என்பீரியன் குறைக்கடத்தி (Enpirion Semiconductor)
EN5395QI9A ஒத்தியங்கு இறக்க ஒருதிசை-ஒருதிசை மின்னழுத்த மாற்றி ஒருங்கிணைந்த மின்தூண்டியுடன்; 3-முள் மின்னழுத்த அடையாள (voltage ID - VID) வெளியீடு மின்னழுத்தத் தேர்வு

விவரம்
EN5395QI என்பது ஒரு சில்லடை மின்வழங்கி (Power-Supply on a Chip - PwrSoC) வகையான ஒருதிசை-ஒருதிசை மின்னோட்ட மாற்றி. இது குறிப்பாக நிகழ்கால மற்றும் எதிர்கால உயர் செயல்வலிமை, தாழ்திறன் செயலி, எண்குறிகைச்செயலி (DSPs), களநிரல்படு வாயிலணிகள் (FPGAs), குறிப்பயஞ்சில்லுகள் (ASICs), நினைவகப் பலகைகள், பரவல் மின்திறன் கட்டமைப்பு (distributed system architecture) முறைமைமட்டப் பயனகங்களில் துள்ளியமான மின்னழுத்தம் மற்றும் விரைவு திரிநிலை தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் மின்சுற்று உத்திகள், மிக உயர் நிலைமாறு அலைவெண், நூதன உயரடர் ஒருங்கிணைச்சுற்று, தனியுரிம மின்தூண்டி தொழில்நுட்பம் உயர்தர மிகவும் இடவடக்கமான தனிமையற்ற ஒருதிசை-ஒருதிசை மின்னழுத்த மாற்றத்தை (non-isolated DC-DC conversion) அளிக்கிறது. இந்தச் சீர்ப்பியை இயக்குவது வெறும் ஐந்தே வெளியுறுப்புகளைத் தேவைப்படுகிறது. இது சிறுமதிப்புக் கொண்டுள்ள உள்ளீடு மற்றும் வெளியீடு வனைம (ceramic) மின்தேக்கிள் மற்றும் ஒரு மென்துவக்க (soft-start) மின்தேக்கியையும் அடங்கும்.
என்பீரியனின் இந்தத் தீர்வால், சுற்றுப்பலகை வடிவமைப்பு, மனையமைவு மற்றும் தயாரிப்புத் தேவைகள் அனைத்தும் எளிதாகும். மேலும், ஒரு முழு மின்வழங்கல் தீர்விற்கான போட்டியிடும் வணிகர்களின் எண்ணிக்கையும் குறைவதால் ஒட்டுமொத்த முறைமைச் செலவும் குறையும்.

பயனகங்கள்
*பரப்பளவு கட்டுப்பாட்டுள்ளப் பயனகங்கள்
*இரைச்சல் உணர்மையானப் பயனகங்கள்
*2.5V, 3.3V அல்லது 5V மின்கிராதிகள் கொண்டுள்ள தாழ்திறன் பரவல் மின்வழங்கல் கட்டமைப்புகள் (low-power distributed power architecture)
*நிறுவனச் சேமிப்பகம்
*அகண்டலைவரிசை, கணிப்பிணையவியல், உள்ளகப்பரப்புப் பிணையம் (LAN), அகலப்பரப்புப் பிணையம் (WAN)
*எண்சந்தாத்தடம்(DSL), மேலமர்வுப் பெட்டிகள் (STBs), எண்காணொளிப் பதிவிகள் (DVRs), எண்தொலைக்காட்சி (DTV), தொழிலகத் தனிக்கணினி (industrial PC)

உத்தரவிடல் தகவல்
பாகம் எண் வெப்பச் செயல்வரம்பு பொதியம்
EN5395QI-T –40°C - 125°C 58-முள் QFN நாடாச்சுருள்
EN5395QI-E QFN மதிப்பாய்வுப் பலகை


அம்சங்கள்

*ஒருங்கிணைந்த மின்தூண்டி தொழில்நுட்பம் - ஒருங்கிணைக்கப்பட்ட மின்தூண்டி, மாழையுயிரகிகள் (MOSFETs), இயக்கி ஒரு 10 x 12 x 1.85mm பொதியத்தில்
*குறைந்த பாகங்களின் எண்ணிக்கை - ஐந்தே பன்னடுக்கு வனைம மின்தேக்கிகள் (MLCCs)
*30W தொடர் வெளி மின்திறன் (adjustable switching frequency)
*குறைவான வெளி மின்மறுப்பு 90nm கீழுள்ளத் தொழிநுட்பத்தில் உகமப்படுத்தப்பட்டது
*முதன்மை-அடிமை உள்ளமைவு (master-slave configuration) மூலமாக இணையிணைப்பாக செயல்படுத்தலாம்
*5MHz இயக்க அலைவெண்
*உயர்ந்த செயற்திறன் 93% வரை
*2.375 - 5.5V அகல உள்ளீடு நெடுக்கம்
*3-முள் மின்னழுத்த அடையாளம் (Voltage ID - VID) 7 பல்வேறு முன்நிரல்படு மின்னழுத்தங்களைத் தேர்ந்தெடுக்கலாம்
*வெளியீடு செயலாக்க (output enable) முள் மற்றும் நற்திறன் (power good) குறிகை
*நிரல்படு மென்துவக்க நேரம்
*மாற்றியமைக்கக்கூடிய மிகுமின்னோட்டக் காபந்து
*வெம்மை அணையல், குறுக்குச்சுற்று, மிகுமின்னழுத்தம், குறைமின்னழுத்தக் காபந்து
*இடர்ப்பொருட்குறைப்பிணக்கம்
*ஈரவுணர்திறன் மட்டம் 3 (MSL 3)

வழக்கமானப் பயனகம்


முள்ளமைவு


முள் விவரம்
முள் முள்ளின் பெயர் விவரம்
1-3 NC இணைப்பற்றது; இம்முள் எந்த வெளி மின்னழுத்தம், குறிகை அல்லது நிலத்திற்கோ இணைக்கப்படக் கூடாது. இம்முள் உள்ளகமாக இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இம்முள் சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும்.
4-5 NC(SW) இணைப்பற்றது; இம்முள் இரண்டு உள்ளக மாழையுயிரகிகளின் (internal MOSFETs) பொது வடிவாய்களுடன் (common drain) இணைந்துள்ளது. இம்முள் எந்த வெளி மின்னழுத்தம், குறிகை அல்லது நிலத்திற்கோ இணைக்கப்படக் கூடாது. இம்முள் உள்ளகமாக இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இம்முள் சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும். இதைக் கடைப்பிடிக்காவிடில் பாகத்தின் பிறழ்செயல் அல்லது சேதம் நேரிடும்
6-13 NC இணைப்பற்றது; இம்முள் எந்த வெளி மின்னழுத்தம், குறிகை அல்லது நிலத்திற்கோ இணைக்கப்படக் கூடாது. இம்முள் உள்ளகமாக இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இம்முள் சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும்.
14-20 VOUT சீராக்கப்பட்ட மின்னழுத்த மாற்றி வெளியீடு; இம்முள்களை சுமையுடன் இணைத்து வெளியீடு மின்தேக்கியை இம்முள்ளிற்கும் நிலத்திற்கும் இடையே வைக்கவும்
21-22 NC(SW) இணைப்பற்றது; இம்முள் இரண்டு உள்ளக மாழையுயிரகிகளின் (internal MOSFETs) பொது வடிவாய்களுடன் (common drain) இணைந்துள்ளது. இம்முள் எந்த வெளி மின்னழுத்தம், குறிகை அல்லது நிலத்திற்கோ இணைக்கப்படக் கூடாது. இம்முள் உள்ளகமாக இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இம்முள் சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும். இதைக் கடைப்பிடிக்காவிடில் பாகத்தின் பிறழ்செயல் அல்லது சேதம் நேரிடும்
23 NC இணைப்பற்றது; இம்முள் எந்த வெளி மின்னழுத்தம், குறிகை அல்லது நிலத்திற்கோ இணைக்கப்படக் கூடாது. இம்முள் உள்ளகமாக இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இம்முள் சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும்.
24-29 PGND வெளியீடு மின்திறன் நிலம்; மனையமைவு வழிமுறைகளைக் காண்க
30-35 PVIN உள்ளீடு மின்வழங்கல்; உள்ளீடு மின்வழங்கியுடன் இணைக்கவும்; ஒரு உள்ளீடு மின்தேக்கியுடன் PGNDற்கு பிணைநீக்கவும் (decouple)
36-37 NC இணைப்பற்றது; இம்முள் எந்த வெளி மின்னழுத்தம், குறிகை அல்லது நிலத்திற்கோ இணைக்கப்படக் கூடாது. இம்முள் உள்ளகமாக இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இம்முள் சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும்.
38 ROCP விருப்பத்தக்க மிகுமின்னோட்டக் காபந்து சரிகட்டல் முள் (over-current protection adjust pin). ஒரு மின்தடையை இம்முள்ளிற்கும் AGNDற்கும் (முள் 40) இடையே வைத்து மிகுமின்னோட்டத் திறப்புப்புள்ளியை (over-current trip point)சரிகட்டவும்
39 AVIN இயக்க மின்சுற்றுகளை செயல்படுத்துவதற்கான ஒப்புமை மின்னழுத்த உள்ளீடு, இதனை ஒரு உள்ளீடு மின்வழங்கியுடன் இணைக்கவும்
40 AGND இயக்க மின்சுற்றுகளின் ஒப்புமை நிலம்
41-42 NC இணைப்பற்றது; இம்முள் எந்த வெளி மின்னழுத்தம், குறிகை அல்லது நிலத்திற்கோ இணைக்கப்படக் கூடாது. இம்முள் உள்ளகமாக இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இம்முள் சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும்.
43 VS2 மின்னழுத்தத் தேர்வுத் தடம் 2 உள்ளீடு; அட்டவணை 1ஐக் காண்க
44 VS1 மின்னழுத்தத் தேர்வுத் தடம் 1 உள்ளீடு; அட்டவணை 1ஐக் காண்க
45 VS0 மின்னழுத்தத் தேர்வுத் தடம் 0 உள்ளீடு; அட்டவணை 1ஐக் காண்க
46 POK சரிதிறன் (Power OK) எனப்படுவது முறைமையின் மின்திறன் நிலைமையை சுட்டிக்காட்டும் ஒரு திறந்த வடிவாய் திரிதடையம் (open-drain transistor). VOUT -10% - 20% இயல்பு மதிப்பில் இருக்கும் போது சரிதிறன் உயர் ஏரணத்தில் நிற்கும்
47 VSENSE தொலை மின்னழுத்த உணர் முள்; இம்முள்ளை சுமை மின்னழுத்தத்தில் சீராக்கப்பட வேண்டிய இருப்பிடத்தில் இணைக்கவும்
48 SS மென்துவக்கக் கணு (soft-start node); இம்முள்ளிற்கும் AGNDற்கும் இடையே ஒரு மின்தேக்கியை இணைக்கவும்; இம்மின்தேக்கியின் மதிப்பு மென்துவக்க நேரத்தை நிரணயிக்கும்
49 EAIN விருப்பத்தக்க பிழை மிகைப்பி உள்ளீடு; கட்டுப்பாட்டு வளையத்தின் (control loop) தனிப்பயனாகத்தை அனுமதிக்கும்
50 EAOUT விருப்பத்தக்க பிழை மிகைப்பி வெளியீடு; கட்டுப்பாட்டு வளையத்தின் (control loop) தனிப்பயனாகத்தை அனுமதிக்கும்
51 COMP பிழை மிகைப்பிக்கு மின்வரும் இடையகத்தின் (buffer) வெளியீடு. இழப்பீட்டுப் பிணையத்தின் (compensation network) வெளியக மாற்றியமைத்தலுக்காக பயனாகிறது
52 ENABLE உள்ளீடு செயலாக்கம்; உயர் ஏரணம் அளிக்கப்பட்டால், வெளியீடு செயலாக்கப்பட்டு, மென்துவக்கம் (soft-start) தொடக்கப்படுகிறது; தாழ் ஏரணம் அளிக்கப்பட்டால், வெளியீடு செயலிழக்கப்படுகிறது
53 PWM துடிப்பகலப் பண்பேற்ற (PWM) உள்ளீடு/வெளியீடு; முதன்மை/அடிமை உள்ளமைவாக (master-slave configuration) பயனாகிறது; M/S முள் தாழ்வலியுறுத்தப்பட்டால், PWM ஒரு வாயில்வாய் ஓட்டு அலைவடிவத்தை (gate-drive waveform) வெளியிடும்; M/S முள் உயர்வலியுறுத்தப்பட்டால், PWM ஒரு முதன்மைச் சாதனத்திலிருந்து ஏற்கும் உள்ளீடாக மாறிவிடுகிறது. PWM முள் 3 அடிமைச் சாதனங்களை வரை ஓட்டும்
54 NC இணைப்பற்றது; இம்முள் எந்த வெளி மின்னழுத்தம், குறிகை அல்லது நிலத்திற்கோ இணைக்கப்படக் கூடாது. இம்முள் உள்ளகமாக இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இம்முள் சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும்.
55 M/S விருப்பத்தக்க முதன்மை/அடிமை முள்; தாழ்வலியுறுத்தல் முதன்மைப் பாங்கில் மின்னோட்டப் பகிர்வில் (current sharing) வைக்கும். PWM (முள்53) அப்போது PWM ஓட்டுக் குறிகையை வெளியிடும். உயர்வலியுறுத்தப்பட்டால், சாதனத்தை அடிமைப் பாங்கில் வைத்து PWM முள்ளை ஒரு முதன்மைச் சாதனத்திலிருந்து ஏற்கும் உள்ளீடாக மாற்றும்
56-58 NC இணைப்பற்றது; இம்முள் எந்த வெளி மின்னழுத்தம், குறிகை அல்லது நிலத்திற்கோ இணைக்கப்படக் கூடாது. இம்முள் உள்ளகமாக இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இம்முள் சுற்றுப்பலகையுடன் சூட்டிணைக்கப்பட வேண்டும்.


செயற்கூற்றுப்படம்

அறுதிப் பெரும செயல்வரம்புகள்
எச்சரிக்கை: அறுதிப் பெரும செயல்வரம்புகள் எனப்படுபவை வளைப்பு செயல்வரம்புகள் மட்டும் ஆனவை. செயல்கூறு இயக்கம் பரிந்துரைக்கப்பட்டச் சூழ்நிலைகளுக்கு புறமாக உட்கிடையானதல்ல. அறுதிப் பெரும செயல்வரம்புகளில் நீண்ட நேரம் உட்படுத்தல் சாதனத்தின் நம்பகத்தை பாதிக்கும்.
பண்பளவு குறியீடு சிறுமம் பெருமம் அலகு
உள்ளீடு வழங்கல் மின்னழுத்தம் VIN -0.5 7.0 V
ENABLE, VSENSE, VS0 - VS2 ஆகிய முள்களின் மின்னழுத்தம்   -0.5 VIN V
EAIN, EAOUT, COMP ஆகிய முள்களின் மின்னழுத்தம்   -0.5 2.5 V
SS, PWM ஆகிய முள்களின் மின்னழுத்தம்   -0.5 3.0 V
POK ஆகிய முள்ளின் மின்னழுத்தம்   -0.5 VIN + 0.3 V
வைப்பு வெப்ப நெடுக்கம் VSTG -65 150 °C
மறுபாய்வு வெப்பம், 10 நொடி, ஈரவுணர்திறன் (MSL) மட்டம் 3, JEDEC J-STD-020A VSTG   260 °C
நிலைமின்னிறக்கம் (ESD), மனிதவுடல் மாதிரி அடிப்படையில் VSTG 2000   V


மின்னியல் செயல்வரம்புகள்
# குறிப்பிடப்பட்ட விவரக்கூற்றுகள் முழு வெம்மை வரம்பில் பொறுந்தும், மற்றவை TA=25C, VIN=12V, VBOOST=17V நிபந்தனையில், மாறாக குறிப்பிடவில்லையெனில் பொறுந்தும்
பண்பளவு சூழ்நிலை சிறுமம் வழக்கம் பெருமம் அலகு
சிறுமம் இயக்க மின்னழுத்தம், VIN1  #   3.4 3.7 V
சிறுமம் இயக்க மின்னழுத்தம், VIN2 VIN1=12V#   2.5 3.0 V
VIN1 அமைதிய மின்னோட்டம் நிலைமாற்றம் இல்லை    4.3 5.2 mA
VIN2 அமைதிய மின்னோட்டம் நிலைமாற்றம் இல்லை    320 500 µA
அணையல் மின்னோட்டம் (VIN1 + VIN2) V/SHDN=0.3V    0.1 2 µA
பின்னூட்டு (FB) மின்னழுத்தம்    0.790 0.800 0.814 V
 # 0.784   0.816 V
பின்னூட்டு முள் (FB pin) சாருகை மின்னழுத்தம் (குறிப்பு 3) VFB=0.800V, VC=0.400V #   50 300 nA
பின்னூட்டு மின்னழுத்தம் (FB Voltage) மின்தொடர்ச் சீர்ப்பாடு 5V < VIN <40V     0.01   %/V
பிழை மிகைப்பி குறுக்குக்கடத்தம்       300   µS
பிழை மிகைப்பி மின்னழுத்த மிகைப்பு       600   V/V
VCஇலிருந்து நிலைமாற்றி (SW) மின்னழுத்த மிகைப்பு       2.5   A/V
நிலைமாறு அலைவெண் RT33.2K # 0.92 1 1.06 MHz
நிலைமாறு கட்டம் RT33.2K   150 180 210 பாகை
பெரும பணிசுழற்சி (குறிப்பு 4) RT33.2K# 84 90   %
RT7.50K   80   %
RT169K   98   %
பின்மடிப்பு அலைவெண் RT=33.2K, VFB=0     120   KHz
நிலைமாற்றி மின்னோட்ட வரம்பு (குறிப்பு 5) பணிசுழற்சி=15% # 2 2.6 3.2 A
நிலைமாற்றி VCESAT ISW=1.5A     300   mV
நிலைமாற்றி கசிவு மின்னோட்டம்       0.001 1 µ A
சிறும ஊக்க மின்னழுத்தம்       1.7 2.5 V
ஊக்க முள் (boost pin) மின்னோட்டம் ISW=1.5A     35 50 mA
தடங்காணல்/மென்துவக்கம் (TRACK/SS pin) முள் மின்னோட்டம் VTRACK/SS=0V   0.8 1.2 2.2 V
நற்திறன் கருவுணர் பெயர்ச்சி (PG Threshold offset) VFB RISING=0V   56 75 110 mV
நற்திறன் (PG) வெளியீடு தாழ்மட்டம் VFB=0.6V, IPG=250µ A     0.13 0.4 V
நற்திறன் முள் (PG o/p) கசிவு VPG=2V     0.01 1 µA
அணையல் (/SHDN) கருவுணர் மின்னழுத்தம் (குறிப்பு 6)    2.53 2.63 2.73 V
அணையல் (/SHDN) உள்ளீடு மின்னனோட்டம் V/SHDN=கருவுணருக்கு 60mV மேல்  6 8 10 µA
அணையல் (/SHDN) கருவுணர் மின்னனோட்டத் தயக்கம்    5.5 7.5 7.5 µA
ஒத்தியக்கல் (SYNC) கருவுணர் மின்னழுத்தம்    1 1.25 1.5 V
ஒத்தியக்கல் (SYNC) உள்ளீடு அலைவெண்    0.25   2.5 V


செயல்வலிமை சிறப்பியல்புகள்:



செயற்கூறு விவரம்:

EN5395QI எனப்படுவது ஒரு ஒத்தியங்கு முள்நிரல்படு (pin-programmed) திறன் மாழையுயிரகிகள் (power MOSFETs) மற்றும் மின்தூண்டி ஒருங்கிணைந்த மின்வழங்கி. இதனில் மின்னழுத்த நெடுக்கம் 2.375-5.5V. வெளியீட்டை முன்நிறுவு மதிப்புகளுக்கு 3 மின்னழுத்தத் தேர்வு முள்கள் மூலம் நிறுவுப்படுத்தலாம். பின்னூட்டு கட்டுப்பாட்டு வளையம் (feedback control loop) ஒரு வகை-III மின்னழுத்தப் பாங்கு வகை, மேலும் தாழிரைச்சல் துடிப்பகலப் பண்பேற்றத் தொழில்நுட்பத்தை (low-noise PWM technology) பயன்படுத்துகிறது. இந்த மின்னழுத்த மாற்றி மூலம் 9A மின்னோட்டம் வரை இழுக்கலாம். 5MHz இயக்க அலைவெண்ணால் சிறிய உறுப்புகள் மட்டுமே தேவைப்படுகிறது.
இம்மின்வழங்கி கீழுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது:
*நிரல்படு மிகுமின்னோட்டக் காபந்து (சில்லை மிகுசுமை மின்னோடங்களிலிருந்து காக்கிறது)
*தயக்கம் கொண்டுள்ள வெம்மை அணையல்
*மிகுமின்னழுத்தக் காபந்து
*தாழ்மின்னழுத்தப் பூட்டணையல் சுற்று உள்ளீடு மின்னழுத்தம் 2.2Vக்குக் கீழ் குறையும் போது மின்னழுத்த மாற்றியை செயலிழக்கச் செய்யும்.
மேலும் கீழுள்ள அம்சங்களை அடங்கும்:
*மென்துவக்க மின்சுற்று (soft-start circuit) திறன்தொடக்கத்தின் போது உட்பாய்வு மின்னோட்டத்தை வரம்புப்படுத்தும்.
*நற்திறன் மின்சுற்று (power good circuit) வெளியீடு மின்னழுத்தம் 90%-120% நிரல்படு நெடுக்கத்தில் இருக்கும் நிலைமையைக் காட்டும்.

வெளியீடு மின்னழுத்த நிரல்பாடு:
EN5395QI வெளியீடு மின்னழுத்தத்தை 3-முள் மின்னழுத்த அடையாளம் (voltage ID - VID) மூலம் நிரல்படுத்தலாம். மூன்று இரும VID முள்கள் ஒரு பயனரை ஏழு முன்நிறுவு மின்னழுத்தங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கும். VOUTஐ நிரல்படுத்த முறையான VID முள் நிறுவல்களுக்கு அட்டவணையைக் காண்க:
VS2* VS2* VS2* வெளியீடு மின்னழுத்தம்
0 0 0 3.3V
0 0 1 2.5V
0 1 0 1.8V
0 1 1 1.5V
1 0 0 1.25V
1 0 1 1.2V
1 1 0 0.8V
1 1 1 பதிவுற்று


உள்ளீடு மின்தேக்கியின் தேர்வு
EN5395QI 40-80µF மதிப்புள்ள உள்ளீடு மின்தேக்கத்தைத் தேவைப்படுகிறது. X5R அல்லது X7R மின்கடத்தாக்கள் கொண்டுள்ள தாழ்ந்த தொடர்மின்தடுப்பு மின்தேக்கிகள் தேவைப்படுகின்றன. Y5V அல்லது சமவலுவான மின்கடத்தாக்களை பயன்படுத்தக்கூடாது. இச்சேர்ப்பாடுகளில் மின்தேக்கம் அலைவெண், வெப்பம் அல்லது சாருகை மின்னழுத்த உயர்வால் இழக்கப்படுகிறது.
சில பயனகங்களில் தாழ் மதிப்பு மின்தேக்கிகள் உயர் மதிப்பு மின்தேக்கிகளுடன் இணையாக உயரலைவெண் பிணைநீக்கத்திற்காக தேவைப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட உள்ளீடு மின்தேக்கிக்ள்:
விவரம் தயாரிப்பாளர் பாகம் எண்
22uF, 10V, X7R, 1210 Murata, Taiyo Yuden GRM32ER71A226KE20L, LMK325BJ226KM-T
47uF, 10V, X5R, 1210 Murata, Taiyo Yuden GRM32ER71A476KE20L, LMK325BJ476KM-T


வெளியீடு மின்தேக்கியின் தேர்வு
EN5395QI 100µF மதிப்புள்ள வெளியீடு மின்தேக்கத்தைத் பயன்படுத்தும் வகையில் உகப்புப்படுத்தப்பட்டுள்ளது. X5R அல்லது X7R மின்கடத்தாச் சேர்ப்பாடுகள் கொண்டுள்ள தாழ் தொடர்மின்தடுப்பு மின்தேக்கிகள் தேவைப்படுகின்றன.
பரிந்துரைக்கப்பட்ட உள்ளீடு மின்தேக்கிக்ள்:
விவரம் தயாரிப்பாளர் பாகம் எண்
10uF, 6.3V, X7R, 1206 Murata, Taiyo Yuden GRM319R60J106KE19D, LMK316BJ106KD-T
22uF, 6.3V, X5R, 1206 Murata, Taiyo Yuden GRM31CR60J226KE19L, LMK316BJ226KL-T
47uF, 6.3V, X5R, 1206 Murata, Taiyo Yuden GRM31CR71A476ME19L, LMK316BJ476KL-T

வெளியீடு குறுவலைவு திரட்டு வெளியீடு மின்தேக்க மின்மறுப்பால் உறுதிப்படுத்தப்படுகிறது. Z-ஆல் வகைக்குறிக்கப்படும் வெளியீடு மின்மறுப்பு சமவலு தொடர்மின்தடுப்பு (ESR) மற்றும் சமவலு தொடர்மின்தூண்டல் (ESL) ஆகிவற்றால் கொண்டுள்ளது.
Z = ESR + ESL
இணையிணைப்பாக இடப்படும் மின்மறுப்பை குறைத்து குறைந்த குறுவலைவை விளைவிக்கிறது.
1/Ztotal = Z1 + Z2 + ... + Zn
வழக்கமான குறுவலைவும் வெளியீடு மின்தேக்க அமைப்பும் கீழ்ப்படி தரப்பட்டுள்ளன
வெளியீடு மின்தேக்கி அமைப்பு வழக்கமான குறுவலைவு
2 x 47uF 20
5 x 22 uF 12


செயலாக்கு இயக்கம் (Enable Operation)
ENABLE முள் அணையல் அல்லது வழக்கமான இயக்கத்தில் இடுவதிற்கு வழிவகுக்கும். ஏரண தாழ்மட்டம் (logic low level) மாற்றியைச் செயலிழக்கச் செய்யும். ஏரண உயர்மட்டும் சாதனத்தை வழக்கமான இயக்கத்தில் செயலாக்கும். ENABLE முள்ளை உயர்மட்டத்தில் வலியுறுத்தும் போது சாதனம் சாதனம் வழக்கமான மென்துவக்கத்தை அனுபவிக்கும்.

மென்துவக்க இயக்கம் (Softstart Operation)
மென்துவக்கம் என்பது சாதனம் செயலாக்கப்படும் போது உட்பாய்வு மின்னோட்டத்தைக் குறைக்க ஒரு வழிமுறை ஆகும். வெளியீடு எழுநேரம் ஒரு மின்தேக்க மதிப்பின் தேர்வால் கட்டுப்படுத்தப்படுகிறது. இம்மின் தேக்கி SS முள் (முள் 48) மற்றும் AGND முள் (முள் 40) ஆகிவற்றிற்கு இடையே வைக்கப்படுகிறது.
எழுநேரம் TR = C55*80KΩ
மாற்றியின் துவக்கத்தின் போது, பிழை மிகைப்பியின் மேற்கோள் மின்னழுத்தம் மெதுவாக (வழக்கமான 10uA மதிப்புள்ள)உள்ளக மின்னோட்ட மூலத்தால் இறுதி மட்டம் வரை உயர்த்தப்படுகிறது. மென்துவக்க எழுநேரம் வழக்கமாக 1ms - 3ms நெடுக்கத்தில் உள்ளது. மென்துவக்க மின்தேக்கியின் மதிப்புகள் வழக்கமாக 15nF - 30nF நெடுக்கத்தில் உள்ளன.

சரிதிறன் இயக்கம் (Power OK Operation)
சரிதிறன் (POK) குறிகை என்பது மாற்றியிடம் வரும் ஒரு திறந்த வடிவாய் (open drain) குறிகையாகும். வெளியீடு மின்னழுத்தம் நிரல்படு மின்னழுத்தத்தின் 90% - 120% மதிப்பு நெடுக்கத்தில் உள்ளவரை ஏரண உயர்மட்டத்தில் இருக்கும், வெளியீடு மின்னழுத்தம் இந்த நெடுக்கத்தை விட்டு விலகும் போது, இந்நெடுக்கத்திற்குள் திரும்ப வரும் வரை POK குறிகை ஏரண தாழ்மட்டத்தில் இருக்கும். மிகுமின்னழுத்த சூழ்நிலையில், POK குறிகை வெளியீடு மின்னழுத்தம் நிரல்படு மதிப்பின் 95% வரும் வரை ஏரண தாழ் மட்டத்தில் இருக்கும்.
உள்ளக POK புலவிளைவி (FET) 4mA வரை பொறுத்துக்கும். மேலிழு மின்தடையம் மின்னோட்டம் இம்மதிப்பை மீறாமல் இருக்க தேர்வு செயப்பட வேண்டும்.

மிகுமின்னோட்டக் காபந்து (Overcurrent Protection)
மிகுமின்னோட்டம் ஏற்பட்டால், VOUT கீழிழுக்கப்படுகிறது. இச்சூழ்நிலை 1.2ms வரை நீடிக்கப்பட்டு, திரும்ப ஒரு மென்துவக்கம் ஏற்படுத்தப்படுகிறது. மிகுமின்னோட்டம் நீடித்தால், இச்சுழற்சி மறுசெயலிடப்படுகிறது.
மிகுமின்னோட்டக் காபந்து திறப்புப்புள்ளி (OCP trip point) பெரும சுமை மதிப்பின் 150%இல் நிறுவமைக்கப்படுகிறது. OCP திறப்புப்புள்ளி மதிப்பை பெரும சுமையின் 200% வரை ஒரு 5K மின்தடையத்தை ROCP முள் (முள் 38) மற்றும் AGND (முள் 40) இடையில் இணைப்பது மூலம் உயர்த்தலாம். இவ்விழைவு, சில களநிரல்படு வாயிலணிகள் (FPGAs) அல்லது குறிப்பயஞ்சில்லுகள் (ASICs) ஆகியவற்றில் உள்ள மின்தேக்கச் சுமைகளின் நோக்கத்தில் அமைந்துள்ளது.

மிகுமின்னழுத்தக் காபந்து (Overvoltage Protection)
வெளியீடு மின்னழுத்தம் நிரல்படு மின்னழுத்தத்தை விட 120%க்கு மேல் மீறும்போது, துடிப்பகல இயக்கம் நின்று, கீழ் எதிர்மாழையுயிரகி நிகழாகும் மற்றும் POK குறிகை கீழே செல்லும். வெளியீடு மின்னழுத்தம் நிரல்படு மின்னழுத்தத்தின் 95%க்குக் கீழ் செல்லும்போது, இயல்பான துடிப்பகல இயக்கம் தொடரும்.

வெம்மை மிகுசுமை காபந்து (Thermal Overload Protection)
சந்தி வெப்பம் 150ºCஐ மீறினால், வெம்மை அணையல் சாதனத்தை செயலிழக்கச் செய்யும். சந்தி வெப்பம் தோராயமாக 20ºC குறைந்ததும் மாற்றி இயல்பான மென்துவக்கத்துடன் மறுதுவங்கும்.

உள்ளீடு குறைமின்னழுத்தப் பூட்டணையல் (Input Undervoltage Lockout)
உள்ளீடு ஒரு குறிப்பிட்ட நெடுக்கத்திற்குக் கீழ் சென்றால், மாற்றி துவங்காமல் இருக்க உறுதிசெய்யும் ஒரு சுற்றமைப்பு வழங்கப்பட்டுள்ளது, உயர் இரைச்சலின் எதிர்ப்பாற்றல் மற்றும் போலி குதிரையிடலின் தடுப்பு ஆகியவற்றின் பொருட்டு, மின்தயக்கம் (hysteris), உள்ளீடு மின்தடுமாற்றநீக்கம் (de-glitch) மற்றும் வெளியீடு முந்து விளிம்பு மறைப்பு (output leading edge blanking) ஆகிய மின்சுற்றுகள் உட்படுத்தப்பட்டுள்ளன,

இழப்பீடு (Compensation)
EN5395 வகை-3 இழப்பீடு பிணையத்தின் பயன்பாடு மூலம் உள்ளகமாக இழப்பீடு செய்யப்பட்டு, 100μF வெளியீடு மின்தேக்கியின் பயன்பாடிற்கும் மற்றும் பெரும்பாலுமானப் பயனகங்களில் நல்ல வளைய மிகைப்பு மற்றும் திரிநிலை மறுமொழி தருமாறு உகப்புப்படுத்தப்பட்டுள்ளது. (பரிந்துரைக்கப்பட்ட மின் தேக்கிவகைகளுக்கு மின்தேக்கி தேர்வு பிரிவைக் காண்க.) மின்னழுத்தப் பாங்கு இலகுவான சுமைகளில் உயர்ந்த இரைச்சல் எதிர்ப்பாற்றலை அளிக்கிறது. சில சூழ்நிலைகளில், இழப்பீடின் மாற்றமைப்பு தேவைப்படலாம். EN5395QI உள்ளக இழப்பீடு பிணையத்திற்கு அணுகலை அளிக்கிறது. மேலும் தகவலுக்கு என்பீரியன் பொறியியல் ஆதரவு திணைக்களத்தை நாடவும்.

இணைச்சாதன இயக்கம் (Parallel Device Operation)
9A செயல்வரம்பிற்கு மேலனான சுமையை திறனளிப்பதற்கு, இரண்டிலிருந்து நான்கு சாதனங்கள் வரை இணையிணைக்கப்பட்டு 36A மின்னோட்டம் ஒரே சுமைக்கு வழங்கலாம். ஒரு சாதனத்திற்கு மேலான இணையிணைப்பு, முதன்மைச் சாதனத்தின் (Master Device) தேர்வு மற்றும் M/S முள்ளை AGNDக்கு கட்டுவது ஆகியவை மூலம் சாதிக்கப்படுகிறது. அனைத்து அடிமைச் சாதங்களில், M/S முள் AVINஉடன் கட்டப்படுகிறது. முதன்மைச் சாதனத்தின் PWM முள் அடிமைச் சாதனங்களுக்குக் கட்டப்படுகிறது. PWM என்பது ஒரு 5MHz குறிகை என்பதால், தகுந்தவாறு திசையிடப்பட வேண்டும் (கீழுள்ளப் படத்தைக் காண்க).

(1)அனைத்து முதன்மை மற்றும் அடிமைச் சாதனங்கள் உள்ளீடு, வெளியீடு மற்றும் மென் துவக்க மின்தேக்கிகளின் நிகரான இடவமைவைக் கொண்டிருக்க வேண்டும்.
(2)அனைத்து முதன்மை மற்றும் அடிமைச் சாதனங்கள் தங்கள் ENABLE முள்கள் ஒன்றாகக் கட்டிருப்பதாகவும், அனைத்துச் சாதனங்கள் ஒரே நேரத்தில் துவங்குவதை உறுதிசெய்ய, இவை உடனிகழ்வாக 10us அல்லது குறைவான வேக எழுச்சி விளிம்புயுடன் இயக்கப்பட வேண்டும். துவக்கச் சமமின்மை முதல் சாதனத்தில் மிகுமின்னோட்ட நிலையை (OCP condition) ஏற்படுத்திவிட்டு துவங்கும்.
(3)பலகையில் ஏதேனும் இரண்டு சாதனங்களின் VOUT முள்களுக்கு இடையேயான பெருமமான மின்தட மின்தடுப்பு (trace resistance) 10mΩக்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.
(4)பலகையில் ஏதேனும் இரண்டு சாதனங்களின் PVIN முள்களுக்கு இடையேயான பெருமமான வேறுபாடு 50mVக்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.

மனையமைவு பரிந்துரைகள் (Layout Recommendations)
பரிந்துரை 1: உள்ளீடு மற்றும் வெளியீடு மின்னோட்ட வளையங்களிலிருந்து மின்காந்த இடையூற்றினைக் குறைக்க உள்ளீடு மற்றும் வெளியீடு மின்தேக்கிகள் EN5395QI பொதியத்திற்கு அருகாமையில் வைக்கப்பட வேண்டும். இது உள்ளீடு மற்றும் வெளியீடு மாறுதிசை மின்னோட்ட வளையங்களின் இயற்பியல் பரப்பளவைக் குறைக்கிறது.
பரிந்துரை 2: உள்ளீடு/வெளியீடு மின்தேக்கி நிலத்தளத்தில் பொதுவான இணைப்பிடத்திற்கு சற்றுத் தாண்டி ஒரு பிளவு ஒன்றை அமைத்திடவும். (மனையமவு படத்தைக் காண்க.)
பரிந்துரை 3: உள்ளீடு மற்றும் வெளியீடு மின்தேக்கிகளை முறைமை நிலத்துடன் இணைக்கும் பல சிறிய (0.25mm) வழிமங்களை அமைத்திடவும். (மனையமவு படத்தைக் காண்க.)
பரிந்துரை 4: ஒரு பெரிய வெம்மை நிரப்பிடம் பல சிறிய வழிமங்களுடன் முறைமை நிலத்துடன் இணைக்கப்பட வேண்டும். வழிமங்களின் விட்டம் 0.3mmக்குக் குறைவாக இருக்கக் கூடாது. இது மாற்றிக்கு ஒரு அமைதியான ஒப்புமை நிலத்தை அளிக்கிறது மற்றும் மாற்றிலிருந்து வெப்பத்தை விரயம் செய்யும் பாதையை அளிக்கிறது.
பரிந்துரை 5: பரிந்துரை 3 மற்றும் 4 ஆகிவற்றில் கூறப்பட்ட முறைமை நிலத்தளம் வெளிப்பரப்புத் தளத்திற்கு உடன் அடியில் இருத்தல் வேண்டும். இந்நிலத்தளம் தொடர்ந்ததாகவும் மாற்றி, அதிக மாறுதிசை மின்னோட்டத்தை சுமக்கும் உள்ளீடு மற்றும் வெளியீடு மின்தேக்கிகள ஆகியவற்றடியில் தடங்கலற்றதாக அமைந்திருக்க வேண்டும்.
பரிந்துரை 6: ஏதேனும் நிலைமாறு மாற்றியைப் போல், உணர்மையானக் குறிகைகள் அல்லது கட்டுப்பாட்டுத் தடங்களை மாற்றியின் பொதியத்திற்கு அடியில் நடக்கூடாது.

இழுதுச் சட்டம் அடிப்படையான கட்டகங்களுக்கான வடிவமைப்புப் பரிசீலனைகள்

பொதியத்தின் அடியில் உள்ள வெளிப்படு மாழை
இழுதுச் சட்டங்கள் வெம்மைச் செயல்வலிமையில் பல நிறைகளை அளிக்கிறது- குறைந்த இழுது மின்தடுப்பு மற்றும் ஒட்டுமொத்தத் திட்டவரை. ஆனால் இவைகளுக்கு சில சிறப்பானப் பரிசீலனைகள் தேவைப்படுகின்றன.
ஒன்றுக்கூட்டல் செய்முறையில், இழுதுச்சட்டக் கட்டுமானம் பொறிமுறைத் தாங்கலுக்கு சில இழுதுச்சட்ட முனைநெம்புகளில் (lead-frame cantilver) மின்கம்பிப் பிணைகள் (wire-bond) அல்லது உள்ளகச் செயலறுப்புகள் (internal passives) சேர்க்கப்படும் புள்ளிகள் வெளிப்படுவதாக இருக்க வேண்டும். இது பொதியத்திற்கு அடியில் சிறிய நிரப்பிடங்கள் வெளிப்படுவதை விளைவிக்கின்றது.
பெரிய வெம்மை நிரப்பிடம் மற்றும் பரிதி நிரப்பிடங்கள் (perimeter pads) மட்டும் சுற்றுப்பலகையுடன் பொறிமுறையாக அல்லது மின்னியலாக இணைந்திருக்க வேண்டும். EN5395QIக்கு அடியில் உள்ள சுற்றுப்பலகையின் மேலடுக்கு பெரிய வெம்மை நிரப்பிடத்தைத் தவிற்று எந்த மாழையும் இருக்கக்கூடாது. கீழுள்ளப் படத்தில் "நிழலிட்ட பகுதி" மாழை (மின்தடங்கள், வழிமங்கள், தளங்கள்) அகற்றப்பட்டப் பகுதியை வகைக்குறிக்கின்றது.

கீழுள்ளப் படம் பரிந்துரைக்கப்பட்ட சுற்றுப்பலகை அமர்வகுதியைக் காண்பிக்கிறது.

கீழுள்ளப் படம் பொதியத்தின் அளவைகளைக் காண்பிக்கிறது.

A0 10.40±0.1
B0 12.40±0.1
K0 2.20±0.1
F0 11.50±0.1
P1 16.00±0.1
W 24.00±0.3

(I) பற்சகடுத் துளை மையக்கோடிலிருந்து அடைப்பி மையக்கோடு வரை அளக்கப்படுகிறது.
(II) 10 பற்சகடுத் துளைகளின் ஒட்டுமொத்தப் பொறுதி ±0.2D ஆகும்.
(III) பற்சகடுத் துளை மையக்கோடிலிருந்து அடைப்பி மையக்கோடு வரை அளக்கப்படுகிறது.
(IV) பிற மூலதனங்கள் கிடைக்கின்றன.
(V) வடிவ நாடாவின் (form tape) வழக்கமானப் பரப்பு மின்தடைமை (surface resistivity - SR) : 105 - 1011 Ω/சதுரம் ஆகும்.
(VI) மாறாகக் குறிப்பிடவில்லையெனில், அனைத்து அளவைகளும் mmகளில்.