், மின்திறன் சுவரேற்பியிலிருந்து (wall adapter) நீண்ட மின்கம்பிகள் மூலம் வழங்கப்பட்டால், வெளியீட்டில் ஏற்படும் சுமைப்படி (load step) , உள்ளீடு VINஇல் வளையலைவை (ringing) ஏற்படுத்தும். சாதக நிலையாக, இந்த வளையலைவு வெளியீட்டுன் பிணைந்து, நிலைப்பின்மை என்பதாக தவறாக அடையாளமாகலாம். பாதக நிலையாக, நீண்ட மின்கம்பிகளில் உள்ள உட்பாய்வு மின்னோட்டம் VINஇல் பாகத்தை சேதப்படும் ஒரு மின்னழுத்தக் கூர்வை ஏற்படுத்தலாம்.
உள்ளீடு மற்றும் வெளியீடு வனைம மின்தேக்கிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, X5R அல்லது X7R மின்கடத்தா சேர்மானங்களைத் தேர்ந்தெடுக்கவும். இந்தச் மின்கடத்தாகள் கொடுத்த அளவு மற்றும் விலையில் அனைத்து வனைமங்களில் சிறந்த வெப்பம் மற்றும் மின்னழுத்தச் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன.

வெளியீடு மின்னழுத்த நிரல்பாடு
VFBஐ ஒரு வெளியக மின்தடைய வகுப்பிக்குக் கட்டுவதன் மூலம் கீழ்வரும் வாய்ப்பாடு மூலம் நிரல்படுத்தப்படுகிறது:
VOUT = 0.8V{1 + (R2/R1)}
வெளியக மின்தடையம் வெளியீட்டுடன் இணைப்பதன் மூலம் தொலையுணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது கீழுள்ளப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது:

இம்மின்தடையங்களில் உள்ள மின்னோட்டத்தை சிறியதாக வைத்திருத்தல் செயற்திறனை பெருமப்படுத்தும், ஆனால், மிகவும் சிறியதாக வைத்திருத்தல் கொண்டி மின்தேக்கத்தால் உண்டாகும் இரைச்சல் பிரச்சனைகளை ஏற்படுத்தி கட்டுப்பாடு வளையத்தின் கட்டவிடைவெளியை (phase margin) குறைக்கும். மொத்தப் பின்னூட்டு மின்தடையச் சரத்தின் 100Kக்கு அடியில் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
கட்டுப்பாடு வளையத்தின் அலைவெண் மறுமொழியை மேம்படுத்த, ஒரு முன்னூட்டு மின்தேக்கி CF பயன்படுத்தப்படலாம். பின்னூட்டுத் தடம் (feedback line) மின்தூண்டி மற்றும் நிலைமாறு (SW) தடம் போன்ற இரைச்சல் மூலங்களிலிருந்து விலகி திசைவிப்பதில் மிகுந்தப் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

செயற்திறன் பரிசீலனைகள்
ஒரு நிலைமாறு சீர்ப்பியின் செயற்திறன் என்பது வெளியீடு மின்திறன் வகு உள்ளீடு மின்திறன் தர 100% ஆகும். தனித்தனி இழப்புகளை ஆராய்வது செயற்திறனைக் கட்டுப்படுத்துவது என்ன மற்றும் எந்த மாற்றம் சிறந்த மேம்பாட்டை அளிக்கும் ஆகியவற்றினை உறுதிசெய்தல் பெரும்பாலுமாகப் பயனுள்ளதாள அமைகின்றது. செயற்திறனை Efficiency = 100% – (L1 + L2 + L3 + ...), இங்கு L1, L2, என்பது உள்ளீடு மின்திறனின் சதவீதமான தனித்தனி இழப்புகள், என்கிற வாய்ப்பாட்டினால் விவரிக்கப்படுகிறது.

மின்விரய உறுப்புகள் இழப்புகளை ஏற்படுத்தினாலும், LTC3544B மின்சுற்றுகளின் பெரும்பாலுமான இழப்புகளுக்கு இரண்டு மூலங்கள் உள்ளன: VINஇன் அமைதிய மின்னோட்ட இழப்பு மற்றும் I2R இழப்பு ஆகியவை முதன்மை வகிக்கின்றன.

1. அமைதிய மின்னோட்டம் இரண்டு உறுப்புகளால் ஆனது. ஒருதிசைச் சாருகை மின்னோட்டம், மின்னியல் சிறப்பியல்புகளில் தரப்பட்டுள்ளது போல் மற்றும் உள்ளக முதன்மை நிலைமாற்றி (main switch) மற்றும் ஒத்தியங்கு நிலைமாற்றி (synchronous switch) வாயில்வாய் மின்னூட்ட மின்னோட்டங்கள் (gate charge currents). ஒவ்வொரு முறையும் நிலைமாற்றி மேலிருந்து கீழ், பிறகு மேல் நிலைமாறும் போது, ஒரு மின்னூட்டப் பொட்டலம் dQ PVINஇலிருந்து நிலம் செல்லுகிறது. விளைவாகும் PVINஇலிருந்து வெளியாகும் dQ/dt வழக்கமாக மின்னோட்டம் ஒருதிசை சாருகை மின்னோட்டத்தை விட அதிகமாகவும் அலைவெண்ணிற்கு நேர்விகிதமாகவும் உள்ளது, எனவே, ஒருதிசைச் சாருகை மற்றும் வாயில்வாய் மின்னூட்ட இழப்புகள் இரண்டும் PVINக்கு நேர்விகிதமாக இருந்து அவைகளின் விளைவுகள் உயர்ந்த வழங்கல் மின்னழுத்தங்களில் வலியுறுத்தலுடன் இருக்கின்றன.

2. I2R உள்ளக நிலைமாற்றிகளின் மின்தடையங்கள் RSW மற்றும் வெளியக மின்தூண்டி RL ஆகியவற்றிலிருந்து கணிக்கப்படுகின்றன. தொடர் பாங்கில், மின்தூண்டி L வழியாகப் பாயும் சராசரி வெளியீடு மின்னோட்டம் முதன்மை நிலைமாற்றி மற்றும் ஒத்தியங்கு நிலைமாற்றி ஆகியவை இடையில் "நறுக்கப்படும்". எனவே, SW முள்ளில் நோக்கப்படும் தொடர் மின்தடுப்பு மேல் மற்றும் கீழ் மாழையுயிரகிகளின் தொடர் மின்தடுப்புகள் RDS(ON) மற்றும் பணிசுழற்சி ஆகியவற்றின் சார்பு ஆகும்.
RSW = (RDS(ON)மேல்)(பணிசுழற்சி) + (RDS(ON)கீழ்)(1 - பணிசுழற்சி)
மேல் மற்று கீழ் மாழையுயிரகிகளின் RDS(ON) வழக்கமான செயல்வலிமை சிறப்பியல்புகள் வளைவுகளிருந்து பெறலாம். எனவே, I2R இழப்புகளைப் பெறுவதற்கு, RSW மற்றும் RL கூட்டி அதன் முடிவை சராசரி மின்னோட்டத்தின் இருபடியுடன் பெருக்கவும்.

இதர இழப்புகள் நிலைமாற்ற இயக்கத்தில் உள்ள போது, CIN மற்றும் COUT ஆகியவற்றின் தொடர் மின்தடுப்பு இழப்புகள் மற்றும் மின்தூண்டி உள்ளக இழப்புகள் ஆகியவற்றை உட்கொள்கின்றன, பொதுவாக இவை மொத்தக் கூடுதலான இழப்பின் 2%க்குக் குறைவாக கணக்காகின்றன.

வெம்மைப் பரிசீலனைகள்
LTC3544B பொதியத்தின் பின்தளத்தை சுற்றுப்பலகையுடன் நன்கு சூட்டிணைக்கத் தேவைப்படுகிறது. இது QFN பொதியத்திற்கு அருமையான வெம்மைப் பண்புகளை அளித்து இயல்பு இயக்கத்தில் பெருமச் சந்தி வெப்பத்தை மீறுவதில் கடினமாகிறது. பெரும்பாலுமானப் பயனங்களில் LTC3544B தன் உயர்ந்த செயற்திறனால் அதிகச் சூடை விரயம் செய்வதில்லை. LTC3544B உயர்ந்த சுற்றுப்புற வெப்பத்தில், தாழ்ந்த வழங்கல் மின்னழுத்தங்கள் மற்றும் உயர்ந்த பணிசுழற்சிகளில் இயங்கும் வீழ்ச்சி நிலை போன்ற பயனகங்களில், பாகம் சரிவர வெம்மை நிலப்படுத்தப்படவில்லையெனில், விரயமாகும் சூடு பெருமச் சந்தி வெப்பத்தை மீறலாம். சந்தி வெப்பம் தோரயமாக 150°C மீறிவிட்டால், திறன் நிலைமாற்றிகள் அகல்நிலையாகி, SW கணு உயர்மின்மறுப்பு நிலைக்குச் செல்லும்.

LTC3544B பெருமச் சந்தி வெப்பத்தை மீறுவதைத் தவிர்க்க, பயனர் ஓரளவு வெம்மைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். வெம்மைப் பகுப்பாய்வின் நோக்கம், மின்விரயம் பாகத்தின் பெருமச் சந்தி வெப்பத்தை மீறுமா என்பதை உறுதிசெய்வது. வெப்ப உயர்வு கீழ்வருமாறு தரப்படுகிறது:
TR = PD • θJA
இங்கு PD என்பது சீர்ப்பியால் விரயமான மின்திறன் மற்றும் θJA

சந்தி வெப்பம் கீழ்வருமாறு தரப்படுகிறது:
TJ = TA + TR
இங்கு TA என்பது சுற்றுப்புற வெப்பம்.

உதாரணத்திற்கு, LTC3544B 2.5V உள்ளீட்டில் வீழ்ச்சி நிலையில், (நான்கு சீர்ப்பிகளிலும்) மொத்த சுமை மின்னோட்டம் 800mA மற்றும் சுற்றுப்புற வெப்பம் 85°C ஆகிய நிலையைப் பரிசீலிக்கவும். நிலைமாற்றி மின்தடுப்பின் வழக்கமான செயல்வலிமை வரைவுகளிருந்து, 300mA நேர்த்தட நிலைமாற்றியின் RDS(ON) 85°Cஇல் 0.67Ω என்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 300mA தடத்தால் ஏற்படும் மின்திறன் விரயம்:
PD = ILOAD2•RDS(ON) = 60mW

மற்றத் தடங்களுக்கு நிகரானப் பகுப்பாய்வு மொத்த மின்திறன் விரயமான 138mWஐ அளிக்கிறது. ஒரு 3mm × 3mm QFN பொதியத்திற்கு, θJA 68°C/W ஆகும். எனவே, சீர்ப்பியின் சந்தி வெப்பம்:
TJ = 85°C + (0.138)(68) = 94.4°C
ஆகும். இது பெருமச் சந்தி வெப்பமான 125°Cக்கு தாராளமாகக் குறைவாக உள்ளது.

இன்னும் உயர்ந்த வழங்கல் மின்னழுத்தங்களில், சந்தி வெப்பம் குறைந்த நிலைமாற்றி மின்தடுப்பு RDS(ON)ஆல் குறையும்.

திரிநிலை மறுமொழி சரிபார்ப்பு
சீர்ப்பியின் வளைய மறுமொழி சுமை திரிநிலை மறுமொழியை நோக்குவதன் மூலம் சரிபார்க்கப்படுகிறது. நிலைமாறு சீர்ப்பிகள் ஒரு சுமைப்படிக்கு மறுமொழிய பல சுழற்சிகள் எடுக்கின்றன. ஒரு சுமைப்படி ஏற்படும் போது, VOUT உடனேயே, (ΔILOAD • ESR) என்கிற தொகையில் பெயர்ச்சி அடைகிறது, இங்கு ESR என்பது வெளியீடு மின்தேக்கி COUT சமவலு தொடர் மின்தடுப்பு (effective series resistance) ஆகும். ΔILOAD மேலும், COUT மின்னேற்ற மற்றும் மின்னிறக்க துவங்கி, பின்னூட்டுப் பிழைக் குறிகையை உற்பத்தி செய்கிறது. சீர்ப்பியானது செயல்பட்டு VOUTஐ நிலைநிலைக்கு மதிப்பிக்ககு (steady-state value) திரும்பச் செய்கிறது. இந்த மின்மீட்பு நேரத்தில், VOUTஐ மேற்பாய்வு (overshoot அல்லது வளையலைவு (ringing) ஆகியவற்றிற்கு கண்காணிக்கலாம். நிலைமாறு கட்டுப்பாடு வளையக் கோட்பாடின் (switching control loop theory) விரிவான விளக்கத்திற்கு, பயனகக் குறிப்பு 76ஐக் காண்க.

இரண்டாம், இன்னும் தீவிரமான திரிவு பெரிய (>1μF) வழங்கல் புறவழி மின்தேக்கிகள் (supply bypass capacitors) உடைய சுமைகளில் நிலைமாற்றத்தின் போது ஏற்படுகிறது. மின்னிறங்கியப் புறவழி மின்தேக்கிகள் சமவலுவாக COUTஉடன் இணையிணைப்பாக உள்ளதால், VOUTஇல் திடீர் வீழ்ச்சி ஏற்படுகிறது. எந்த சீர்ப்பியும், சுமை நிலைமாற்றியின் மின்தடுப்பு குறைவாக இருக்கும் போது மற்றும் விரைவாக ஓட்டப்படும் போது இப்பிரச்சனையைத் தடுக்க இவ்வளவு மின்னோட்டத்தை அளிக்க முடிவதில்லை. இதற்கு ஒரே தீர்வு, நிலைமாற்றி ஓட்டலின் எழு நேரத்திற்கு வரம்புப்படுத்தல், ஆக, சுமை எழு நேரம் தோராயமாக (25 • CLOAD) அளவிற்கு வரம்புப்படுத்தப்படுகிறடு. எனவே, 3.3Vக்கு மின்னூட்ட்மாகும் ஒரு 10μF மின்தேக்கி 250μs எழு நேரத்தைத் தேவைப்பட்டு, மின்னூட்ட மின்னோட்டத்தை 130mA அளவிற்கு வரம்புப்படுத்தும்.

சுற்றுப்பலகை மனையமைவு சரிபார்ப்புப் பட்டியல் (PC Board Layout Checklist)
சுற்றுப்பலகையை மனையமைக்கும் போது, LTC3544Bஇன் சரியான இயக்கத்தை உறுதிப்படுத்த, கீழ்வரும் சரிபார்ப்புப் பட்டியல் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வுருப்படிகள் படமாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன:
(1)PGND மின்தடம், GNDA மின்தடம், SW மின்தடங்கள், PVIN மின்தடம் மற்றும் VCC மின்தடம் சிறிதாக, நேரடியாக மற்றும் அகலமாக இருக்க வேண்டும்.
(2)ஒவ்வொரு VFBx முள்ளும் நேரடியாக முறையான பின்னூட்டு மின்தடையங்களுக்குடன் நேரடியாக இணைக்கப்படுகின்றனவா? மின்தடைய வகுப்பிகள் வெளியீடு வடிப்பி மின்தேக்கிகளின் (+) தகடிற்கும் GNDA (ஒப்புமை நிலம்) என்பதற்கு இடையே இணைக்கப்பட வேண்டும். மின்சுற்று மின்தடங்களில் வீழ்ச்சி அடையும் அளவிற்கு பாகத்திலிருந்து அவ்வளவு தொலைவில் அமையப்பட்டால், திறன்கொள்ளப்பட்ட மின்சுற்றிலிருந்து மின்தடைய வகுப்பிகளுக்கு ஒரு கெல்வின் இணைப்பை (Kelvin connection) பரிசீலிக்கவும்.
(3)C8 மற்றும் C9 ஆகியவற்றை பாகத்திற்கு இயன்றளவு அருகாமையில் வைக்கவும்.
(4)(SWx) நிலைமாறு கணுக்களை VFBx கணுக்களிருந்து விலக்கி வைக்கவும்.
(5)உள்ளீடு மற்றும் வெளியீடு மின்தேக்கிகளின் நிலமிணைந்தத் தகடுகளை முடிந்தவரை அருகில் வைக்கவும்.
(6)கவசமுறா மின்தூண்டிகளுக்கு (unshielded inductors) இடையே மின்மாற்றிப் பிணைப்பை (transformer coupling) குறைக்கும் பொருட்டு, போதுமான இடைவெளி விடப்பட வேண்டும்.


வடிவமைப்பு உதாரணம்
ஒரு வடிவமைப்பு உதாரணமாக, LTC3544Bஐ மென்னிய மின்னணுக்கூறு மின்கல எடுத்துசெல்லத்தகு பயனகத்தைப் பரிசீலிக்கவும். மின்கலம் 2.8V இலிருந்து 4.2V நெடுக்கத்தில் VINஐ அளிக்கின்றது. 2.5Vஇல் உள்ள தேவைப்பாடு 250mA என்பதால், இவ்வேட்பிற்கு 300mA வெளியீடு தேவைப்படுகிறது.

இத்தடத்தில் தொடங்கி, முதலில், பெரும VINஇல் 35% குறுவலைவு மின்னோட்டத்திற்கான மின்தூண்டி மதிப்பைக் கணிக்கவும் (இந்த உதாரணத்தில் 100mA). சமன்பாடு கீழ்வருமாறுள்:
L4 = {2.5V/(2.25MHz•100mA)}{(1 - 2.5V/4.2V)} = 4.5μH
இம்மின்தூண்டிக்கு அருகாமையிலுள்ள செந்தர மதிப்பு 4.7μH ஆகும். ஒரு 4.7μF மின்தேக்கி போதுமான வெளியீடு மின்தேக்கி ஆகும். இன்னும் அதிக வெளியீடு மின்தேக்கி சுமை திரிநிலை மறுமொழியை (load transient response) மெலிப்புப்படுத்தும் (attenuate) , ஆனால் அமரல் நேரம் (settling time) அதிகரிக்கும். ஒரு மென்னிய மின்னணுக்கூறு மின்கலத்தின் மூல மின்மறுப்பு மிகவும் குறைவாக இருப்பதால், CIN = 4.7μF என்கிற மதிப்பு போதுமானதாக இருக்கும்.

பின்னூட்டு மின்தடையங்கள் வெளியீடு மின்னழுத்தத்தை நிரல்படுத்துகின்றன. இம்மின்தடையங்களில் உள்ள மின்னோட்டத்தைக் குறைத்தல் மிகவும் இலகுவானச் சுமைகளில் செயற்திறனை பெருமப்படுத்தும், எனினும், 200K என்கிற வரிசைக்கொண்ட மொத்தங்கள் செயற்திறனுக்கும் பின்னூட்டு முள்களிலுள்ள சுற்றுப்பலகைப் போலிய மின்தேக்கிகளின் (PCB parasitic capacitance) , தீய விளைவுகளுக்கு இடையே ஒரு நல்ல விட்டுக்கொடுப்பாக (compromise) விளங்கும். 0.8V பின்னூட்டு மின்னழுத்தத்துடன் 10μA தேர்ந்தெடுப்பது R7 = 80k என ஆக்குகிறது. அருகாமையிலுள்ள செந்தர 1% மின்தடையம் 76.8k ஆகும். இங்ஙனம்,
R8 = {(VOUT/0.8) - 1}•R7 = 163.2K
அருகாமையிலுள்ள செந்தர 1% மின்தடையம் 162k ஆகும். ஒரு விருப்பத்தக்க 20pF பின்னூட்டு மின்தேக்கி திரிநிலை மறுமொழியை மேம்படுத்தும். இதரத் தடங்களின் உறுப்பு மதிப்புகள் நிகரான முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

கீழுள்ளப் படங்கள் இந்த உதாரணத்தின் முழு இணைப்புப்படம், செயற்திறன் வளைவுகள் மற்றும் திரிநிலை மறுமொழி ஆகியவற்றைக் காண்பிக்கின்றன.

பொதிய விவரம்
குறிப்பு:
1)வரையல் JEDEC பொதியத் திட்டவரை MO-220 VARIATION (WEED-2) என்பதற்கு இணங்கும்.
2)வரையல் அளவுகோல்வாரியல்ல.
3)அனைத்து அளவைகளும் மில்லிமீட்டரில்.
4)அடியிலுள்ள வெளிப்படு நிரப்பிட (Exposed Pad) அளவைகள் எழுதக நீட்டலை (Mold Flash) உட்கொள்ளவில்லை. எழுதக நீட்டல் இருந்தால், எப்பக்கத்திலும் 0.15mmஐ மீறக்கூடாது.
5)வெளிப்படு நிரப்பிடம் சூட்டிணை முலாமிடப்பட (Solder Plated) வேண்டும்.
6)நிழலிட்டப் பகுதி வெறும் பொதியத்தின் மேலும் கீழும் முள் 1 இருப்பிடத்தின் மேற்கோள் ஆகும்.